Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த ரேகை கையில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாம் தெரியுமா?
நமது கைகளில் இருக்கும் மச்சம், ரேகைகள், அடையாளங்கள் என ஒவ்வொன்றும் நமது எதிர்காலத்துடன் தொடர்புடையதாகும்.
நமது முன்னேற்றத்திற்கான சாவி என்பது நமது உடல்தான். அதேபோல நமது அதிர்ஷ்டம், வெற்றி, எதிர்காலம் போன்றவற்றிற்கான ரகசியங்கள் நமது உடலிலேயே உள்ளது. நாம்தான் அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். சாஸ்திரங்களின் படி நமது எதிர்காலம் பற்றிய பல ரகசியங்கள் நமது கைகளிலேயே உள்ளது.

நமது கைகளில் இருக்கும் மச்சம், ரேகைகள், அடையாளங்கள் என ஒவ்வொன்றும் நமது எதிர்காலத்துடன் தொடர்புடையதாகும். கைரேகையை பார்த்து எதிர்காலத்தை கூறுவது நமது நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு வழக்கமாகும். இந்த பதிவில் மணிபந்த ரேகை என்றால் என்ன? அது உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

மணிபந்த ரேகை
மணிபந்த ரேகை என்பது உள்ளங்கைக்கும், கைக்கும் இடையே இருக்கும் கோடாகும். சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறியுள்ள படி மணிபந்த ரேகை என்பது வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அறிகுறியாகும். அதேசமயம் இது உங்களுக்கு காத்திருக்கும் அழிவை பற்றியும் கூறும்.

அதிர்ஷ்டம்
மணிபந்த ரேகையில் இருந்து கிளை ரேகையானது தொடங்கி உங்கள் கைரேகையின் மேடு வரை சென்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு யாருமில்லை. நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக காத்திருக்கும். ஒருவேளை இறந்து கோடுகள் இருந்தால் உங்கள் வருமானம் திடீரென இரட்டிப்பாகும்.

ஆயுள் கோடு
உங்கள் மணிபந்த ரேகையிலிருந்து கோடானது உங்கள் ஆயுள்ரேகையை தொட்டால் உங்கள் எதிர்காலம் வெளிநாடுக்ளில் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ரேகை கையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் மிக சிறிய வயதிலேயே கிடைத்துவிடும். செல்வத்திற்கும் எந்த குறையும் இவர்கள் வாழ்வில் இருக்காது.

இதய ரேகை
உங்களுடைய மணிபந்த ரேகை இதய கோட்டை தொடும்படி இருந்தால் அது நீண்ட புகழுக்கும், நிலையான செல்வத்திற்குமான அடையாளமாகும். இந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு கூட்டு தொழில் அமோகமாக இருக்கும். வெற்றியும், புகழும் இவர்களை தேடிவரும்.

சூரியமேடு
உங்கள் மணிபந்த ரேகையில் இருந்து செல்லும் கோடு சூரிய மேட்டில் சென்று முடிவடைந்தால் இது அரசியலில் ஏற்படும் வெற்றிக்கான அடையாளமாகும். உங்களுக்கு அரசியலில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் இருக்கும். ஆனால் நீங்கள் எந்த துறையில் நுழைந்தாலும் அதில் உங்கள் கால்தடத்தை வலுவாக பதிப்பீர்கள்.

குருமேடு
மணிபந்த ரேகையிலிருந்து செல்லும் கோடு குருமேட்டை சென்று அடைந்தால் உங்கள் தொழிலில் நீங்கள் உச்சத்தை அடப்போகிறீர்கள் என்று அர்த்தம். மிகச்சிறிய வயதிலேயே நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். உங்களை விட வயதில் மூத்தவர்கள் மீது நீங்கள் காதலில் விழ வாய்ப்புள்ளது. மற்றவர்களை உங்களை ஏற்றுக்கொள்ள வைக்க நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications