For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்தவங்க உடம்ப தாண்டிட்டி போனா என்ன அர்த்தம்னு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... கவனமா இருங்க...

இந்து புராணங்களில் எத்தனை வகையான சாபங்கள் நமக்கு உண்டாகும் என்று கூறப்பட்டிருக்கிறது என்ற சுவாரஸ்யமான விஷயத்தை தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அதிலும் 12 வகையான சுவாரஸ்யமான சாபங்களின் வகைகளைப் பற்ற

By Mahibala
|

பெரியவங்க சாபம் நம்மள நல்லாவே வாழ விடாது. பெத்தவங்க சாபத்துக்கு ஆளாகக் கூடாது. பொம்பள சாபம் பொல்லாதது இப்படி நிறைய கேள்விப்பட்டிருப்போம். சாபம் அப்படிங்கறது என்ன? அதுல உண்மையாவே இத்தனை வகை இருக்கா?

Interesting Curses in Hindu Puranas

சாபங்களின் வகைகள் மொத்தம் எத்தனை, அதில் எந்தெந்த சாபங்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்று நம்முடைய புராண இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன என்பதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாபங்களின் வகைகள்

சாபங்களின் வகைகள்

சாபங்கள் ஒன்று மட்டுமல்ல. சாபங்களில் பல வகைகள் உண்டு. நம்முடைய புராணங்களும் இதிகாசங்களும் 11 வகையான சாபங்கள் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. அவை என்னவென்றால், பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், ரிஷி சாபம், குலதெய்வ சாபம் ஆகியவை தான் அவை. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

MOST READ: அரிசி டயட் பத்தி தெரியுமா?... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...

பெண் சாபம்

பெண் சாபம்

பெண்களை ஏமாற்றுவதும் உடன் பிறந்த பெண்களை சரியாக மரியாதை கொடுக்காமல் அடிமைகளைப் போல நடத்துவது, காதலியை அல்லது மனைவியை பாதியிலேயே கைவிட்டு விடுவது ஆகிய செயல்களைச் செய்தால் பெண் சாபம் உண்டாகும். இந்த பெண் சாபத்தின் மூலம் உங்களுடைய வம்சமே அழிந்துவிடும்.

பிரேத சாபங்கள்

பிரேத சாபங்கள்

இறந்து போன மனிதர்களின் உடலை வைத்திருக்கும் இடத்திலேயே அந்த இறந்து போன மனிதரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாக பேசக் கூடாது. பிணத்தின் உடலைத் தாண்டிச் செல்லக்கூடாது. இறந்த உடலுக்கு இறுதி காரியங்கள் செயய் விடாமல் தடுப்பது. பிரச்சினை செய்வது, இறந்தவர்களை அவருக்கு உரிமையுடைய உறவினர்களைப் பார்க்கவிடாமல் தடுத்து நிறுத்துவது ஆகியவை பிரேத சாபத்தில் சேரும். இது இப்படியெல்லாம் நடந்து கொள்பவரின் ஆயுளைக் குறைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

குரு சாபம் (அ) பிரம்ம சாபம்

குரு சாபம் (அ) பிரம்ம சாபம்

அந்த காலத்தில் பெற்றோர்களை விடவும் குருவுக்கு பயந்து நடுங்குவார்கள். ஆனால்இந்த காலத்தில் ஆசிரியங்கள் தான் மாணவர்களுக்கு பயந்து நடுங்குகிறார்கள். ஆனால் நம்முடைய இதிகாசங்களில் நமக்கு கல்வி கற்பித்த குருவை மறப்பது, அவரிடம் கற்ற கல்வியை தவறாகப் பயன்படுத்துவது, அடுத்தவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் நமக்குள்ளேயே மறைத்துக் கொள்வது ஆகியற்றால் குரு சாபம் நேரிடும் என்றும் இதனால் படிப்பு இல்லாமல் மறதி அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பூமி சாபம்

பூமி சாபம்

சிலர் யார் மேலாவது கோபம் வந்தால், அவர்களிடம் காட்ட முடியாமல் தங்களுடைய காலாலே நிலத்தை எட்டி வேகமாக மிதிப்பார்கள். அப்படி ஆத்திரத்தில் பூமியை காலில் கோபமாக மிதிப்பது, தேவையில்லாமல் பள்ளங்களைத் தோண்டுவதும், பாழ்படுத்துவது, அடுத்தவர்களுடைய நிலங்களைப் பறித்துக் கொள்வது ஆகியவற்றால் ஏற்படுவது தான் பூமி சாபம். இந்த பூமி சாபம் என்பது நரக வேதனையைக் கொடுக்கக் கூடியது.

