For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிக்கு இந்த கலர் கல் மோதிரம் மட்டும் போடுங்க... வேற போட்டா என்ன ஆகும்?

ஜோதிட அடிப்படையில் ராசிக் கற்கள் குறித்த தொகுப்பு பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களுக்காக விளக்கப் போகிறோம். தெரிந்து உங்களுடைய ராசிக்கேற்றதை வாங்கி அணியுங்கள்.

|

ரத்தினக் கற்கள் ஒன்பது என்பதை நாம் அறிவோம். அவற்றை நவரத்தினம் என்று அழைப்போம். இந்த வகை ரத்தினக் கற்கள் ஒருவர் வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கற்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மோதிரம் அல்லது செயின் போன்றவற்றை கை மற்றும் கழுத்து பகுதியில் அணிவதால் ஒருவித சக்தி கிடைக்கிறது.

gemstones

மனித வாழ்க்கை மற்றும் அவரது விதியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இந்த ரத்தினக் கற்களுக்கு உண்டு. இந்து மத ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற ரத்தினக் கற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷ ராசி

மேஷ ராசி

மேஷ ராசிக்கேற்ற ரத்தினக் கற்கள், மாணிக்கம், வைரம் மற்றும் ஓனிக்ஸ். குஜ தோஷத்தின் தீய விளைவுகளை இந்த கற்கள் குறைக்க உதவுகின்றன. இந்த கற்களை அணிந்துக் கொள்ள உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. நீங்கள் பயன்படுத்த வேண்டிய உலோகம் தாமிரம் அல்லது வெள்ளி. இந்த மோதிரம் தயார் செய்யப்பட்டவுடன் சுத்தமான பாலில் அதனை சுத்தம் செய்ய வேண்டும்.

MOST READ: ஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும்? தினமும் சொன்னால் என்ன நடக்கும்?

ரிஷப ராசி

ரிஷப ராசி

ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் அணிய வேண்டிய கல் வைரம். இவர்களுக்கு மற்றொரு துணை இரத்தினக்கல் ஒபேல். வைரத்தின் நிறம் வெண்மை மற்றும் இது மிகவும் மிளிரும் தன்மைக் கொண்டது. சுக்ரனின் தீய பலன்களை இது குறைக்க உதவுகிறது. இந்த கல்லை அணிந்துக் கொண்டவுடன், ரிஷப ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் உயர்வு போன்றவை உண்டாகும். இந்த கல்லை அணிந்துக் கொள்ள உகந்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த கல்லை பால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இந்த மோதிரம் செய்ய பயன்படுத்த வேண்டிய உலோகம் தங்கம் மட்டுமே.

மிதுன ராசி

மிதுன ராசி

இந்த ராசிக்குரிய ரத்தினக்கல் மரகதம் . இதன் துணைக் கற்கள் ஓனிக்ஸ் மற்றும் பிரோஸ் ஆகும். இந்த கல் பச்சை நிறத்தில் இருக்கும். பூதங்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும் தன்மை இந்த கல்லுக்கு உண்டு. வியாபார வளர்ச்சி, மன அமைதி, உடல் நலத்தில் பாதுகாப்பு போன்றவற்றிக்கு இந்த கல் உதவுகிறது. இந்த கல்லை அணிந்துக் கொள்ள உகந்த நாள் புதன் கிழமை. குறிப்பாக சூரிய உதயத்தின் போது இதனை அணிந்து கொள்ளலாம். இந்த கல்லை அணிந்து கொள்வதற்கு முன்னர் பால் மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்து பின்பு அணிந்துக் கொள்ள வேண்டும். தங்கம் கொண்டு இந்த மோதிரத்தை செய்ய வேண்டும்.

கடக ராசி

கடக ராசி

கடக ராசியைச் சேர்ந்தவர்கள் முக்கிய ரத்தினக்கல்லாக அணிந்துக் கொள்ள வேண்டியது முத்து. முத்து வெள்ளை நிறத்தில் காணப்படும். சந்திர கிரகத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்க இது உதவுகிறது. மன அமைதியைத் தந்து, மனதில் உள்ள டென்ஷனைப் போக்குகிறது. முத்தை பாலில் சுத்தம் செய்து, வெள்ளி உலோகத்தால் மட்டுமே செய்யப்பட்ட ஆபரனத்துடன் இணைத்து அணிந்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பு இதனை அணிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

சிம்ம ராசி

மாணிக்கக் கல் இந்த சிம்ம ராசியினருக்கு உகந்த கல் ஆகும். சூரிய கிரகத்தின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க உதவும். பொருளாதரத்தில் லாபம் உண்டாகும். இந்த ராசியை உடையவரின் தந்தையின் உடல்நலம் பாதுகாக்கப்படும். நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மாணிக்கக் கல்லை பாலிலும் பின்பு நீரிலும் சுத்தம் செய்து, வெள்ளி உலோகம் கொண்டு ஆபரணம் செய்து அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மோதிர விரலில் மட்டுமே இந்த மோதிரத்தை அணிய வேண்டும். ஞாயிறு காலை சூரிய உதயத்திற்கு முன்பு இதனை அணிந்து கொள்வது விசேஷமானது.

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் அணிந்து கொள்ள வேண்டியது பச்சைக் கல். இவர்களின் துணை கற்கள் மரகதம் மற்றும் நிக்ஸ். இந்த கல்லின் நிறம் பச்சை. பூதங்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து, பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் கொடுத்து ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குகிறது. மோதிரம் செய்வதற்கு முன் இந்த கல்லை பால் மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து தங்கம் கொண்டு ஆபரணம் செய்து அணிந்து கொள்ளலாம். இந்த மோதிரம் அணிந்து கொள்ள உகந்த நாள் புதன் கிழமை. சுண்டு விரலில் சூரிய உதயத்திற்கு முன் இந்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

MOST READ: உங்க காதலி எவ்ளோ கோவமா இருந்தாலும் இத மட்டும் சொல்லுங்க... அப்புறம் உங்களயே சுத்தி வருவாங்க...

துலாம் ராசி

துலாம் ராசி

துலாம் ராசியினரின் அதிர்ஷ்டக் கல் வைரம் . இவர்களின் துணைக் கல் ஒபேல். இந்த வைரக் கல் வெண்மை நிறத்தில் இருப்பதால் சுக்கிர கிரக தசாவின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் அதிகமான வளத்தை வழங்குகிறது வைரக் கல். வைரத்தைப் பால் மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்து தங்கம் கொண்டு ஆபரணம் செய்து இதனை அணிந்து கொள்வது நல்லது. இந்த கல்லை அணிந்து கொள்ள உகந்த நாள் வெள்ளிக்கிழமை. சூரிய உதய நேரத்தில் இதனை அணிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினரின் அதிர்ஷ்டக் கல் பவளம். இது சிவப்பு நிறத்தில் காணப்படும் . இதன் துணைக் கல் லோக் ஓனிக்ஸ். குஜ தோஷத்தைக் குறைக்க இந்தக் கல் உதவுகிறது. இந்த கல்லை அணிந்திருப்பவர்களுக்கு உண்டாகும் எதிர்மறை அதிர்வுகளை விரட்டி அடிக்கிறது. பவளக்கல்லை பால் மற்றும் நீரில் சுத்தம் செய்து வெள்ளி உலோகம் கொண்டு மோதிரம் செய்து அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய்க் கிழமை சூரிய உதய நேரத்தில் இந்த மோதிரத்தை அணிந்துக் கொள்ளலாம். மோதிர விரலில் மட்டுமே இதனை அணிந்துக் கொள்ள வேண்டும்.

