Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
உங்கள் திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் உங்களின் எதிர்கால ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
திருமண ரேகை நமது திருமண வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் கூறக்கூடும்.
நமது கைகளில் இருக்கும் ரேகைகளும், கோடுகளும் நமது எதிர்காலத்தை பற்றி நமக்கு கூறக்கூடும். நமது கைகளில் இருக்கும் முக்கியமான கோடுகளில் ஒன்று திருமண ரேகையாகும். திருமண ரேகை நமது திருமண வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் கூறக்கூடும். நமக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமது திருமண ரேகை வைத்தே கண்டறிந்து விடலாம்.

உங்கள் கைகளில் இருக்கும் கோடுகள், சின்னங்கள், அடையாளங்கள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. நமது திருமண ரேகை பற்றி நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும். உங்கள் திருமணம் பற்றியும், அதனை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உண்மை 1
உங்கள் இதய கோட்டிற்கும், சுண்டு விரலுக்கும் இடையில் இருக்கும் கோடுகள்தான் திருமண ரேகைகள் ஆகும். இது உங்களின் உறவுளை பிரதிநிதித்துவ படுத்துகிறது.

உண்மை 2
இந்த இடத்தில் ஆழமாக மற்றும் தீர்க்கமாக இருக்கும் கோடுகள்தான் திருமண ரேகைகள் ஆகும். உங்களின் இதய கோட்டிற்கும், சுண்டுவிரலுக்கும் இடையில் இருந்தால் அவர்களுக்கு 25 வயதில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

உண்மை 3
இது இதய கோட்டிற்கு அருகில் இருந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது இத்தா கோட்டிலிருந்து விலகி உங்களின் சுண்டு விரலுக்கு அடியில் இருந்தால் அவர்களுக்கு தாமதமாக திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

உண்மை 4
ஒன்றிற்கு மேற்பட்ட தீர்க்கமான திருமண ரேகைகள் உங்கள் கைகளில் இருந்தால் உங்களுக்கு பல திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று பேராசை பட வேண்டாம்.

உண்மை 5
இரண்டு நீளமான திருமண ரேகைகள் இருந்தும், ஒன்று நீளமாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருந்தால் அந்த நீளமான கோடு உங்களின் திருமண வாழ்க்கையையும், சிறிய கோடு உங்களின் முறிந்த உறவையும் குறிக்கும்.

உண்மை 6
இரண்டு திருமணம் நடக்கும் வாய்ப்பையும் உங்களின் கைரேகையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று அருகில் அதுவும் தீர்க்கமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

உண்மை 7
உங்களின் திருமண கோடு மற்ற கோடுகளை விட நீளமாகவும், நீளம் குறைவாகவும் இருந்தால் நீங்கள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

உண்மை 8
உங்களின் திருமண கோடுகள் பிரிந்து மற்ற கோடுகளுடன் இணைந்து வெவ்வேறு திசைகளில் பயணித்தால் உங்களின் வாழ்க்கை துணைக்கு அடிக்கடி ஆரோக்கிய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உண்மை 9
உங்களின் திருமண ரேகைகள் இரண்டாக பிரிந்தால் உங்களின் திருமண வாழ்க்கையில் துன்பகரமான பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பிரிவு நிரந்தரமான பிரிவாக இருக்காது, தற்காலிகமான பிரிவாக மட்டுமே இருக்கும்.

உண்மை 10
உங்களின் திருமண ரேகை புதன் மேட்டில் தொடங்கி விதி மற்றும் ஆயுள் ரேகையை நோக்கி மேல்நோக்கி நகர்ந்தால் உங்களுக்கு வரப்போகிற வாழ்க்கைத்துணை ஒழுக்கமற்றவராக இருப்பார் என்று அர்த்தம்.

உண்மை 11
உங்கள் திருமண ரேகையில் கருப்பு புள்ளி அல்லது கூட்டல் குறி போன்றவை இருப்பது கெட்ட சகுனமாகும். இதனால் அவர்கள் திருமண வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருப்பதுடன் தோல்வியில் முடியவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