தண்ணீர் சாபம்

தண்ணீர் சாபம்

தண்ணீரின் அருமை கோடையில் தான் தெரியும் என்று சொல்வார்கள். அதனால் தண்ணீரை மட்டும் எப்போதுமே வீணடிக்கக் கூடாது. அடுத்தவர்கள் குடிக்கும் தண்ணீரை பாழாக்குவது, ஓடும் ஆற்று நீரில் அசுத்தம் செய்வது ஆகியவற்றால் தண்ணீர் சாபம் உண்டாகும். தண்ணீர் சாபத்தினால் நீங்கள் வீட்டில் தண்ணீர் பஞ்சத்தால் குடிக்கும் தண்ணீருக்கே நீங்கள் திண்டாட வேண்டியிருக்கும்.

MOST READ: இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...

மர சாபம்

மர சாபம்

மரம் வெட்டுவது சூழலுக்கு நல்லதல்ல. மழை வருவதைத் தடுக்கும் என்று தான் படித்திருப்போம். பச்சை மரத்தை வெட்டுவது, பழம் தரும் மரங்களை வெட்டுவது, மரங்கள் நிறைந்த இடத்தில் மரங்களை வெட்டிவிட்டு, அந்த இடத்தை வீடு கட்டப் பயன்படுத்துவது ஆகியவை விருட்ச சாபம் என்னும் மர சாபத்தை ஏற்படுத்தும். இந்த மர சாபத்தினால் கடன் மற்றும் நோயை ஏற்படுத்தும்.

தேவர்கள் சாபம்

தேவர்கள் சாபம்

கடவுளுக்குச் செய்கின்ற பூஜைகளைப் பாதியில் நிறுத்தி வைப்பது, தெய்வங்களை இகழ்ந்து பேசுவது ஆகியவற்றினால் தான் தேவர்களின் சாபம் உண்டாகும். தேவர்களுடைய சாபம் என்பது உங்களிடம் இருந்து உங்களுடைய உறவினர்களைப் பிரித்து உங்களை தனி மரமாக்கி விடும்.

சர்ப்ப தோஷம்

சர்ப்ப தோஷம்

பாம்புகளைக் கொல்வது, பாம்புகள் தங்கும் இடங்களை ஒழிப்பது ஆகியவற்றால் சாபங்கள் ஏற்படும். அதுதான் சர்ப்ப தோஷம். அப்படி செய்வதன் மூலம் கால சர்ப்ப தோஷம் உண்டாகும். அதனால் திருமணத் தடைகள் போன்றவை ஏற்படும்.

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம்

நம்முடைய முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி மற்றும் மற்ற காரியங்களைச் செய்யாமல் மறந்து போவது, மறுப்பது வீட்டில் உள்ள முன்னோர்களை உதாசீனப்படுத்துவது ஆகியவற்றால் ஏற்படுவது தான் பித்ரு தோஷம்.

பசு தோஷம்

பசு தோஷம்

பசு வதை செய்வது, காளை மாடுகளை பலி கொடுக்க இறைச்சிக்குப் பயன்படுத்துவது, கன்றுடன் இருக்கின்ற பசுவை தன் தாயிடம் இருந்து பிரிந்து செல்வது ஆகியவற்றால் உண்டாவது தான் இந்த பசு தோஷம். இந்த தோஷம் உண்டானால் உங்களுடைய வீட்டிலோ அல்லது குடும்பத்திலோ எந்த வளர்ச்சியும் ஏற்படாமல் போகுமாம்.

முனிவர் தோஷம்

முனிவர் தோஷம்

கடவுளின் மீது உண்மையான பக்தியைக் கொண்டவர்களிடமும் இறைவனின் சீடர்களாகவும் இருப்பவர்களை மதிக்காமல் அவதிப்பது தான் முனிவர் தோஷம் ஏற்படும். இந்த முனிவர் சாபம் மற்ற சாபங்களைப் போல் கிடையாது. இந்த சாபத்தின் மூலம் வம்சமே அழியும் கொடுமை கூட நேருமாம்.

MOST READ: நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?

குல தெய்வ சாபம்

குல தெய்வ சாபம்

நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு வேலை இருந்தாலும் குல தெய்வ வழிபாடு மேற்கொள்வதை மறக்காமல் செய்து விடுவார்கள். ஆனால் இன்றைய சூழலில் பலருக்குத் தங்களுடைய குலதெய்வமே எதுவென்று தெரியாது. ஆனாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது தான் நல்லது. அப்படி குவதெய்வ வழிபாடு மேற்கொள்வதை நிறுத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Curses in Hindu Puranas You Probably Don't Know

in hindu epic, there have been some interesting shraaps tha t have been addressed to gods and mortals that apparently changed the course of divine history.
Story first published: Tuesday, May 21, 2019, 17:07 [IST]
Desktop Bottom Promotion