தனுசு ராசி

தனுசு ராசி

தனுசு ராசியினர் அணிந்து கொள்ள வேண்டிய ரத்தினக் கல் புஷ்பராகம். இவர்களின் துணைக் கல் டோபாஸ். புஸ்பராகம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். குரு கிரகத்தின் தோஷங்களைக் குறைத்து இதனை அணிந்து கொள்பவரின் பொருளாதர நிலையை மேம்படுத்தி , கல்வியில் முன்னேற்றத்தைத் தருகிறது. இந்த கல்லை பால் கொண்டு சுத்தம் செய்து தங்கத்துடன் சேர்த்து ஆபரணம் செய்து அணிந்து கொள்ளலாம். இந்த கல்லை அணிந்துக் கொள்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை . அதிகாலை நேரத்தில் ஆட்காட்டி விரலில் இந்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

மகர ராசி

மகர ராசி

இந்த ராசிக்குரிய அதிர்ஷ்டக் கல் நீலக்கல். இவர்களின் துணைக் கல் ஸ்பைனல். சனியின் தீய விளைவுகளை போக்கி, உடல் நலத்தை பாதுகாத்து, செல்வ வளம் மற்றும் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது. இந்த கல்லை பால் மற்றும் நீர் கொண்டு சுத்தம் செய்து, வெள்ளி உலோகம் கொண்டு ஆபரணம் செய்து அணிந்து கொள்ளலாம். இந்த மோதிரம் அணிய உகந்த நாள் சனிக்கிழமை. இடது கையில் மோதிர விரலில் இதனை அணிந்து கொள்ள வேண்டும்.

கும்ப ராசி

கும்ப ராசி

கும்ப ராசியினரின் அதிர்ஷ்டக் கல் வைடூரியம். வைடூரியம் என்பது கிரே நிறத்தில் காணப்படும். பாதகமான கிரக பரிமாற்றங்களால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை விரட்டவும், எதிர்மறை எண்ணங்களைப் போக்கவும், தீய திருஷ்டியை அழிக்கவும், பொருளாதார சிக்கல்களை நீக்கி வளத்தை மேம்படுத்தவும், பொதுவான நோய்களிலிருந்து காக்கவும் உதவுகிறது. இந்த கல்லை பால் மற்றும் நீர் கொண்டு சுத்தம் செய்து, வெள்ளி உலோகம் கொண்டு ஆபரணம் செய்து அணிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமை சூரிய உதய நேரத்தில் இடது கையின் இரண்டாம் விரலில் இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

MOST READ: இந்த எட்டு விஷயத்த செய்றீங்களா? அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...

மீன ராசி

மீன ராசி

புஷ்பராகக் கல் மீன ராசியினருக்கு உகந்த கல் ஆகும். இவர்களின் துணைக் கற்கள் டோபாஸ் மற்றும் சிற்றைன் போன்றவை ஆகும். புஸ்பராக மஞ்சள் நிறத்தில் காணப்படும். குரு கிரக திசையின் எதிர்மறை விளைவுகளை போக்க இந்த கல் உதவும். வியாபாரம், கல்வி, மற்றும் ஆன்மீக செயல்பாடுகளில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இந்த கல்லை பால் மற்றும் நீர் கொண்டு கழுவி தங்கம் கொண்டு ஆபரணம் செய்து அணிந்து கொள்ள வேண்டும். வியாழக்கிழமை சூரிய உதய நேரத்தில் ஆட்காட்டி விரலில் இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gemstones according to Vedic Astrology – Rashi Ratna

Gemstones, also known as a Ratnas are believed to have powers that may influence one’s life when they wear it as a ring or in the neck chain. These Ratnas are stones that have a profound impact on human life and destiny. However, selection of suitable gemstones according to Rashi is important; else it is believed that negative energy may be produced against the individual who wears the wrong stone. And wearing the accurate gemstone according to one’s Horoscope will have positive effects on their life.
Story first published: Monday, June 24, 2019, 15:08 [IST]
Desktop Bottom Promotion