For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா?

ஆன்மாவின் சுழற்சியில் மனித பிறவி என்பதுதான் அதற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும். மனித உடல் என்பது ஆன்மாக்களுக்கு புதையலை போன்றது.

|

ஆன்மாக்களுக்கு அழிவு என்பது கிடையாது என்று நாம் நன்கு அறிவோம். ஏனெனில் ஆன்மாக்களின் பயணமானது ஒரு சுழற்சியை அடிப்படையாக கொண்டதாகும். ஆன்மா அதன் அனைத்து பயணங்களையும் முடித்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிறவிகளை எடுத்து கொண்டுதான் இருக்கும்.

How Many Lives a Soul Goes Through To Become a Human Body

ஆன்மாவின் சுழற்சியில் மனித பிறவி என்பதுதான் அதற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும். மனித உடல் என்பது ஆன்மாக்களுக்கு புதையலை போன்றது. ஆனால் அந்த புதையலை அடைய ஆன்மாக்கள் பல காலம் காத்திருக்க வேண்டும். மனித பிறவி பெரும்பாலும் ஆன்மாக்களுக்கு முதல் பிறவியாகவும் இருக்காது, கடைசி பிறவியாகவும் இருக்காது. இந்த பதிவில் ஆன்மாவின் பயணம் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்மா மரணமடையாது

ஆன்மா மரணமடையாது

நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் ஆன்மாக்கள் எப்பொழுதும் மரணமடையாது. மரணம் என்பது உடலுக்கு மட்டும்தான். மனித உடலை விட்டு பிரிந்த பின் அது மீண்டும் தன் பயணத்தை தொடங்கும், இறுதியில் அதன் கர்மாவை பொறுத்து மோட்சத்தை அடையும். பகவத் கீதையின் படி நமது ஆன்மா மனித உருவெடுக்க பல ஜென்மங்கள் காத்திருக்க வேண்டும்.

மனித வாழ்க்கையின் ரகசியம்

மனித வாழ்க்கையின் ரகசியம்

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு கூறிய உபதேசத்தின் படி ஆன்மா மனித பிறவி எடுக்க 84 இலட்சம் உயிர் வகைகளை கடந்து வரவேண்டும். மனித பிறவியெனுக்கும் முன் ஆன்மாக்கள் கரப்பான் பூச்சி, பல்லி, எலி போன்ற பல பிறவிகளை எடுக்க நேரிடும். சில உயிரினங்களை பார்த்தால் நமக்கு பிடிக்காமல் போகவோ அல்லது பயமாகவோ இருப்பதற்கு காரணம் கடந்த ஜென்மத்தில் நாம் அந்த உயிரினமாக பிறந்ததாக கூட இருக்கலாம்.

புண்ணியங்கள்

புண்ணியங்கள்

கர்மா எனப்படும் புண்ணியங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பிறவியில் நீங்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களே அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக பிறக்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்யும்.

உயிரினங்களின் எண்ணிக்கை

உயிரினங்களின் எண்ணிக்கை

அறிவியல் ஆராய்ச்சிகளின் படி பூமியில் மொத்தம் 84 இலட்சம் வித்தியாசமான உயிரினங்கள் உள்ளது. இதன்மூலம் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளது உண்மைதான் என்று தெரிகிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது எனில் கடல் சார்ந்த உயிரினங்கள் 9 இலட்சமும், தாவரங்கள் 20 இலட்சமும், பூச்சி வகைகளில் 11 இலட்சமும், பறவைகளில் 10 இலட்சமும், விலங்குகளில் 30 இலட்சமும், மனிதன் சார்ந்த உயிரினங்கள் 4 இல்லாதிக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.

MOST READ:எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்கும் தகுதி இருக்கிறது தெரியுமா?

ஆன்மாவின் பின்புலம்

ஆன்மாவின் பின்புலம்

நாம் விலங்கிலிருந்து உருவானவர்கள் என்று கூறப்படுகிறது, இந்த கோட்பாடும் உண்மைதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மிருகம் இறக்கும்போது அதன் ஆன்மா வெளிப்படுகிறது, அதைவிட சிறந்த பிறவியை அதற்குப்பின் அது அடைகிறது. நமக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நினைவுகள் அடிக்கடி நமக்குள் எழலாம், அதற்கு காரணம் அது நம் கடந்த கால மிருக வாழ்வில் நடந்ததாக இருக்கலாம்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

புராணங்களில் கூற்றின் படி ஒருவர் இயற்கை மாறாக விபத்தினாலோ அல்லது கொலை செய்யப்பட்டு இறந்தாலோ அந்த ஆன்மா ஆன்மீக உலகத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட இடத்தில் சிக்கிக்கொள்ளும். அதன் காலம் முடியும்வரை அதனால் அடுத்த பயணத்தை தொடங்க இயலாது.

 புதுப்பிறவி

புதுப்பிறவி

இந்து மதத்தின் படி ஆன்மாவிற்க்கு அழிவு என்பதே இல்லை. பொதுவாக ஒருவர் இறந்த பிறகு இறுதி சடங்கின் போது அவர்கள் தலையில் அடிப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் இந்த பிறவியின் நினைவுகளை விட்டுவிட்டு மீண்டும் புதுவாழ்வை தொடங்குவதற்காகத்தான். அதேபோல ஆன்மா உடலை விட்டு பிரிந்த பிறகு உடனடியாக அடுத்த பிறவிக்கு தயாராகாது. அதற்காக சில காலம் காத்திருக்க வேண்டும்.

ஒரே பாலினம்

ஒரே பாலினம்

ஒரு ஆன்மா தொடர்ந்து மூன்று ஜென்மங்களில் ஒரே பாலினத்தில் பிறந்த நான்காவது ஜென்மத்தில் அதற்கு எதிர்பாலினமாக பிறப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சரியான ஆதாரம் இதுவரை இல்லை.

MOST READ:கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சினைகளை விரட்ட இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும் தெரியுமா?

மோட்சம்

மோட்சம்

ஒரு ஆன்மா தனது அனைத்து பிறவிகளிலும் புண்ணியங்களை செய்யும் எனில் அது மனித பிறவிக்கு பிறகு வேறு எந்த பிறவியும் எடுக்காது. மோட்சத்தை அடைந்து அதன்பின் அந்த ஆன்மா மகிழ்ச்சியாக வாழும். ஆனால் ஆன்மா பயணத்தை முடிப்பதற்குள் மோட்சத்தை அடைவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: ghost birth animals human lord krishna
English summary

How Many Lives a Soul Goes Through To Become a Human Body

Here is the fact behind a human soul goes through many transformations before it can actually get a human body.
Desktop Bottom Promotion