Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
பெரும்பாலானோருக்கும் ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தாயாருடைய உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பொருளுாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
புதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணம் செய்வீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். மன தைரியத்துடன் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். நினைத்த செயல்களை சில தடைகளுக்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சிலருகு்கு சாதகமான பணிமாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட நீண்ட பிரச்சினைகளுககு தீர்வு கிடைக்கும். பொதுப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கூடுதல் கவனம் வேண்டும். எதிர்பாராத சுப செய்திகளால் சுா விரயச் செலவுகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுக்கள் வந்து சேரும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்
குடும்ப நபர்களுடைய தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். சகோதரர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி
வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். புதிய நபர்களிடம் பழகுகின்ற பொழுது, கொஞ்சம் கவனம் தேவை. எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த செயல்களில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் நடைபெறுவதால் செய்யும் வேலைகளில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நினைவாற்றல்கள் மேம்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானப்போக்கினைக் கடைபிடியுங்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடன் பிறப்புகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தன வரவும் மேம்படும். சிறு தூரப் பயணங்களினால் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

தனுசு
வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சிலருக்கு சாதகமான பணிமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்
நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. தொழில் சம்பந்தமாக புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சில வீண் விரயச் செலவுகள் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதுக்குள் தோன்றும் பலவிதமான எண்ணங்களினால் செயல்களில் கால தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
சக பணியாளர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பங்காளிகளின் ஆதரவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











