Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...
பீருக்காக உயிர்விட்ட மனிதனின் வேடிக்கையான அதேசமயம் துயர சம்பவத்தைப் பற்றியும் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
பார்ட்டி என்றாலே ஒரே மஜாதான்! நண்பர்களாக கூடிவிட்டால், யார் அதிகம் குடிக்கிறார்கள் என்ற போட்டியும் எழும். அதற்குத் கைகளை தட்டி உற்சாகப்படுத்த பலர் ரெடியாக இருப்பர்.

ஆனால், இதுபோன்ற விளையாட்டு வினையில்போய் நிற்கும் என்பதை அதிகமாக யாரும் யோசித்து பார்ப்பதில்லை. மது அருந்தும்போட்டியில் சிலர் உயிரையும் இழந்துள்ளனர்.

தாய்லாந்து பார்ட்டி
தாய்லாந்து நாட்டில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறவர்கள் ஓய்விடத்தில் (ரிசார்ட்) விருந்து (பார்ட்டி) வைத்துள்ளனர். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. விருந்தில் பீர் அருந்துவதற்காக பலர் வரிசையில் நிற்கின்றனர். பீர் அருந்தும் உயரமான குவளை ஒன்றில் வாங்கி ஒரே மடக்கில் அருந்திவிட்டு, வெற்றியை காட்டுவதற்கு குவளையை உயர்த்திய ஒரு நபர், அப்படியே நிலைகுலைந்து விழுகிற காட்சி அதில் பதிவாகியுள்ளது.

சிங்கிள் கல்ப்
நம்ம ஊர் குவாட்டர், ஆஃப் போன்று 'பின்ட்' என்ற அளவீடு ஒன்று உள்ளது. பிரிட்டன் போன்ற சில இடங்களில் 568 மிலியும் அமெரிக்காவில் 473 மிலியும் ஒரு 'பின்ட்' என்று குறிப்பிடப்படுகிறது. தாய்லாந்து மனிதர், ஒரு பின்ட் அளவான பீரை அரை நிமிட நேரத்துக்குள் குடித்துள்ளார். உடனே கீழே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

பீரால் பிரிந்ததா உயிர்?
அவர் அருந்திய மது விஷமாகிவிட்டது என்று பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதி சுகாதார கட்டுப்பாட்டு துறை, குறிப்பிட்ட அம்மனிதர் மதுவினால்தான் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்வது கடினமான காரியம் என்ற கருத்து தெரிவித்துள்ளது.
அசம்பாவிதம் நடந்தபோது அங்கிருந்த பெண்மணி ஒருவர், பீர் அருந்தியவருக்கு வலிப்பு வந்தது போல் தெரிந்தது என்றும், அவரது வாய் மற்றும் மூக்கின் வழியே பீர் வெளியே வந்தது என்றும் தெரிவித்துள்ளார். நிலைகுலைந்து விழுந்த அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்ததுதான் சோகம்!



Click it and Unblock the Notifications