For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 உணவுகளை 'சண்டே' அன்று சாப்பிடுவது உங்களுக்கு கடவுளின் சாபத்தை பெற்றுத்தரும் தெரியுமா?

பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கும் சூரியபகவான் ஞாயிற்றுகிழமையில் சில உணவுகளை சாப்பிடுபவர்கள் மீது தன் கோபப்பார்வையை காட்டுவார் என்று புராணங்கள் கூறுகிறது.

|

வாரம் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் மிகவும் முக்கியமான நாளாகும். அலுவலகம் மற்றும் வெளிப்புற உலகத்தின் தொந்தரவுகளில் இருந்து தப்பித்து தனக்கான வாழ்க்கையை வாழ இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்தது இந்த ஞாயிற்றுக்கிழமைதான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஒருநாள் விடுதலை கூட கிடைப்பதில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. ஞாயிற்றுக்கிழமையின் முக்கியமான சிறப்பே தாங்கள் விரும்பும் சாப்பாட்டை அன்று ஆசைதீர சாப்பிடுவதுதான். ஆனால் சில உணவுகளை ஞாயிற்றுக்கிழமையன்று சாப்பிடுவது உங்களுக்கு சூரியபகவானின் சாபத்தை பெற்றுத்தரும். உண்மைதான், பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கும் சூரியபகவான் ஞாயிற்றுகிழமையில் சில உணவுகளை சாப்பிடுபவர்கள் மீது தன் கோபப்பார்வையை காட்டுவார் என்று புராணங்கள் கூறுகிறது.

never eat these foods on sunday

ஏனெனில் ஞாயிற்றுக்கிழமைதான் சூரியபகவானை வழிபட உகந்த நாளாகும். சூரியபகவான் மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் இந்த உணவுகள் சாப்பிடுவது கோபத்தை உண்டாக்கும், ஏனெனில் இது புனிதமற்ற செயல் என புராணங்கள் கூறுகிறது. சூரியபகவானை கோபப்படுத்தும் உணவுகள் எது அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரியபகவான்

சூரியபகவான்

அனைத்து உயிரனங்களின் உயிர்சக்திக்கும் ஆதாரமாக இருக்கும் சூரியபகவான் நவகிரகங்களில் இருக்கும் முக்கியமான கடவுள் ஆவார். ஏழு குதிரைகளால் ஆன ரதத்தில் சூரியபகவான் வருவார் என புராணங்கள் கூறுகிறது. இந்த ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு நிறத்தையும், மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரத்தையும் குறிக்கிறது.

சூரியனின் சுபாவம்

சூரியனின் சுபாவம்

அனைவரும் அறிவோம் சூரியன் வறண்ட தன்மையுடையவர் என்று, ஆனால் சூரியன் இல்லாமல் எந்தவொரு உயிரும் வளர்ச்சியடைய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்துதான் உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியும் இருக்கும். சூரியபகவான் நினைத்தால் ஒருவருக்கு சக்தி, ஆற்றல், வளர்ச்சி, செல்வம், தைரியம் என அனைத்தையும் வழங்குவார். ஞாயிற்றுக்கிழமையில் சூரியபகவானை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். அதேபோல சில பொருட்களை ஞாயிற்றுக்கிழமையில் உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்கவும்.

சிவப்பு பருப்புகள்

சிவப்பு பருப்புகள்

மைசூர் பருப்பு எனப்படும் சிவப்பு பருப்பில் அதிகளவு புரோட்டின் உள்ளது, இதில் உள்ள புரோட்டின் அளவு இறைச்சியில் இருப்பதாய் விட அதிகமாகும். ஆனால் இதனை ஒருபோதும் கடவுளுக்கு படைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

MOST READ: பிணத்தை பார்த்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா?

சிவப்பு கீரைகள்

சிவப்பு கீரைகள்

ஞாயிற்றுக்கிழமையில் சூரியபகவானுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிவப்பு கீரைகளை படைப்பது புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது. வைஷ்ணவத்தில் இந்த சிறிய செடிகள் கலக்கப்பட்ட கலவைகள் மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

பூண்டு

பூண்டு

உணவில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் என்றால் அது பூண்டுதான். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இந்த பூண்டை ஞாயிற்றுக்கிழமையில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. புராணங்களின் படி பூண்டானது இறந்தவர்களின் வியர்வை என்று அழைக்கப்படுகிறது.

மீன்

மீன்

ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது மீன் ஆகும். சுவை மட்டுமின்றி மீனில் அதிகளவு சத்துக்களும் உள்ளது. ஆனால் இதனை ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

வெங்காயம்

வெங்காயம்

கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது வெங்காயம்தான். ஆனால் இதனை ஞாயிற்றுக்கிழமையில் சாப்பிடுவதோ, சூரியபகவானுக்கு படைப்பதோ பாவமான செயல் என்று கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

இந்த ஐந்து பொருட்களை ஞாயிற்றுக்கிழமையில் சாப்பிடுவது பாவமென கூற புராணத்தில் சில காரணங்கள் உள்ளது. சமீப காலங்களில் பசுக்களை வதைப்பது, சாப்பிடுவது போன்றவை பாவமான செயல் என கூறப்படுகிறது, ஆனால் புராணகாலங்களில் இது மிகவும் சாதாரணமான ஒன்றாக கருதப்பட்டது என்பதுதான் உண்மை.

MOST READ: பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா? இங்க கிளிக் பண்ணுங்க

கோமத் யாஜ்னா

கோமத் யாஜ்னா

இந்து மத புராணங்களின் படி கோமத் யாஜ்னா என்பது அந்த காலத்தில் இருந்த முக்கியமான சடங்காக இருந்தது. இந்த யாகத்தில் ஒரு பசுமாட்டை தியாகம் செய்வது அதனை செய்பவர்களுக்கு ஊக்கத்தையும், பலத்தையும் வழங்கும் என கூறப்படுகிறது. ஒருமுறை முனிவர் ஒருவர் கோமத் யாஜனா செய்ய முடிவெடுத்தார். இந்த சடங்கில் காலையில் வெட்டப்படும் பசு மாடானது மாலையில் மீண்டும் உயிர்பெறும் என்பது வழக்கமாக இருந்தது.

முனிவரின் மனைவி

முனிவரின் மனைவி

முனிவரின் மனைவியால் பசியை தாங்கிக்கொள்ள இயலவில்லை, மேலும் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். ஏனெனில் அவர் நீண்ட காலமாக பழங்களை மட்டுமே சாப்பிட்டு கொண்டிருந்தார். எனவே அவர் வெட்டப்பட்ட பசுமாட்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து சமைக்க முடிவு செய்தார்.

விபரீதம்

விபரீதம்

ஆனால் முனிவரின் மனைவியால் இறைச்சியின் வாசனையை தாங்கிக்கொள்ள இயலவில்லை. எனவே அதனை எடுத்து காட்டிற்குள் தூக்கி எரிந்து விட்டார். அது விழுந்தபோது இரண்டு துண்டுகளாக சிதறியது. மாலை நேரத்தில் முனிவர் அந்த பசுமாட்டை மீண்டும் உயிர்நிலைக்கு கொண்டுவந்தார். ஆனால் இரண்டு துண்டுகள் இல்லாததால் அவை வேறுபொருளாக மாறியது.

MOST READ: நண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா?

மாறிய பொருட்கள்

மாறிய பொருட்கள்

முனிவரின் மனைவி தூக்கி எறிந்த துண்டில் நிலத்தில் விழுந்த துண்டானது பூண்டாக மாறியது, அருகில் இருந்த குளத்தில் விழுந்த மற்றொரு துண்டு மீனாக மாறியது. நிலத்தில் சிதறிய இரத்த துளிகள் சிவப்பு பருப்புகளாக மாறியது, அதன் தோல் வெங்காயமாகவும், அதன் எலும்பு சிவப்பு கீரைகளாகவும் மாறியது. சடங்கு பூர்த்தி அடையாததால் இந்த பொருட்கள் புனிதமற்றவையாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: god
English summary

Never Eat These Foods On Sunday

Eating these 5 things on Sunday would bring you wrath of Lord Sun.
Desktop Bottom Promotion