Latest Updates
-
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு தேவையில்லாத பஞ்சாயத்து வரும்... பாத்து நடந்துக்கங்க
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

மேஷம்
கலை சார்ந்த அறிவுத் திறன் மேம்பட்டு நிற்கும். அரசுத் தரப்பிடமிருந்து உங்களுக்கு ஆதாயமான நிலைகள் உண்டாகும். ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்களினால் லாபம் அடைவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
வெளிநாட்டு வேலைக்கான முயற்சி செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால், உங்களுடைய முயற்சிகள் நிறைவேறும். கடல்வழி பயணங்களினால் உங்களுக்கு நன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை நீங்கள் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தாயின் வழியிலாக ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மனம் மகிழ்ச்சி அடையும் தருணமாக இருக்கும் நாள் இன்று. புது இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். உயர் கல்விக்கான முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
எந்தவொரு காரியத்தையும் நிதானத்துடன் கையாள முயற்சி செய்யுங்கள். தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுகின்றவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். சுய தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதில் தெளிவு பிறக்கும். தேவையில்லாத வீண் வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். உங்களுடைய மனதுக்குள் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்

சிம்மம்
உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தொழிலில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கிப் போகும். பூமி விருத்திக்கான பணியில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கி, உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். நீங்கள் வெளியில் எடுத்துச் செல்லும் உடைமைகளின் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய பழைய நினைவுகளினால் உங்கள் மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்க வேண்டுமென்றால், இருவரும் அனுசரித்துச் செல்லுங்கள். யாருக்கும் வாக்குறுதிகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வரும் சுப செய்திகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். உங்களுடைய தேவையற்ற வாக்குவாதத்தினால் மற்றவர்களிடம் பாராட்டைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். பிறருக்குத் தேவையான உதவிகளை செய்து அதன்மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களுடைய வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலமாக உங்களுக்குப் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரங்களில் புதிய நபர்களுடைய நம்பிக்கையின் மூலம் வீடு, மனைகள் ஆகியவற்றின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடைய மன எண்ணங்கள் அறிந்து நடந்து கொள்வீர்கள். இதுவரையிலும் நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் உங்களுக்கு வசூலாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் அனைவரையும் கவர்வீர்கள். நீங்கள் எதிர்பாராத தன வரவுகளினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சியைத் தரும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்வார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

தனுசு
உங்கள் மனதுக்குள் நினைத்த காரியம் உங்களுக்கு நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நீங்கள் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்கள். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் உங்களுக்கு திருப்தியான சூழல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட கடனுதவிகள் உங்களுக்கு வந்து சேரும். இதுவரை இருந்து வந்த சில தேவையில்லாத குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்
மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பிறக்கும். நீங்கள் செய்கின்ற செயல்களை கொஞ்சம் கால தாமதங்கள் ஏற்படும். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். உங்களுடைய தொழிலில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
நீங்கள் நினைத்த செயல்களை முடிப்பதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் செய்யும் வாகனப் பயணங்களில் உங்களுக்கு கொஞ்சம் நிதானம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய கூட்டாளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய மனதுக்குள் தோன்றும் எண்ணங்களினால் உங்கள் மனதில் சஞ்சலம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய திருமண முயற்சிகளில் சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் உங்களுக்கு பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications