Just In
- 1 hr ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 4 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 4 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 8 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Automobiles
புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்
- Finance
பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..!
- News
தனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை
- Sports
3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்று தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை போட வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
உங்களுடைய சிந்தனையின் போக்கில் மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய பழைய நினைவுகளால் மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் மறைய ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் உண்டாகும். புதிய நண்பர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருக்க வேண்டும். தொழில் தொடர்பான வாய்ப்புகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
MOST READ: இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...

ரிஷபம்
பொது விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான புதுவித எண்ணங்கள் மனதுக்குள் தோன்றும். உங்களுடைய உடனி பிறந்த கசோதரர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் அமையும். நீங்கள் எதிர்பார்த்த பணி உயர்வு உங்களுக்குச் சாதகமாக அமையும். சபைகளில் உங்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
தொழில் சம்பந்தமாக உங்களுக்கு புதிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குக் கிடைத்த கௌரவப் பதவிகளால் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப செய்திகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்தில் புதிய நண்பர்களுடைய அறிமுகங்கள் ஏற்படும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கருத்து வேறுபாடுகுள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் சென்றால், நீங்க்ள எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
கூட்டுத் தொழிலில் இருக்கின்றவர்கள் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களும் பதட்டமும் தோன்றி மறையும். வேலையில் உங்களுக்கான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
மனதுக்கு விருப்பமானவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதுிதாக ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவதால் மனதுக்குள் உள்ள குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
MOST READ: இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா?

துலாம்
உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அது மன நிம்மதியைத் தரும். முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். தொழில் சார்ந்த புதுவித எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்
செய்யும் முயற்சிகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். எதிர்பாராாத தனவரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இனம் புரியாத ஒரு கவலை அவ்வப்போது வந்து போகும். எதிர்பார்த்த காரியங்களில் சில கால தாமதங்கள் உண்டாகும். உடன் பணிபுரிகின்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு
மனதுக்குள் எண்ணிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, அதில் வெற்றியும் அடைவீர்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். வீட்டில் தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன விவாதங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் பிள்ளைகளின் மூலமாக உங்களுக்குப் பெருமை உண்டாகும். வீட்டுக்குப் புதிய நபர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். முக்கிய விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெற்றோர்கள் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். சிறிய பயணங்களின் மூலமாக மனதுக்குள் ஒருவிதமான மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
விளையாட்டு சம்பந்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
MOST READ: தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...

மீனம்
அடுத்தவர்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள். புதிய நண்பர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய வாதத் திறமையால் லாபம் அடைவீர்கள். மனதுக்குள் புதுவிதமான லட்சியங்கள் உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
மன சஞ்சலம் இருப்பவர்கள் வியாழக்கிழமையான இன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை சுண்டல் மாலை போட்டு வழிபடுங்கள். கடையில் மாலையாக வாங்கிப் போடுவதை விடவும் நீங்களே உங்கள் கையால் கோர்த்துப் போடுவது இன்னும் சிறப்பு.