Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இந்த பிரச்சினைகளுக்கு சனிபகவான்தான் காரணமாம் தெரியுமா?
அனைவரும் கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனி கிரகத்தை ஆளும் சனிபகவானை பார்த்துதான். நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அது இரண்டையுமே அளவிற்கு அதிகமாய் வழங்கக்கூடியவர் சனிபகவான்
அனைவரும் கண்டு பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனி கிரகத்தை ஆளும் சனிபகவானை பார்த்துதான். நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அது இரண்டையுமே அளவிற்கு அதிகமாய் வழங்கக்கூடியவர் சனிபகவான். ஒழுக்கமான முறையில் வாழ்ந்து அவரை உண்மையாக வழிபட்டால் அதீத நன்மைகளை வழங்கும் இவர் அது தவறும் பட்சத்தில் மோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவார்.

மற்ற கிரகங்கள் ஒரு ராசியில் சில மாதங்கள் மட்டும் வசிக்கும்போது சனிபகவான் மட்டும் ஆண்டுகள் வசிக்கிறார். அஷ்டம சனி, ஜென்ம சனி என சனிபகவான் பல காலகட்டங்கள் வாழக்கூடியவர். சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் நுழைந்து விட்டால் ஒன்று நன்மையை வழங்குவார் அல்லது தீமைகளை வழங்குவார். சனிபகவான் உங்கள் உங்கள் மேல் கோபமாக இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சனிபகவானின் வீடு
பொதுவாகவே சனிபகவான் தண்டனைகளை வழங்கும் கடவுள் ஆவார். அவர் உங்கள் ஜாதகத்தில் எத்தனாவது வீட்டில் இருக்கிறார் என்பதை பொறுத்தே அவர் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியம் இருக்கும். சனிபகவான் உங்கள் மேல் கோபத்தில் இருந்தால் அவரது ஆட்டத்தை எப்படி தொடங்குவார் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அரச மரம்
உங்கள் வீட்டிற்கு அருகில் அரசமரம் வளர்ந்து வந்தாலோ அதை வெட்டி விட்ட பிறகும் அது மீண்டும் அதே இடத்தில் வளர்ந்தால் சனிபகவான் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். உடனடியாக அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கும் வழியை தேட தொடங்குங்கள்.

சுவர் பிரச்சினைகள்
சுவர் சரிந்து விழுவதோ அல்லது சுவரில் விரிசல் ஏற்படுவதோ மிகவும் அபசகுணமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இது குடும்பத்தில் வாக்குவாதங்களையும், குழப்பங்களையும் உண்டாக்குவதாக இருக்கும். உங்கள் வீட்டில் திடீரென பிரச்சினைகள் எழுந்தால் அது சனிபகவான் உங்கள் மேல் அதிருப்தியில் இருப்பதன் அர்த்தம் ஆகும்.

சிலந்தி வலை
வீட்டிற்குள் சிலந்தி வலை கட்டுவது என்பது மிகவும் அபசகுணமான ஒன்றாகும். கைவிடப்பட்ட இடங்கள் மற்றும் சுத்தமில்லாத இடங்களில் மட்டுமே சிலந்தி வலை பின்னும். இது வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மையையும், வெறுமையையும் குறிக்கும். இதனால்தான் வேதங்களில் சுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட சிலந்தி வலைகள் இருப்பது சனிபகவான் உங்கள் மேல் கோபத்தில் இருப்பதற்கான அடையாளம் ஆகும்.

கருப்பு பூனை
பொதுவாகவே கருப்பு பூனை அபசகுணத்தின் சின்னமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் கருப்பு பூனை அடிக்கடி வந்து சென்றால் சனிபகவான் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம் . உங்கள் செயல்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.

எறும்புகள்
எறும்புகள் வீட்டிற்குள் நுழைவது மற்றொரு கெட்ட சகுனமாகும். உங்கள் வீட்டில் எறும்புகளின் ஆக்கிரமிப்பு தொடங்கினால் உங்கள் வீட்டில் சனிபகவான் நுழையப்போகிறார் என்று அர்த்தம், உடனடியாக அவரை வழிபட தொடங்குங்கள்.

மற்ற அறிகுறிகள்
தொழிலில் நஷ்டம், நீதிமன்ற விவகாரங்களில் இழப்பு, பணியிடங்களில் பிரச்சினை, முயற்சிக்கேற்ற பலன் கிடைக்காமல் போகுதல் என உங்களின் நிம்மதியை கெடுக்கும் செயல்கள் அனைத்தும் சனிபகவானின் கோபத்தால் நடப்பவைதான்.



Click it and Unblock the Notifications
