For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் சொல்ல முடியாத பயங்களுக்கும் உங்கள் முன்ஜென்மத்திற்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா?

கடந்த ஜென்மத்தின் நினைவுகள் நிகழ்காலத்தை பாதிக்கும் நிகழ்வுகள் நமது இதிகாச காலங்களில் இருந்தே இருக்கிறது.

|

ஒரே சூழ்நிலைக்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதத்தில் நடந்து கொள்வதை கவனித்திருக்கிறீர்களா? சில கோபப்படுவார்கள், சிலர் அமைதியாக இருப்பார்கள், சிலர் சிரித்து விடுவார்கள். நமது நிகழ்கால பழக்கவழக்கங்களுக்கும் நம்முடைய கடந்த ஜென்மத்திற்கும் பல்வேறு தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளது.

How does your past life affects your personality?

கடந்த ஜென்மத்தின் நினைவுகள் நிகழ்காலத்தை பாதிக்கும் நிகழ்வுகள் நமது இதிகாச காலங்களில் இருந்தே இருக்கிறது. விஞ்ஞானமும் கடந்த ஜென்ம நினைவுகள் இந்த ஜென்மத்தில் வர வாய்ப்புள்ளதாக கூறுகிறது. இந்த பதிவில் உங்களின் கடந்த ஜென்மம் இந்த ஜென்மத்தை எப்படி பாதிக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆழ் மனது

ஆழ் மனது

நமது கடந்த கால வாழ்க்கை நமது ஆழ்மனதிலும், ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது மூன்று வழிகளில் வெளிப்பட வாய்ப்புள்ளது. அந்த வழிகள் மனதின் செயல்பாட்டு தன்மை, நமது விதி மற்றும் நாம் செய்யும் காரியங்களை ஏன் செய்கிறோம் அதாவது நம் இயல்பு.

மனதின் பதிவுகள்

மனதின் பதிவுகள்

நமது ஆழ் மனதில்தான் கடந்த காலம் பற்றிய நினைவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது நமக்கே தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு காரணமே இல்லாமல் ஒருவர் ஏன் கோபப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவரது கோபம் அவரது கடந்தகால வாழ்க்கையில் ஒருவருக்கு எதிரான பழிவாங்கும் உணர்விலிருந்து தோன்றுவதாக இருக்கலாம்.

குணாதிசயங்கள்

குணாதிசயங்கள்

ஒரு சிலர் சியா வித்தியாசமான குணங்களை குழந்தை பருவத்திலேயே காட்டினால் அது அவர்களின் கடந்த ஜென்மத்தில் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்க்கு ஒருவர் குழந்தை பருவத்திலேயே வயதிற்கு மீறிய கோபத்தை காட்டினால் அது அவரின் கடந்த காலத்தில் இருந்து பெறப்பட்ட குணமாகும்.

MOST READ: நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிவது எப்படி தெரியுமா?

முன்ஜென்மம்

முன்ஜென்மம்

நம்முடைய இந்த ஜென்ம குணாதிசயங்களில் 49 சதவீத குணாதிசயங்கள் நாம் நம்முடைய கடந்த கால ஜென்மங்களில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில் சில மோசமான குணங்களும் இருக்கலாம். அதனை ஆர்மபத்திலேயே கண்டறியாவிட்டால் அது மேலும் மோசமான நிலையை அடையக்கூடும்.

தூண்டுதல்

தூண்டுதல்

சிலசமயம் ஒருவரின் கடந்தகால வாழ்க்கையின் பண்பு தற்போதைய வாழ்க்கையில் ஒரு சூழ்நிலையால் தூண்டப்படலாம். உதாரணத்திற்கு ஒருவர் நெருப்பை கண்டு அதிகம் பயப்படுகிறார் என்றால் அந்த பயம் அவரது கடந்த கால வாழ்க்கையில் உருவானதாக இருக்கலாம். இப்போது அது மேலும் அதிகரித்திருக்கும்.

புதிய குணங்கள்

புதிய குணங்கள்

நம்முடைய அனைத்து குணங்களுமே கடந்த காலத்தில் இருந்துதான் பெறப்பட்டதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் 5 சதவீத குணங்கள் இந்த ஜென்மத்தினுடையதாக இருக்கும் மீதியிருக்கும் குணங்கள் நமது கடந்த கால வாழ்க்கை சுழற்சிகளில் இருந்து வந்ததாக இருக்கும்.

MOST READ: அனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா?

தீய குணங்கள்

தீய குணங்கள்

ஒருவரின் பெரும்பாலான தீய குணங்கள் அவர்களின் கடந்த ஜென்மத்தில் இருந்து வந்ததாகத்தான் இருக்கும். அந்த தீய குணங்கள் அவர்களின் நிகழ்காலத்தை பாதிப்பதாக இருக்கும். எனவே ஒருவர் முடிந்தவரை பல எதிர்மறை பண்புகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

மையம்

மையம்

நமது ஆழ் மனது என்பது ஒரு மையமாக செயல்படுகிறது. அதன்படி நீங்கள் ஒரு பிறவியில் எவ்வளவு நன்மைகளை செய்கிறீர்களோ அந்த நன்மைகளும், குணங்களும் இந்த ஜென்மம் மட்டுமின்றி அனைத்து ஜென்மங்களிலும் பிரதிபலிக்கும்.

ஆளுமை குறைபாடுகள்

ஆளுமை குறைபாடுகள்

நாம் இந்த ஜென்மத்தில் அதிக துயரங்களை அனுபவிக்க காரணம் நம்முடைய கோபம், வஞ்சம், வெறுப்பு போன்ற எதிர்மறை குணங்கள்தான். எனவே நீங்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல இந்த ஜென்மத்தில் முடிந்தளவு நலலவராக இருக்க பழகுங்கள். இந்த எதிர்மறை குணங்கள் உங்களுக்கு மோசமான கர்மாவை ஏற்படுத்தும். இது இந்த ஜென்மம் மட்டுமின்றி உங்களின் அனைத்து ஜென்மங்களிலும் பிரதிபலிக்கும்.

MOST READ: நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்

சொல்ல முடியாத பயங்கள்

சொல்ல முடியாத பயங்கள்

சிலருக்கு ஒரு விஷயத்திற்கு ஏன் பயப்படுகிறோம் என்றே தெரியாது. ஆனால் அதனை கண்டு பயப்படுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் கடந்த ஜென்மத்தில் அவர்களுக்கு மரணம் அதனால் ஏற்பட்டதாக இருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவர் விமானத்தில் பயணிக்க பயப்படுகிறார் என்றால் அவர் கடந்த ஜென்மத்தில் விமான விபத்தில் இறந்திருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How does your past life affects your personality?

Our personalities has a lot to do with who we were in our previous lives.
Story first published: Friday, June 28, 2019, 11:11 [IST]
Desktop Bottom Promotion