Latest Updates
-
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த மூனு ராசிக்காரங்களும் இன்னைக்கு யாரையும் நம்பி எந்த காரியத்துலயும் இறங்கிடாதீங்க
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
முக்கியமான உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் சக பணியாளர்களிடம் கொஞசம் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுடைய புதிய முயற்சிகளால் நல்ல பெயர் கிடைக்கும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியை அடைவீர்கள். தொழிலில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகுமு். உங்களுடைய சோம்பேறித் தனத்தால் வேலையில் கொஞ்சம் கால தாமதமாகிவிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய வீட்டில் உள்ளவர்களால் உங்களுடைய சேமிப்பு உயர ஆரம்பிக்கும். தொழிலில் புதுிய வாடிக்கையாளர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுகி்ன்றவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கும். வெளியிடங்களில் தொழில் பயணங்களால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இணைய தளங்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கின்றவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய நீண்ட நாள் திட்டங்களை மிகுந்த மன தைரியத்துடன் நடைமுறைப்படுத்த தொடங்குவீர்கள். தொழிலில் முன்னேற்றங்கள் அடைவதற்கான நுட்பமான வேலைகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்களுடைய வாரிசுகளால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எடுத்த காரியங்களை பல இன்னல்களைக் கடந்து சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
வெளியூா் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். தேவையில்லாத வாக்குறுதிகளைக் கொடுப்பதை நிறுத்துங்கள். வேலை சம்பந்தமாக புதிய இடங்களுக்குப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுக்குப் புதிய ஆட்களுடன் நட்புகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உங்களுக்குச் சாதகமானதாகவே அமையும். தொழில் பங்குதாரர்கள் மூலம் நீங்கள் எதிர்பாராத லாபம் கைக்கு வந்து சேரும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் வெற்றி கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய புதிய முயற்சிகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கடல் வழி பயணங்கள் மூலம் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு நிறைய நட்புறவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
பொது விவாதங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளால் பல சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் புத்துணர்ச்சி அடையும். தொழிலில் பல புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

தனுசு
பெற்றோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் படிக்க வேண்டும். நண்பர்களின் மூலமாக பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உறவினர்களுடைய வருகையின் காரணமாக மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
நீங்கள் எதிர்பாலினத்தவர்களிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வழக்கத்தை விடவும் கொஞ்சம் அதிகம் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் மேன்மையான சூழல்கள் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்களில் சில தடங்கள் வந்து போகும். வாகனங்கள் பராமரிப்புக்கான சில செலவுகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
கல்வித் துறையில் இருக்கும் மாணவர்கள் நல்ல மாற்றத்தை அடைவார்கள். சுய தொழில் செய்கின்றவர்கள் வழக்கத்தை விடவும் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வீர்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் உண்டாகும். மனச்சோர்வு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உங்களுடைய வாகனப் பயணங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உறவுகள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications