For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க...

குழந்தை அடம் பிடிக்காமல் இருக்க கையில் செல்போன் கொடுத்ததும் ஆன கதை பற்றிய விஷயத்தை தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

|

மலேசியாவில் தாயாரை வெளியே விட்டு விட்டு காருக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட சிறுவன் செய்தவை பதிவான செய்த வீடியோவை அவனது தந்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். அது பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Car After Boy Refused to Open the Car Door

குழந்தை கையில செல்போன் கொடுத்ததும் என்ன ஆச்சுனு பாருங்க... இனிமே கொடுக்காதீங்க... என்ன ஆச்சுன்னு நீங்களே இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தாயும் தனயனும்

தாயும் தனயனும்

மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்த பெண்மணி பாஸிர் மாஸ். சிறுவனான தன் மகனுடன் பாஸிர், காரில் வெளியே சென்றுள்ளார். அவர் காரிலிருந்து இறங்கி வந்த வேலையை கவனிக்கச் சென்றபோது, மொபைல் போனை தன் மகனிடம் கொடுத்துள்ளார். காரை திறக்கவும் பூட்டவும் தெரிந்த அச்சிறுவன், மொபைல் போனுடன் காருக்குள் ஏறி கதவை அடைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்துள்ளான்.

MOST READ:வண்டி ஓட்டும்போது மூக்க சொறிஞ்சதுக்காக அபராதமா?... டேய் இதுக்குலாமா அபராதம் போடுவீங்க...

திறக்காத கதவு

திறக்காத கதவு

வந்த வேலையை முடித்த பாஸிர் மாஸ், காரின் அருகே வந்து கதவை திறக்குமாறு கேட்டுள்ளார். அவர் காரின் கண்ணாடியை தட்டுவதை பார்த்துவிட்டு, மறுபடியும் மகன், மொபைல் போனை பார்க்க ஆரம்பித்து விடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

தாய் மறுபடியும் மறுபடியும் கண்ணாடியை தட்டி, கதவை திறக்கும்படி கூறியும் அவரது அழைப்பை கவனிக்காததுபோல் மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். காரை திறந்தால் போனை தாயார் வாங்கிக் கொள்வார் என்பதால் விளையாட்டை விடுவதற்கு மனமில்லாமல் தொடர்கிறான்.

MOST READ:வந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை?

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தான் எவ்வளவோ கூறியும் மகன் அசட்டை செய்தததால், பாஸிர் மாஸ் வேறு வழியில்லாமல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கிறார். அவர்கள் வந்து காரின் கதவை உடைப்பதற்கு முயற்சிக்கும் போதும் பையன், மொபைல் போனில் விளையாடிக் கொண்டே இருப்பதுதான் வேதனையான விஷயம்!

மொபைல் போன் அடிமைத்தனம்

மொபைல் போன் அடிமைத்தனம்

பிள்ளைகளை அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைப்பதற்கு மொபைல் போனை கொடுக்கும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது அவசியம். மொபைல் போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத ஆக்ரோஷமான கட்டத்தை எட்டுகிறார்கள்.

மொபைல் போனில் விருப்பமான கார்ட்டூன் வரும் வரைக்கும் சாப்பிடாமல் அடம் பிடிப்பது, பொருள்களை தூக்கி எறிவது என்று தாங்கள் கேட்டது கிடைக்கும் வரைக்கும் முரட்டாட்டம் செய்கிறார்கள். ஆகவே, மொபைல் போனை கொடுத்து குழந்தைகளை பழக்குவதை தவிர்ப்பது நல்லது.

MOST READ:மேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Firefighters Had to Break Open the Car After Boy Refused to Open the Car Door

If you think that giving a mobile phone to a kid to keep them calm and engaged is a great idea, then you would think twice after finding out how rebellious the kids are turning out to be with the mobile addiction.
Desktop Bottom Promotion