Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
மனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...
மனிதர்களுடைய பிறப்பும் இறப்பும் நிகழும் தேவி லோகம் பற்றித் தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய பிரமிப்பை பற்றி பார்க்கலாம்.
தாயின் கருவில் உருவாகிறதில் தொடங்கி, இவ்வுலகில் பிறந்து பிரம்மாண்டமான படைப்பாகிய பூமியில் பல்வேறு அனுபவங்களை பெறுவதாய் நம் வாழ்க்கை தொடர்கிறது.
பல்வேறு சூழ்நிலைகள் நாம் வளர்வதற்கு உதவுகின்றன. இந்த நெறிமுறைகளின்படியே மென்மேலும் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இல்லையேல் வாழ்க்கையே வெறுமையாய் தோன்றும்.

லோகதேவி சிருஷ்டிக்கப்பட்ட விதம்
பல யுகங்களுக்கு முன்னர் புருஷன், பிரகிருதி என்ற தனித்துவமான இரு கூறுகள் பரபிரம்மத்திலிருந்து தோன்றின. ஆண்மையுடையவனான புருஷன் படைப்பை தொந்தரவு செய்ய தொடங்கினான். ஆகவே, பிரகிருதி, புருஷனின் மைய சக்தியை உள்வாங்கிக் கொண்டாள். ஆனாலும் புருஷன் விரிந்து பரந்து முழு படைப்பின்மேலும் படர்ந்தான்.
இது முழுவதும் பேரண்டம் அல்லது லோகம் எனப்படுகிறது. லோகம், 14 தளங்களாகவும் 32 பரிமாணங்களாகவும் பிரிந்திருக்கும் ஒன்பது சக்தி கூறுகளை கொண்டது என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.
லோக தேவி ஒன்பது வித்தியாசமான சக்தி கூறுகளை கொண்டவள். அவையாவன
பிரகிருதி, புருஷன், பிரகிருதி சமயம், ஸ்தனகிருதி கண்டம், பிரகிருதி கண்டம், பிரளய ஸ்தன நந்தினி, பிரகிருதி பிரளயம், பிரகிருதி நீல பிரம்மி, புருஷன் நீல பிரம்மி
பரபிரம்மத்திலிருந்து தூண் போன்ற ரூபங்கொண்ட ஏழு தோற்றங்கள் பிரபஞ்சத்தில் உண்டு. அது லோக தேவிக்கான உருவகத்தை ஒன்பது கூறுகளுடன் தருகிறது. இவை நீண்ட கூம்புகள் போன்றவை. நான்கு செங்குத்தாகவும், மூன்று கிடைமட்டமாகவும் இருக்கும்.

மகாமேரு
லோக தேவி மகா மேரு சக்கர வடிவையுடையவள். அதில் மூன்று பரிமாண வடிவங்கள் உண்டு. இந்தியாவிலுள்ள பழமையான ஆலயங்களில் லோக தேவியிடமிருந்து சக்தியை பெறும் இவ்வடிவம் இடம்பெற்றிருக்கும். மகாமேருவின் இருபரிமாணம் ஸ்ரீ சக்ரம் எனப்படும். மகாமேரு சக்ரம் லோக தேவியிடமிருந்து மகத்தான சக்திகளை பெறும். ஆனால், ஸ்ரீ சக்ரம் மிதமான சக்தியையே பெறும்.

ஆதி சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்
படைப்பின் மூல உருவம் ஆதி சக்தியே லோக தேவியின் மையம். இவ்வுருவம் மற்றும் பல காரண காரியங்களோடு வெவ்வேறு விதங்களில் விளக்கப்படக்கூடியது. ஆன்மீக ரீதியாக ஆத்மாக்கள் எட்டிய தனிப்பட்ட அறிவென இது கூறப்படுகிறது. பழங்கால வரலாறு மற்றும் வேதங்களில் விளக்கப்படும் வண்ணம் முதல் மூன்று காரணங்கள் மட்டுமே பரவலாக அறியப்பட்டுள்ளது.
தேவியின் பத்து முக்கிய வடிவங்களாக ரிஷிகளால் விளக்கப்படுபவை
மஹா கௌரி (துர்க்கா / பார்வதி), மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி, முலா தேவி, தேவி பிரம்மி, தேஜஸ் பிரம்மி, ஸ்வரூபிணி, ஷக்தி ஸ்வரூபிணி, மங்கள தேவி, மங்கள ஆதிதேவி

லோக தேவிக்குள் இருக்கும் சக்திகள்
விக்ஞானம் என்று அறியப்படும் அடர் இளஞ்சிவப்பு வண்ணத்தால் ஆன முதனிலை ஆற்றல் உள்ளிட்ட பல்வகை சக்திகள் லோக தேவிக்குள் அடங்கியுள்ளன. பன்மடங்காகும் சக்தி மற்றும் சிருஷ்டிக்கும் சக்தி என்று இரு சிறப்பு சக்திகள் உண்டு. அவை இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை. விக்ஞானத்தில் அவை வாயுமண்டலத்திற்கு அடர் இளஞ்சிவப்பு வண்ணத்தை அளிக்கின்றன.

வண்ணங்கள்
ஊதா மூலம் சிவப்பு வரை வண்ணங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும்வண்ணம் சக்தியானது பன்முக தன்மை கொண்டது. ஒவ்வொரு சக்தியின் தரமும் வெவ்வேறானது.
அடர் இளஞ்சிவப்பு: பிரபஞ்சத்தில் அதிக தாக்கத்தை கொடுக்கக்கூடியது. பராமரிக்கும் நிபந்தனையற்ற அன்பு கொண்டவளாய் தேவிக்கு தாய்மை வடிவை கொடுக்கக்கூடியது.
இளஞ்சிவப்பு: சுகமளிக்கும் சக்தி
ஊதா: நீதி, நியாயம் இவற்றுடன் சுகமளிக்கும் சக்தி
இளம் ஊதா: பிரபஞ்ச சக்திகள் அழிந்துபோகாமல் இருப்பதற்கு வடிவம் கொடுத்து காப்பது. லோக தேவியின் சக்திகளை பாதுகாக்கும் பாதுகாப்பு தளம்.
அடர் சாம்பல்: முழு படைப்பும் விளங்கியபோது ஆதி சக்தியால் உருவாக்கப்பட்ட சிறப்பு சக்தி. அந்தகாரத்தையும் தீமையையும் அழிப்பதற்கு இது அவசியம்.



Click it and Unblock the Notifications