For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா?

|

இந்து மத இதிகாசங்களில் நாம் தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அனைத்து தேவர்களுக்கும் மற்றும் அசுரர்களுக்கும் தந்தை ஒருவரே. அவர் பிரஜாபதி. தேவர்களும் அசுரர்களும் ஒரே இல்லத்தில் வசித்து வந்தனர். அந்த இடம் லோகம். அவர்கள் அனைவரும் ஒரே உணவை உண்டும் பருகியும் வந்தனர். அது சோம பானம்.

மேலும் அவர்கள் இரண்டு பிரிவினருக்கும் ஒரே விதமான உடல் வலிமை, உள்ள வலிமை, அறிவு, மற்றும் சிறப்பு சக்திகள் இருந்ததாக இந்து மத புராணங்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவது இவர்களின் நோக்கம், செயல்பாடு, மற்றும் அவர்கள் வாழ்வில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பம் போன்றவை மட்டுமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்து மத புராணங்கள்

இந்து மத புராணங்கள்

இந்து மத புராணங்களில் வரும் வில்லன்களின் பலர் மிகப் பெரிய அறிவு ஜீவியாக விளங்கியவர்கள், சிலர் அடி முட்டாளாக இருக்கக்கூடியவர்கள். இத்தகைய வில்லன்கள் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருகிறீர்களா? வாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக் கொள்வோம்.

MOST READ: தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...

அசுரர்கள் பட்டியல்

அசுரர்கள் பட்டியல்

சுவாரஸ்யமான சக்திமிக்க பத்து அசுரர்களைப் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டியல் இதோ..

1. மது மற்றும் கைத்பா

2. இராவணன்

3. வ்ரித்ரன்

4. மேகநாதன்

5. ஹிரண்யகசிபு

6. ரக்தபிஜா

7. ராகு

8. ஹிரண்யாக்ஷன்

9. பாணாசுரன்

10. பஸ்மாசுரன்

மது மற்றும் கைத்பா

மது மற்றும் கைத்பா

Image Courtesy

பிரபஞ்சத்தின் தொடக்க நாட்களில், உயிரினங்கள் அதிகம் படைக்கபடாமல் இருந்த நேரத்தில், விஷ்ணு பகவான் அமைதியாக பாற்கடலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவருடைய காதில் இருந்து இரண்டு துளி தூசி கடலில் விழுந்து அதில் இருந்து ஒரு ஜோடி அதாவது இரண்டு அசுரர்கள் உருவாகி, நீச்சல் அடிக்கத் தொடங்கினர்.

இவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள், இங்கு உறங்கிக் கொண்டிருக்கும் மாமனிதர் யார், இவர்கள் இங்கே எப்படி வந்தார்கள், இவர்களைச் சுற்றி என்ன இருக்கிறது என்ற எந்த ஒரு கேள்விக்கும் விடை தெரியாமல் இருந்தனர். இந்த் கேள்விகள் எரியும் தீயாக இவர்கள் மனதில் இருந்ததால், இருவரும் நீண்ட நாட்கள் மற்றும் மாதங்களாக தியானத்தில் ஈடுபட்டு இவற்றிற்கான விடையைத் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், ஒரு சிறிய இசை அவர்களை எழுப்பி விட்டது. அவர்கள் வானத்தை நோக்கி பார்த்தபோது, அங்கு தேவி சரஸ்வதி அழகான கோலத்தில் வீற்றிருந்தாள். இவர்கள் பக்தியால் மகிழ்ந்த தேவி சரஸ்வதி, இவர்கள் இருவரும் எப்போது, எப்படி மடிய வேண்டும் என்பதை இவர்களே தேர்வு செய்யக்கூடிய வரத்தை அளித்து விட்டாள்.

இந்த அசுரர்கள் மது மற்றும் கைத்பா, பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களை திருடிக் கொண்டு வந்து கடலின் அடி ஆழத்தில் ஒளித்து வைத்து விட்டனர். இந்த வேதங்களை மீட்பதற்காக, விஷ்ணு பகவான் ஹயக்ரிவர் உருவெடுத்து வந்து இவர்களை அழித்து வேதங்களை மீட்டார். இவர்கள் இருவரின் உடல் அங்கங்களும் 6-6 பிரிவுகளாக வெட்டப்பட்டு அதாவது, இரண்டு தலை, இரண்டு உடல், நான்கு கைகள், நான்கு கால்கள் என்று தனித்தனியாக் பிரிக்கபட்டு வீசப்பட்டது. இந்த பன்னிரண்டு பகுதிகளும் பூமியின் 12 மேலோட்டு இயக்கத் தட்டுகளாக குறிக்கப்படுகின்றன.

இராவணன்

இராவணன்

இராமாயண காப்பியத்தில் பிரதான எதிரியான ராவணன் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் அவன் ஒரு சிறந்த அறிவு படைத்தவன் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவன் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இராவணன், இந்து ஜோதிடம் மற்றும் கைரேகை பற்றிய ஒரு முக்கிய உரை நூலான "லால் கிதாப்"ன் அசல் எழுத்தாளராக கருதப்படுவதாக சிலர் நம்புகின்றனர். .ஒரு பலசாலி போர்வீரனாகவும், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் இருந்த இராவணன் , இசையிலும் மிகச் சிறந்து விளங்கினான். இராவணன் வீணை மீட்டும் அழகைக் காணவும். அவனுடைய இசையைக் கேட்கவும் தெய்வங்கள் கூட அவன் முன்னே தோன்றுவார்கள் என்று சில கதைகளில் நாம் கேள்விப்படுகிறோம்.

இராவணன் ஆயுர்வேத நூல்களில் நிபுணர் என்று நாடி சாஸ்திரம் கூறுகிறது. அந்நாட்களில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் முக்கிய பங்குதாரராக இராவணன் இருந்ததாக கூறப்படுகிறது. தவிர்க்கமுடியாத தருணத்தில், இராவணன் மரண வாயிலில் இருக்கும்போது, ஸ்ரீ ராமர், அவரது தம்பி இலட்சுமணனை அழைத்து இராவணனுக்கு இறுதி மரியாதை செலுத்துமாறு கூறி, அவனிடமிருந்து சரியான ஆட்சி மற்றும் நிர்வாகத் திறனுக்கான வழிமுறையைக் கற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனை ஏற்று இராவணனும் இலட்சுமணனுக்கு ஞானத்தை போதித்தார்.

MOST READ: மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்?

வ்ரித்திரன்

வ்ரித்திரன்

Image Courtesy

சொர்க்கத்தின் அரசனான இந்திரன் எதிர்கொள்ள வேண்டிய ஒரு எதிரியாக, இருந்தவன், வ்ரித்திரன் . இவன் ஒரு பறக்கும் பாம்பாகவும், இயற்கை பேரிடரான வறட்சியின் உருவமாகவும் விளங்கினான். இவன் ஒரு பறக்கும் பாம்பாக வந்து, ஆறுகளை அடைத்துக் கொண்டான். இவனைக் கொன்று ஆறுகளை மீட்டது இந்திர பகவான்.

உலகின் அணைத்து நீர்தேக்கங்களையும் கைது செய்து தனது கட்டுபாட்டில் வைத்திருந்தான் வ்ரித்திரன். இந்திர தேவர், வ்ரித்திரனின் 99 கோட்டைகளை அழித்து, கைது செய்யப்பட்ட நீர்த்தேக்கங்களை விடுதலை செய்வதற்கு முன்னர், போரில், வ்ரித்திரன் இந்திரனின் இரண்டு தாடைகளையும் உடைத்து விட்டான். இறுதியில், வ்ரித்திரன் இந்திரனால் தூக்கி எறியப்ட்டான். அப்போது ஏற்கனவே அழிக்கபட்ட கோட்டைகளை முழுவதும், நொறுக்கிவிட்டு வ்ரித்திரன் இறந்துவிட்டான். அதுமுதல், இந்திரன், "வ்ரித்ரஹன்" அதாவது "வ்ரித்ரனை கொன்றவன்" என்றும், "முதன்முதலாகப் பிறந்த பறக்கும் பாம்பைக் கொன்றவன்" என்றும் அழைக்கபட்டார்

மேகநாதன்

மேகநாதன்

Image Courtesy

மேகநாதன் என்பவன், இலங்கை அரசன் இராவணனுக்கும் அவன் மனைவி மண்டோதரிக்கும் பிறந்த மகன் ஆவான்., இவனை இந்திரஜித் என்றும் அழைப்பார்கள். சொர்க்கங்களில் பெரியதான இந்திர லோகத்தை இவன் கைப்பற்றியதால் இவன் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான். இன்று வரை மிகச் சிறந்த போர்வீரர்கள் பட்டியலில் இவன் பெயர் நீடித்து நிற்கிறது. பிரம்ம தேவரால் படைக்கபட்ட ஆயுதமாகிய வலிமை பொருந்திய பிரம்மாஸ்திரத்தை கைவசம் கொண்டிருந்த மிகச் சிறந்த மராத்திய போர்வீரர் மேகநாதன், ராமருக்கும் ராவணனுக்கும் நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தான். இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் மகன் இந்த இந்திரஜித்.

பல நாட்கள் தொடர்ச்சியாக போர் புரிந்து, இறுதியில் இலட்சுமணன் இந்திராஸ்திரத்தை செலுத்தி, இந்திரஜித் தலையை கொய்தான். இலட்சுமணன் இந்திரஜித்தின் கைகளை வெட்டி வீசியதாகவும், அந்த கைகள், இந்திரஜித்தின் மனைவி சுலோச்சனா முன் விழுந்ததாகவும் , சுலோச்சனா தன்னுடைய பதிபக்தி மற்றும் சக்தியால் அந்த கைகளுக்கு உயிர் கொடுத்ததாகவும் அந்த கைகள், போர்க்களத்தில் இந்திரஜித்தின் வீர மரணம் குறித்து தானே எழுதியதாகவும் சில கதைகளிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்திரஜித்தின் உடலை சகல மரியாதையோடு ஸ்ரீ ராமர் இலங்கைக்கு இறுதி சடங்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஹிரண்யகசிபு

ஹிரண்யகசிபு

Image Courtesy

தைத்யர்களின் அரசனான ஹிரண்யகசிபு இந்து மத புராங்களில் வரும் ஒரு அசுரன் ஆவான். பிரம்ம தேவரிடம் அவன் தனக்கு அழிவே வரக் கூடாது என்ற ஒரு வரத்தைப் பெற்றிருந்தான். இதனால் நாட்கள் செல்லச் செல்ல, அவனுடைய வன்முறை எல்லை மீறியது. தன்னையே அனைவரும் வழிபட வேண்டும் என்றும் கடவுளை விட தானே சிறந்தவன் என்ற கர்வமும் அவனிடம் வளர்ந்து வந்தது. அணைத்து மக்களும் அவனையே வழிபட்டு வந்தனர். ஆனால் அவனுடைய மகனான பிரஹலாதன் அவ்வாறு வழிபட மறுத்ததால், அவனைக் கொல்வதற்கு பலமுறை ஹிரண்யகசிபு முயற்சித்தான். பின்னர், விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, அவனைக் கொன்றார்.

MOST READ: சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்? அவர்கள் யார் தெரியுமா?

ரக்தபிஜா

ரக்தபிஜா

Image Courtesy

துர்கா தேவி மற்றும் காளி தேவியை எதிர்த்து மூன்று உலகங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் போரிட்ட சும்பா, நிசும்பா என்ற இரண்டு அரக்கர்களுடன் இணைந்தான் ஒரு சக்திமிக்க அசுரன் ரக்தபிஜா. ரக்தபிஜனுக்கு ஒரு வரம் உண்டு. அதாவது, ஒவ்வொரு முறை அவன் கொல்லபட்டு, அவனுடைய இரத்தம் இந்த மண்ணில் விழும்போதும் அந்தத் துளியிலிருந்து மற்றொரு ரக்தபிஜ்ஜன் தோன்றிவிடுவான். ஒவ்வொரு இரத்தத்துளியும் ஒரு அவன் முளைக்க ஒரு விதையாக இருக்கும் என்பது அவன் பெயருக்கான விளக்கம் ஆகும்.

போரின் பிற்பகுதியில் இணைந்த மகா காளி , உலகம் முழுவதும் அவளுடைய நாக்கை பரப்பி கொண்டாள் , மற்ற தேவியர், ரக்தபிஜ்ஜனைக் கொன்று அவன் உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் காளிதேவி தனது நாவால் ஏந்தி அவனுடைய நகல் உருவங்களை தனது வாய்க்குள் விழுங்கினாள். இறுதியில் ரக்தபிஜன் மடிந்துவிட்டான்.

ராகு

ராகு

Image Courtesy

அழிவில்லாத வரம் பெரும் அமுதத்தைப் பருகுவதற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை எடுத்தனர். அப்போது, பகவான் விஷ்ணு, அசுரர்கள் அந்த அமுதத்தைப் பருகுவதைத் தடுத்து தேவர்கள் மட்டும் அருந்தும்படி செய்தார். அப்போது, ராகு, தன்னை ஒரு தேவனாக உருமாற்றிக் கொண்டு அமுதத்தைப் பருக வந்தான். இருப்பினும் தங்கள் ஒளிரும் தன்மையால், இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்ட சூரிய பகவான் மற்றும் சந்திர பகவான் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ராகு அதற்குள் அமுதத்தை பருகி அது அவன் தொண்டை வரை சென்றுவிட்டது. மோகினி வடிவில் இருந்த பகவான் விஷ்ணு உடனே ராகுவின் தலையை சுதர்ஷன சக்கரத்தால் கொய்தார். ஆனால் அந்த அமுதம் தொண்டைக்கு கீழே இறங்கி விட்டதால் அவன் சாகவில்லை. அந்த நாள் முதல் அவன் தலை வரை ராகுவாகவும், தலைக்கு கீழே கேதுவாகவும் அழைக்கபட்டான். பின்னாட்களில் இரண்டுபேரும் கிரகங்களாக மாற்றம் பெற்றனர்.

MOST READ: நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா? இனி தினம் சாப்பிடுங்க...

ஹிரண்யாக்ஷன்

ஹிரண்யாக்ஷன்

Image Courtesy

தங்க கண்களை உடையவன் என்ற அர்த்தம் கொண்ட ஹிரண்யாக்ஷன் சொர்க்கத்தைத் தாக்கினான். மேலும் பூமாதேவியை அழிக்க முயற்சித்தான். இந்த ஹிரண்யாக்ஷன் திதி மற்றும் கஷ்யப்பரின் மகன் என்று அறியப்படுவதாக சில புராணங்கள் கூறுகின்றன. கஷ்யப்பர் என்பவர் புராண காலத்து முனிவர் ஆவார். இவர் தேவர்கள், அசுரர்கள், நாகங்கள் மற்றும் எல்லா மனித உயிர்களுக்கும் தந்தை என்று அறியப்படுகிறார். ஒரு முறை பூமாதேவியை கடலுக்கு அடியில் இழுத்துச் சென்றான் ஹிரண்யாக்ஷன். அப்போது எல்லா கடவுளும் பகவான் விஷ்ணுவிடம் சென்று பூமாதேவியை காப்பாற்றுமாறு வேண்டினர். அப்போது பகவான் விஷ்ணு ஒரு பன்றி அதாவது வராஹா அவதாரம் எடுத்து பூமாதேவியை காப்பாற்றினார். விஷ்ணுவின் பாதையை தடுக்கும்போது அவனை விஷ்ணு பகவான் கொன்றுவிட்டார்.

பாணாசுரன்

பாணாசுரன்

Image Courtesy

பாணாசுரன் என்பவன் இந்து புராணங்களில் வரும் ஆயிரம் கைகளைக் கொண்ட ஒரு அசுர அரசன். இவன் பலி என்னும் அரசனின் மகன் ஆவான். தற்போது மத்திய அஸ்ஸாம் என்று அறிப்படும் இடத்தை அவன் ஆட்சி செய்து வந்ததாக அறியப்படுகிறது. எல்லா அரசர்களும் சில தேவர்களும் அவன் முன் மண்டியிடும் அளவிற்கு மிகுந்த வலிமை படைத்தவனாக பாணாசுரன் இருந்து வந்தான். சிவபெருமானின் சிறந்த பக்தனாக இவன் விளங்கினான். சிவபெருமான் தாண்டவ நடனம் புரியும்போது, தனது ஆயிரம் கைகளைக் கொண்டு அவன் மிருதங்கம் வாசித்ததாக கூறுவர்.

சிவபெருமானே அசுரர்களைக் காப்பதாக வரம் கொடுத்த பின், பாணாசுரன் வெல்ல முடியாதவனாகி விட்டான். நாட்கள் செல்லச் செல்ல அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாக மாறினான். அவனுடைய வன்முறை அதிகரித்தது. தன்னுடைய மகளான உஷாவை பலரும் மணமுடிக்க வேண்டி கேட்டதால் ,அவளை அக்னிகார் என்னும் ஒரு கோட்டைக்குள் சிறை வைத்தான்.

ஒரு நாள், உஷா தன்னுடைய கனவில் ஒரு ஆண்மகனைக் கண்டாள் . அவன் பெயர் அனிருத்தா. இவன் பகவான் கிருஷ்ணரின் பேரன் ஆவான். அனிருத்தாவைக் அரண்மனையில் இருந்து கடத்தி வந்து உஷாவிற்கு பரிசாக அளித்தான் பாணாசுரன் . இதனால் பகவான் கிருஷ்ணருக்கும் பாணாசுரனுக்கும் இடையில் போர் மூண்டது. சிவபெருமான் தனது பக்தன் பாணாசுரனைக் காப்பாற்ற அங்கு வந்தார். ஆனால் பகவான் கிருஷ்ணர் சிவபெருமானை ஆழ்ந்து உறங்கச் செய்து விட்டார். பிறகு, பகவான் கிருஷ்ணர், பாணாசுரனின் ஆயிரம் கைகளில் இரண்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை வெட்டி எறிந்துவிட்டார். இதற்கிடையில் சிவபெருமான் உறக்கத்தில் இருந்து விடுபட்டு, தனது பக்தனின் உயிரை மட்டும் விட்டுவிடுமாறு கேட்டார். பாணாசுரன் தனது தவறுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டான். பகவான் கிருஷ்ணரும் அவனை மன்னித்தார். பிறகு உஷாவிற்கும் அனிருத்தனுக்கும் திருமணம் முடிந்தது.

பஸ்மாசுரன்

பஸ்மாசுரன்

Image Courtesy

பஸ்மாசுரன் ஒரு சக்தி மிக்க அசுரன். இவன் சிவபெருமானிடம் வேண்டி, ஒரு வரத்தைப் பெற்றான். அவன் யார் தலை மேல் கை வைக்கிறானோ, அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள். இதுவே அவன் பெற்ற வரமாகும். சிவனும் அவனுடைய பக்தியைப் பாராட்டி அந்த வரத்தை அவனுக்குக் கொடுத்தார். பஸ்மாசுரன் பார்வதியின் அழகில் மயங்கி, அவரை அடைய முற்பட்டு , அதற்கு ஒரே வழி சிவபெருமானை சாம்பலாக்குவது என்ற எண்ணத்தில் சிவபெருமானின் தலையில் கைகளை வைக்க எண்ணினான். இதனை அறிந்த சிவபெருமான், தப்பித்து ஓடினார். ஆனால் பஸ்மாசுரன் அவரைப் பிடித்து விட்டான். ஒரு வழியாக அவனிடம் இருந்து விடுபட்டு, விஷ்ணுவிடம் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு சிவபெருமான் கூறினார். தன்னுடைய வரத்தில் இருந்து தான் தப்பிக்க ஒரு வழியைக் கூறுமாறு வேண்டினார்.

விஷ்ணு பகவான் மோகினி வடிவத்தில் பஸ்மாசுரன் முன் தோன்றினார். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அந்த நொடியே மோகினி மீது காதல் வயப்பட்டான். பஸ்மாசுரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமார் மோகினியிடம் கேட்டான். அதற்கு மோகினி தனக்கு நடனம் மிகவும் பிடிக்கும் என்றும், தான் ஆடும் நகர்வுகளை ஒத்து அப்படி அவனும் ஆடினால் தான் அவனை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அப்படி நடனம் ஆடும்போது, மோகினி தனது கையைத் தலையில் வைக்கும் ஒரு நிலையை செய்து காட்டினார். அதனை அப்படியே செய்த பஸ்மாசுரன், தனது கையை தனது தலையில் வைத்ததால் எரிந்து சாம்பலானான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Most Powerful Asuras Mentioned In Hindu Epics

each ausara and deva emerges from the same father. some of the villan from hindu mythology were exceptionally intelligent and some of them were outrageously stupid nevertheless, these fascinating facts about them are interesting to know.