Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
பங்குனி பொறந்திடுச்சு... யாருக்கெல்லாம் சனி உக்கிரத்துல இருப்பான்... யாருக்கு தண்மையா இருக்கும்
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
உங்களுடைய உடல் ஆரோக்கியம சம்பந்தப்பட்ட விஷயங்களில அக்கறை செலுத்துவீர்கள் புதிய இலக்குகளைத் தொழிலில் நிர்ணயம் செய்து அதை நோக்கிப் பயணிப்பீர்கள். வெளியில் செல்லுகின்ற பொழுது எடுத்துச் செல்லும் ஆவணங்களில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். உங்களுடைய செயல்பாடுகளில் வேகமும் செயல்களில் புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குச் சாதகமாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பொது காரியங்களில் ஈடுபடுகி்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பயணங்களின் மூலம் உங்களுக்கு மேன்மை பிறக்கும். வேலை செய்கின்ற இடங்களில் சக ஊழியர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகுமு். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் அலைச்சல்கள் மற்றும் உடல்சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனதில் உங்களுக்குள் தைரியம் அதிகரிக்கும். கடன் தொல்லைகளால் சின்ன சின்ன மனச்சோர்வுகள் வந்து போகும். அடுத்தவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். அது உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வேலையில் சில அலைச்சல்கள் வந்து போகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கிற போது கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்
திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஆடுபட்டிருப்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் அகலும். வழக்கு விவகாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் உங்களுடைய வழக்கில் சில தெளிவுகள் பிறக்கும். உறவினர்களின் வருகையினால் வீட்டில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். போட்டித் தேர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்
வுலை சம்பந்தமான வெளியூா் பயணங்கள் உங்களுக்கு சாதகமானதாகவே முடியும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன மாற்றங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். சுப செய்திகள் வந்து சேரும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உயர் அதிகாரியிடம் கொஞசம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த தடைகளும் தாமதங்களும் விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. கொஞ்சம் நிதானத்தைக் கையாள்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கைகள் உண்டாகும். கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் போது கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
பல எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய பொருனாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்பட்டு நிற்கும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல்கள் உங்களுக்கு அமையும். உங்களுடைய வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் உங்களுக்கான ஆதரவுக்ள அதிகரிக்கும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் புதிய பல அனுபவங்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் நிமித்தமாக புதிய முயற்சிகளில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். உங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற போது, நிதானமாக இருங்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
நண்பர்களுடன் செல்லுகின்ற பொழுது, சந்தோஷமாக உல்லாசப் பயண்ஙகளின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வேள்விகள் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனம் ஈடுபடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும். உறவினர்களுக்கு மத்தியில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். வழக்ககளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகள் உங்களுக்கு மேம்படும். அடுத்தவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். உங்களுக்கு புதிய ஆடை மற்றும் ஆபரணங்களின் சேர்க்கைகள் உண்டாகும். அரசாங்கத்தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நிலையில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். சொந்த ஊருக்குப் பயண்ஙகள் மேற்கொள்வதற்கான புதிய மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய குடும்பத்தில் புதிய நபர்களுடைய வருகையினால் உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய மற்ற செயல்களால் வெளி வட்டாரங்களில் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தந்தை வழியிலாக பரம்பரைச் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழிலில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications