For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்! எங்க இருந்துடா வர்றீங்க...

இப்படியும் அன்பை பொழிய முடியுமா? காதலர் தினத்தன்று தன் லவ்வருக்கு கடலையே பரிசாக கொடுத்த காதலன் கதையைப் பற்றி தான் இந்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

|

காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியது. அந்த வகையில் சீனா நாட்டில் மே 20 காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

Man Gifted His Girlfriend A Part Of The Sea

இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை மட்டுமல்ல அன்பான பரிசுகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்ய விதவிதமான கிஃப்ட்களை கொடுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் இந்த பையன் பண்ண காரியத்தை பாருங்க. தன் அன்பான காதலிக்கி ஒரு கடலையே பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லவ் புரபோஷல்

லவ் புரபோஷல்

அதற்கு அந்த பெண்ணும் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடனான வெப்சேட்டை ஸ்க்ரீன் சாட் எடுத்து எல்லோருக்கும் தெரியும் வகையில் வலைத்தளத்தில் போட்டு அந்த பரிசை நினைத்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் இதன் மூலம் இந்த விஷயம் பொய் இல்லை என்பதை நிரூபித்து உள்ளார்.

MOST READ: சிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வந்து செல்வது இந்த வழியில் தானாம்... கண்டுபிடிச்சிட்டோம்ல...

பெரிய கடல் நிலப்பரப்பு

பெரிய கடல் நிலப்பரப்பு

அந்த பெண்ணோட பாய்பிரண்ட் சீனாவில் 682,662 யுவானுக்கு (99,000 டாலருக்கு) கிட்டத்தட்ட 210 ஹெக்டேர் கடல் நிலப்பரப்பை அவளுக்காக வாங்கி அசத்தியுள்ளார்.

சீன சட்ட விதிமுறைகளின் படி இது சட்டத்திற்கு புறம்பானது. ஏனெனில் கடல் நிலப்பரப்பு பொதுப்படையான ஒன்று. இருப்பினும் அந்த நிலப்பரப்பு அவர்களுக்கு சொந்தமானது என்பதால் சீன அரசும் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கி உள்ளது.

அந்த 210 ஹெக்டேர் நிலப்பரப்பில் அவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், அந்த நிலப்பரப்பு முழுவதும் கடல் வெள்ளரிக்காய்கள், கடல் நத்தைகள் மற்றும் நத்தையோடு போன்றவை இவர்களுக்கு சொந்தமானது.

கடலையேவா?

கடலையேவா?

சீனா சட்ட திட்டத்தின் படி இந்த உரிமம் அவருக்கு 10 பிப்ரவரி 2029 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 வருஷத்துக்கு அந்த பெண் எவ்வளவு வேண்டுமானாலும் கடல் உணவுகளை எடுத்துக் கொள்ள முடியும். இந்த சந்தோஷத்தை வலைத்தளத்தின் வழியாக எல்லோருடனும் பகிர்ந்து உள்ளார்.

MOST READ: இந்த இமான் அண்ணாச்சிய இப்படி பண்ணாரு... நம்ப முடியல தான்... ஆனா இதான் உண்மை...

மக்களின் கருத்து

மக்களின் கருத்து

இந்த செய்தி குறித்து மக்கள் ஒவ்வொரு கருத்தை கூறியுள்ளனர். இது ஒரு விளம்பரப்படுத்துவதற்காக செய்கின்ற வேலை என்றும் இது ஒரு பொய்யான தகவல் என்றும் கூறியுள்ளனர்.

எது எப்படி இருப்பினும் தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த இத விட ஒரு கிரியேட்டிவ் ஐடியா இருக்க முடியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Gifted His Girlfriend A Part Of The Sea

Forgetting important days can land you in trouble, especially when it is Valentine's day. China has started celebrating its Valentine's day on 20 May as it sounds like 'I love you' when the day is pronounced in Chinese. So the boys need to be all prepped up to fulfil their girlfriends' needs on 14 February and also on 20 May! One particular guy came up with the unique idea of gifting his girlfriend, a slice of the sea.
Story first published: Tuesday, June 25, 2019, 14:55 [IST]
Desktop Bottom Promotion