For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க...

உங்கள் கைரேகை பற்றிய சில அதிர்ச்சிகரமான விஷயத்தைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.

By Mahibala
|

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் கையெழுத்து போடச் சொல்வார்கள். படிக்காத, கையெழுத்து போடத் தெரியாதவர்கள் ஏளனமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எங்கு போனாலும் ரேகை வைக்கச் சொல்லி கேட்கிறார்கள்.

thumb lines

அவ்வளவு ஏன் ஒரு சிம் கார்டு வாங்கப் போனால் கூட கைரேகை தான் இப்போது தேவைப்படுகிறது. அதை நாம் பெரிதாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதைப் பற்றிய பல விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைரேகை இல்லாமல் பிறப்பார்களா?

கைரேகை இல்லாமல் பிறப்பார்களா?

கைரேகை என்பது எல்லோருக்கும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் கைரேகை இல்லாமல் யாராவது பிறந்திருப்பார்களா? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? மூன்று வகையான மரபணு பிரச்சினைகள் காரணமாக கைரேகை ஒருவருக்கு உருவாகாமல் போகலாம்.

அந்த மரபணுக்கள்

1. Naegeli - franceschrtti - jadassohn syndrome (NFJS)

2. Dermatopathia pigmentosa reticularis (DPR)

3. Adermatoglyphia

இந்த மூன்று மரபணுக்களின் காரணமாகவே கைரேகை உருவாகாமல் போகும்.

MOST READ: உடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா? இத மட்டும் செஞ்சாலே போதும்...

அழிந்துவிடுமா?

அழிந்துவிடுமா?

நம்முடைய கைரேகை எதனாலாவது அழிந்து போகுமா? மிகக் கடினமான வேலைகள் செய்பவர்களுக்குக் கைரேகை தேய்ந்து போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் சில நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும்.

எப்போது உருவாகும்?

எப்போது உருவாகும்?

நாம் நம்முடைய அம்மாவின் வயிற்றுக்குள் கருவில் இருக்கும்பொழுதே கை ரேகை உருவாகிவிடும். நம்முடைய உடல் அசைவுகள், வயிற்றுக்குள் இருக்கும் இடம், இருக்கின்ற முறைகள் அதன் தன்மை ஆகியவை தான் ஒவ்வொருவருக்கும் கைரேகை தனித்துவமாக இருப்பதற்கான காரணம்.

இறந்தவரை கண்டுபிடிக்க

இறந்தவரை கண்டுபிடிக்க

ஒருவர் இறந்து போய்விட்டார் என்றால், அவருடைய உடல் நீண்ட நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாமல் போனால் அவர்களுடைய கையில் இருக்கின்ற தோல் கழன்றுவிடும். அப்போது அந்த நபரை அடையாளம் காண்பதற்காக அந்த கையினுடைய தோலை கழற்றி எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.

உலகின் முதல் ரேகை

உலகின் முதல் ரேகை

உலகின் முதல் கைரேகை என்பது சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. குவைத் நாட்டில் உடைந்து போன மண்பானையில் இருந்து தான் இப்படியொரு ரேகை கிடைத்திருக்கிறது. அந்த ரேகையினுடைய வயது 7300 ஆண்டுகள்.

MOST READ: குபேரன் அருளால் கோடி கோடியாக லாபம் கிடைக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

ஹீமோதெரபி

ஹீமோதெரபி

ஹீமோதரபி சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சிகிச்சையின் போது கைரேகை அழிந்து போகக்கூட வாய்ப்புண்டு.

 டுவின்ஸ்

டுவின்ஸ்

இரட்டையர்களாகப் பிறப்பவர்களுக்கு டிஎன்ஏ என்று சொல்லப்படும் மரபணு பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் identifical twins என்று சொல்லப்படும் இரட்டையர்களின் கைரேகை என்பது கட்டாயமாக வேறு வேறாகத்தான் இருக்கும்.

ஆய்வு

ஆய்வு

கைரேகை பற்றி ஆய்வு செய்யும் படிப்புக்கு Dactyloscopy என்று பெயர்

கரடி

கரடி

கோலாக்கரடி என்னும் ஒருவகைக் கரடிக்கும் மனிதர்களைப் போலவே கைரேகை இருக்கும். கோலாக் கரடிக்கும் நம்முடைய கை பெருவிரல் போல தான் ரேகை இருக்கும்.

MOST READ: இந்த மண்டையில கூடி முடி வளர வைக்கணுமா? இந்த 4 பொருளையும் தேய்ங்க...

பிடிமானம்

பிடிமானம்

நம்முடைய கையில் ரேகை இருப்பதால் தான் நம்மால் எல்லா பொருள்களையும் தாங்கிப் பிடிக்க முடிகிறது. இல்லையென்றால் எந்த பொருளையும் கையில் பிடிக்க முடியாது. வழுக்கிக் கொண்டு போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: zodiac ஜோதிடம்
English summary

interesting facts about thumb lines

Although we believe that the lines in our palm determine our fate, future and fortune; but, as a matter of fact, it’s our thumb that reveals our whole identity to a palmist. Scientifically speaking, the thumb is closely associated with brain’s development, though in palmistry, the thumb is been closely linked with an individual’s willpower. Read on to know what your thumb says about your fate.
Desktop Bottom Promotion