For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன?

உலக நாடுகள் முழுவதும் சந்திர கிரகணம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது குறித்த விளக்கங்களைத் தான் இங்கு விவாதிக்க இருக்கிறோம்.

By Mahibala
|

நாகரீக வளர்ச்சி, மார்டன் எரா என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலத்திலும் கூட, கிரகணம் என்பது மத அடிப்படையில் கொண்டாடும் வகையிலான ஒரு நிகழ்வாக இருப்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. உலகத்தில் அனைத்து இடங்களிலும் பல மக்கள் கிரகணத்தை காண ஆவலாகக் காத்திருக்கிறார்கள். ஆனால் பழங்காலத்தில் கிரகண சமயங்களில் நம் முன்னோர்கள் வெளியிலேயே வர மாட்டார்கள். கிரகணம் முடியும் வரை சாப்பிட மாட்டார்கள். குளித்துவிட்டு தான் சாப்பிடுவார்கள். இப்படி நிறைய விஷயங்கள் உண்டு. அதுபோன்று இன்னும் ஏராளமான நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் இருக்கின்றன. அது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

Different Beliefs About Lunar Eclipses From Around The World

உலகத்தில் உள்ள அனைத்து மரபுகள் படியும், கிரகணம் என்றாலே ஏதோ ஒரு தீய சக்தியோடு தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. அது சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, உலகத்தில் உள்ள பல மரபுகளும், சூரியனோ சந்திரனோ மறைவதை ஒரு தீயவையாக பார்த்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

நிலவு மறையும் நேரத்தை குழப்பங்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த நேரமாக கருதப்பட்டது. சந்திர கிரகணம் என்பது சாத்தான்கள், சிறுத்தைகள் மற்றும் அனைத்து விலங்குகளுடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. சிவப்பு நிலவு என்று கருத்தப்படுவதும் பல மரபுகளிலும் உள்ளது. அதன்படி அது ஒரு தீய சக்தியின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இதுபோக மனநிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு சந்திர கிரகணத்தின் போது, மனநிலை உச்சநிலையில் பாதிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. காரணம் அவர்களை தீயசக்தி தான் ஆட்டி படைக்கிறது என்று நம்புகின்றனர்.

எது எப்படியிருந்தாலும் சரி, உலகத்தை சுற்றியுள்ள சந்திர கிரகண கட்டுக்கதைகளை கேட்பதற்கு சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். இப்போது உலகத்தை சுற்றிப் பேசப்படும் கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

இன்கா: இறப்பு ஏற்படுத்தும் தாக்குதல்

இன்கா: இறப்பு ஏற்படுத்தும் தாக்குதல்

கொலம்பியா - அமெரிக்காவுக்கு முந்தைய இனமாகக் கருதப்படுகிற இன்கா நாகரீக மக்கள், சந்திர கிரகணத்தை ஒரு அசாதாரண நிகழ்வாக பார்த்தனர். இன்கா புராணத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ஒரு சிறுத்தை நிலவை தாக்கி அதனை உட்கொண்டு விட்டது. நிலவை தாக்கிய பின் அந்த சிறுத்தை பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கும் என அந்த மக்கள் பயந்தனர். அதனால் அச்சிறுத்தையை விரட்டவும், அது நிலவை உண்ணாமல் இருக்கவும், அந்த மக்கள் அதிக அளவிலான ஓசை எழுப்பி, கொட்டு அடித்து தங்கள் நாய்களை ஊளையிட விடுவார்கள்.

MOST READ:கட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...

மெசொபோடாமியன் நம்பிக்கை: அரசன் மீதான தாக்குதல்

மெசொபோடாமியன் நம்பிக்கை: அரசன் மீதான தாக்குதல்

மெசொபோடாமியன் புராணத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ஏழு சாத்தான்களால் நிலவு தாக்கப்படுகிறது. இது அவர்கள் அரசன் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சமமானவை என்று மெசொபோடாமியன் மக்கள் நம்பினார். அதனால் சாத்தான்களின் தாக்குதலை தாங்க, சந்திர கிரகணத்தின் போது, அரசனுக்கு மாற்றாக வேறு ஒருவருக்கு மகுடம் சூட்டப்படும். அந்த நேரத்தில் உண்மையான அரசன் மக்களில் மக்களோடு ஒழித்து வைக்கப்பட்டிருப்பார். கிரகணம் முடிந்தவுடன், அந்த மாற்று அரசன் ஒன்று கொல்லப்படுவான் அல்லது மாயமாக மறைந்து விடுவான்.

சந்திர கிரகணத்தைப் பற்றிய இந்திய புராணம்

சந்திர கிரகணத்தைப் பற்றிய இந்திய புராணம்

இந்திய புராணத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ராகு என்ற அரக்கன் நிலவை உண்ணுகிறான். இதனை ஒரு தீய நிகழ்வாக கருதும் மக்கள், கிரகணத்தின் போது உணவு உண்ணுவதையோ சமைப்பதையோ தவிர்ப்பார்கள்.

MOST READ:உட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா? இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...

சந்திர கிரகணத்தைப் பற்றிய சீன புராணம்

சந்திர கிரகணத்தைப் பற்றிய சீன புராணம்

சந்திர கிரகணத்தின் போது நிலவை நாய்களும் இதர வனவிலங்குகளும் கடித்து உண்ணுகின்றன என பழங்கால சீனர்கள் நம்பினார்கள். அதனால் இந்த மிருகங்களின் தாக்குதலில் இருந்து நிலவை காப்பாற்ற மக்கள் கனமான சத்தம் வரும் அளவிற்கு மணிகளை அடித்தனர்.

 தெற்கு ஆப்ரிக்கா புராணம்: சிறந்த சண்டை

தெற்கு ஆப்ரிக்கா புராணம்: சிறந்த சண்டை

டோகோ மற்றும் பெனின் மக்களின் நம்பிக்கை படி, கிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் சண்டையிட்டு கொள்கின்றன. அந்த சண்டையை நிறுத்த மக்கள் பாடுபட்டனர். அதனால் கிரகணம் என்பது பழைய சண்டைகளை மறந்து சமாதானமாகும் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

MOST READ:வேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா? அப்போ என்ன வெளியேறுது?...

அமெரிக்க பிறப்பிட நம்பிக்கைகள்: கசியும் நிலவு

அமெரிக்க பிறப்பிட நம்பிக்கைகள்: கசியும் நிலவு

ஹுபா பழங்குடியினரின் நம்பிக்கைப்படி, நிலவிற்கு 20 மனைவிகளும், மலை சிங்கங்கள் மற்றும் பாம்புகள் என பல செல்லப்பிராணிகளும் இருந்தன. அவர்களுக்கு போதிய உணவுகளை கொண்டு வர நிலவு தவறி விட்டால், அவைகள் நிலைவை தாக்கி குருதி கசியச் செய்யும். நிலவின் மனைவிகள் அதனை காக்க, அதன் இரத்தத்தை பிடித்து அதனை குணமாக்கும். இப்படி செய்யும் போது கிரகணம் முடிவடையும். சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவந்த நிறத்தில் இருப்பதை அதன் குருதி கசிவு என நம்புகின்றனர்.

MOST READ:டாட்டூ போட்டுக்கணும்னு ஆசையா? அதுக்கு முன்னாடி இத செய்யணும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Beliefs About Lunar Eclipses From Around The World

I know a bunch of my horoscope-obsessed friends are feeling a lil' anxious about the impending planetary alignment, so I figured I'd do a Deep Div. into the different cultural interpretations of the blood moon eclipse.
Desktop Bottom Promotion