Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..
சிலர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் வாழ்க்கையில் செல்வந்தராக முடியாது அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் பொதுவான சில பழக்கங்கள்தான்.
நாம் அனைவருமே ஒரு குறிக்கோளுக்காகத்தான் உழைத்து கொண்டிருக்கிறோம் அதுதான் நிறைய பணம் சம்பாதித்து பணக்காரராக வாழ வேண்டும் என்பது. ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பும், அதிர்ஷ்டமும் கிடைப்பதில்லை. செல்வந்தராக வேண்டுமெனில் அதற்கு கடுமையான முயற்சியும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் தேவை.

சிலர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் வாழ்க்கையில் செல்வந்தராக முடியாது அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் பொதுவான சில பழக்கங்கள்தான். நீதி சாஸ்திரத்தின் படி பணக்காரராகவே பிறந்தாலும் உங்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விரைவில் கரைத்துவிடும். இந்த பதிவில் உங்களை பணக்காரராக விடாமல் தடுக்கும் குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சோம்பேறித்தனம்
நீதி சாஸ்திரத்தின் படி ஒருவர் சோம்பேறித்தனத்துடன் இருந்தால் அவர் வாழ்க்கையில் ஒருபோதும் செல்வந்தராக வாய்ப்பில்லை. உடலளவிலும், மனதளவிலும் உழைக்கும் எண்ணம் இல்லாதவரை லக்ஷ்மி தேவி ஒருபோதும் நெருங்கமாட்டார்.

மது அருந்துவது
எவர் ஒருவர் அளவுக்கதிகமாக மது அருந்துகிறாரோ அவர் தன்னுடைய புரிந்து கொள்ளும் திறனை இழக்கிறார் இதனால் அவர் எடுக்கும் முடிவுகள் தவறானதாகவே இருக்கும். மேலும் மதுவுக்காகவே அதிக பணம் செலவழிக்கும் போது அவர்களிடம் சேமிப்பு என்பதே இருக்காது மாறாக கடன்தான் இருக்கும்.

பெண்ணின் மேல் ஆர்வம் இருப்பவர்
பெண்களின் மீது தவறான பார்வை மட்டும் செலுத்துபவர் ஒருபோதும் பணக்காரராக முடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியும் ஒரு பெண்தான் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்களை அவமதிப்பவர்களை லக்ஷ்மி ஒருபோதும் மன்னிக்கமாட்டார். இதற்கு சிறந்த உதாரணம் இராவணனும், துரியோதனனும் தான்.

மதிய நேரத்தில் தூங்குவது
மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் செல்வந்தராக முடியாது என்று கூறப்படுகிறது. ஆற்றலை மீட்டெடுக்க சிறிது நேரம் தூங்குவது நல்லதுதான் ஆனால் மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குபவர்கள் அவ்வளவு எளிதில் செல்வத்தை ஈட்டிவிட முடியாது.

ஊதாரித்தனம்
வாழ்க்கை மீதிருக்கும் தவறான புரிதல் என்னவெனில் அதிகம் சம்பாரித்தால் அதிகம் செலவழிக்கலாம் என்பதாகும். இந்த இரண்டுமே அதிகரித்து கொண்டே சென்றால் சேமிப்பு என்பது இல்லமாலேயே போய்விடும். நீங்கள் செலவழிப்பது உங்களின் வருமானத்தை பொறுத்ததாக இருக்கக்கூடாது, உங்களின் தேவைகளை பொறுத்ததாக இருக்க வேண்டும்.

நிகழ்காலம் மீது கவனம்
நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியாயத்தை அவசியம்தான் ஆனால் எதிர்காலத்தை மறந்து விடக்கூடாது. உங்களின் எதிர்க்கலாம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளும்வரை நீங்கள் நிகழ்காலத்தில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

சேமிப்பின்மை
நீங்கள் எவ்வளவு சம்பாரிக்கிறீர்கள் என்பதை காட்டிலும் நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எவ்வளவுதான் சாம்பாரித்தலும் சேமிக்காவிட்டால் உங்கள் வாழ்க்கை தோல்வியில்தான் முடியும். சேமிப்பை எப்போது இருந்து வேண்டுமென்றாலும் தொடங்கலாம் எப்போதும் அது தாமதமாகி விடாது.

ஆசை மற்றும் தேவை
நமது பிரச்சினைக்கு முக்கிய காரணமே ஆசைக்கும், தேவைக்கும் வித்தியாசம் தெரியாதுதான். ஆடம்பர தேவைகளை அடிப்படை தேவை என நினைத்து அதற்காக செலவிடுவது மிகவும் தவறான செயலாகும்.

கடன்
அனைவரும் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறென்றால் அது கடன் வாங்குவதுதான். கடன் வாங்காமல் வாழ்வது என்பது மிகவும் கடினம்தான், ஆனால் அதனை விரைவில் முடித்து விடுங்கள். அதற்க்கு வட்டி கட்டியே உங்களின் வருமானம் காலியாகிவிடும் பிறகு எப்படி பணக்காரர் ஆவது.



Click it and Unblock the Notifications
