Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
இன்னைக்கு எந்த ராசிக்கு சேதாரம் அதிகம்? யாருக்கு பணவரவு அதிகம்? தெரிஞ்சிக்க இத படிங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம். அப்படி இன்றைய நாள் உங்களுடைய ராசிக்கான பலன்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கான பணிக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய சின்ன சின்ன கவலைகள் தோன்றி மறையும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வியாபாரத்தில் வேலையாட்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுடைய ஞாபக மறதியினால் நீங்கள் செய்யும் பணிகளில் கொஞ்சம் காலதாமதங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகுள் நீங்கி, உங்களுக்குள் அன்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுடைய கைக்குள் வந்து சேரும். உங்களுடைய மனதுக்குள் இருந்து வந்த உங்களுக்கு இருந்த நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு உங்களுககுத் தீர்வு கிடைக்கும். உங்களுடைய வியாபாரத்தில் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய சாமர்த்தியமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய பயணங்களின் மூலம் மன மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுக்கான கௌரவப் பதவிகளால் உங்களுடைய உறவினர்களுக்கு மத்தியில் உங்களுக்கான செல்வாக்குகள் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

கடகம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் உள்ள பெரியோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட எண்ணங்கள் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் வேலை செய்கின்ற இடத்தில் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுங்கள். தூரத்து உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் சுப செய்திகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
மனதுக்கு விருப்பமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். பெற்றோரிடம் இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதுக்குள் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நீங்கள் செய்யும் அதிரடியான காரியங்கள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரும் திருப்தி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கன்னி
அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உங்களுடைய வழக்கில் நீங்கள் எதிர்பாராத தீர்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். வாகன வசதிகள் மேம்பட்டு இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு அனுபவமிக்க வேலையாட்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய உழைப்பிற்கேற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமாகவும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுடைய மதிப்புகள் உயரும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருக்கின்றவர்களின் நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு இதுவரை இருந்த உடல் சோர்வுகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வீட்டில் மன நிம்மதி உண்டாகும். இதுவரை இழுபறியாக இருந்து ந்த விஷயங்கள் விரைவில் சரியாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
மனதுக்குப் பிடித்த விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு சுப காரியங்கள் தொடர்பாக, முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

தனுசு
உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் அத்தனையும் நிறைவேறும். வியாபாரத்தின் மூலம் உங்களுடைய வாடிக்கையாளர்களின் மூலமாக உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். உங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்களைத் தேடி மீண்டும் வருவார்கள். திட்டமிட்டு செய்த செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மகரம்
தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை கொஞ்சம் அலைந்து திரிந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். வெளிவட்டாரங்களில் மற்றவர்களுடைய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நீங்கள் நினைத்தபடி லாபங்கள் உண்டாகும். பிரபலமான ஆட்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய வாக்கு வன்மையினால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து போகும். ஒற்றுமை அதிகரிக்கும். பொது சபைகளில் உங்களுடைய ஆதரவு பெருகும். பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். வெளிநாட்டு முயற்சிகளில் நீங்கள் நினைத்த பலன்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் செயல்பாட்டால் உங்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மீனம்
வேலை நிமித்தமாக உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது இன்னும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடன் இருப்பவர்களிடம் உங்களுக்கு நல்ல புரிதல் உண்டாகும். குலதெய்வம் மற்ற இறை வேண்டுதல்களை உங்களுடைய குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில்புதுவிதமான நுட்பங்களைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











