For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கடவுள்களின் படங்கள் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் தெரியுமா?

கோவிலை பொறுத்தவரையில் கடவுள் சிலைகள் இருக்கும் நிலைக்கும், எண்ணிக்கைக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், வீட்டில் இருக்கும் பூஜையறைக்கென சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளது. அதன்படியே பூஜ

|

மற்ற மதங்களை போல் அல்லாமல் இந்து மதத்தில் உருவ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோவில்கள் இருந்தாலும் வீட்டில் ஒரு பூஜையறை வைத்து கடவுளை வழிபடுவது கடவுளை அடையும் வழி என பலரும் நம்புகிறார்கள். அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பவை முடிவில்லா சக்தி மற்றும் வல்லமையின் வெளிப்பாடாக இருக்கிறார்.

How many idols of are auspicious to be kept in home?

கடவுள் நம்பிக்கை இருப்பது நம்மை கஷ்டங்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி நம்மை பாவச்செயல்களை செய்வதில் இருந்தும் தடுக்கிறது. சாஸ்திரங்களின் படி அனைத்து வீடுகளிலும் கடவுளின் உருவங்கள் வைத்து முறையாக வழிபடவேண்டும். அதேசமயம் கடவுளை வழிபடும் முறை தவறினால் அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூஜையறை

பூஜையறை

கோவிலை பொறுத்தவரையில் கடவுள் சிலைகள் இருக்கும் நிலைக்கும், எண்ணிக்கைக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், வீட்டில் இருக்கும் பூஜையறைக்கென சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளது. அதன்படியே பூஜையறை அமைக்கப்பட வேண்டும், இல்லயெனில் கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

தனி பூஜையறை

தனி பூஜையறை

பூஜையறை எப்பொழுதும் தம்பதிகள் இருக்கும் படுக்கையரைக்குள் கட்டப்படக்கூடாது. தனி அறையாகவோ அல்லது வேறு அலமாரிகளில்தான் கடவுள் சிலைகள் வைக்கப்படவேண்டும். கிழக்கு திசையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஏனெனில் கடவுள் இருக்கும் அறைகளில் ஒருபோதும் பாலியல் செயல்களில் ஈடுபடக்கூடாது.

சமையலறைக்கு உள்ளேயோ, எதிரிலேயோ இருக்கக்கூடாது

சமையலறைக்கு உள்ளேயோ, எதிரிலேயோ இருக்கக்கூடாது

வீட்டிற்குள் இருக்கும் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது சமையலறை ஆகும். ஏனெனில் அங்கு அனைத்தும் சுத்தமாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் குப்பைத்தொட்டியும் சமையலறைக்குள்தான் இருக்கும். எனவே அங்கு ஒருபோதும் கடவுள் சிலைகள் வைக்கப்படக்கூடாது. அதேபோல சமைக்கும்போது வெளிப்படும் புகை படும்படி சமையலறைக்கு நேரெதிரிலும் பூஜையறை வைக்கப்படக்கூடாது.

MOST READ: ஏப்ரல் மாதத்தில் பிறந்தவங்க உங்கக்கூட இருக்காங்களா? அப்ப நீங்க ஜாக்கிரதையா இருக்கனும் ஏன் தெரியுமா?

எப்போதும் பூட்டக்கூடாது

எப்போதும் பூட்டக்கூடாது

பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கம் நாம் வீட்டை விட்டு நீண்ட நாட்கள் வெளியே செல்லும்போது பூஜையறையை பூட்டிச்செல்வது. இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். ஏனெனில் அவ்வாறு பூஜையறையை பூட்டுவது உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை சக்திகளை வெளியேற்றும்.

சுத்தம் செய்ய வேண்டும்

சுத்தம் செய்ய வேண்டும்

உங்களால் சில நாட்கள் குளிக்காமல் வெளியே செல்ல இயலுமா? அதேபோலத்தான் பூஜையறையையும் பராமரிக்க வேண்டும். தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்காது.

எத்தனை சிலைகள் வைக்க வேண்டும்?

எத்தனை சிலைகள் வைக்க வேண்டும்?

கோவிலுக்கும், வீட்டு பூஜையறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. வீட்டிற்குள் ஒரு பகுதியாக கோவில் இருக்கலாம், ஆனால் கோவிலின் பகுதியாக வீடு இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை. ஏனெனில் வீடு என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும், உலகத்தை அனுபவிக்கவும் இருக்கும் இடமாகும், ஆனால் கோவில் என்பது கடவுள் வசிக்கும் புனிதமான இடமாகும். கோவிலுக்குள் எத்தனை சிலைகள் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் வீட்டு பூஜையறை என்று வரும்போது அதற்கென சில விதிமுறைகள் உள்ளது.

MOST READ: தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மாவிற்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரே கடவுளின் மூன்று சிலைகள்

ஒரே கடவுளின் மூன்று சிலைகள்

மூன்று முக்கிய பெண் தெய்வங்களான துர்கை, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மியை நீங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே கடவுளின் மூன்று சிலைகளை வீட்டில் ஒருபோதும் வைக்கக்கூடாது. இது உங்கள் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறு வைக்கும் போது உங்கள் வீட்டின் பொருளாதாரம் மோசமடைந்து கொண்டே செல்வதை நீங்கள் உணரலாம்.

மூன்று விநாயகர் படங்கள்

மூன்று விநாயகர் படங்கள்

பழங்கால வேதங்களின் படி உங்கள் வீட்டில் மூன்று விநாயகர் படங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது புனிதமற்றதாக கூறப்படுகிறது. இதனால் உங்கள் வீட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும், மேலும் ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பும் ஏற்படும்.

இரண்டு சிவலிங்கம்

இரண்டு சிவலிங்கம்

உங்களால் தொடர்ச்சியாக வழிபட முடியாதெனில் ஒரு சிவலிங்கத்தை கூட வீட்டில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இரண்டு சிவலிங்கம் என்பது வைக்கவே கூடாததாகும். வீட்டில் ஒரு சிவலிங்கத்தை வைக்கவே பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது. எனவே இரண்டு சிவலிங்கம் வைக்கப்படும்போது அது உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்துவதுடன் உங்கள் ஆராவையும் பாதிக்கும்.

வைக்கக்கூடாத கடவுள்கள்

வைக்கக்கூடாத கடவுள்கள்

உங்கள் வீட்டில் ஒருபோதும் கிருஷ்ணர் ராதை, ருக்மிணி மற்றும் மீராவுடன் இருப்பது போன்ற சிலைகளை வைக்கக்கூடாது. அதேபோல முருகன் வள்ளி மற்றும் தேவயானியுடன் இருப்பது, விநாயகர் சித்தி மற்றும் புத்தியுடன் இருப்பது போன்ற சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது. இது கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தி அவர்களின் பிரிவிற்கு வழிவகுக்கும்.

MOST READ: பெண்களை பொறுத்தவரை இந்த 7 குணங்கள் இருக்கும் ஆண்கள்தான் காதல் மன்னர்களாம் தெரியுமா?

எங்கு வைக்க வேண்டும்?

எங்கு வைக்க வேண்டும்?

சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்களே அனைத்து கடவுள்களுக்கும் மேலானவர்கள் என்று வேதங்கள் கூறுகிறது. எனவே பூஜையறை அமைக்கும் போது மற்ற கடவுள்களின் சிலைகள் இவர்களின் சிலைக்கு கீழே இருக்குமாறு அமைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How many idols of are auspicious to be kept in home?

One can keep endless number of Idols and photos of Gods and Goddess inside a temple, but for a pooja room within home, there are certain limitations.
Desktop Bottom Promotion