Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மாசம் தொடங்கிடுச்சு... எந்தெந்த ராசிக்கு சுபமா தொடங்குது? யாருக்கு பெருங்கஷ்டம் வருது?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்
வீட்டில் பிள்ளைகளின் மூலம் மனம் மகிழ்ச்சி கிடைக்கும். உங்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட சுப முயற்சிகளில் உங்களுக்கு அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உங்களுக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பாக வெளியூருக்குச் செல்ல வேண்டியிருக்கும். தொழிலில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து புதுவிதமான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வந்து சேரலாம். பரம்பரை சொத்துக்களினால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் திட்டமிட்டிருந்த முயறிசிகளில் பல இன்னல்கள் தோன்ற ஆரம்பிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்ள கொஞ்சம் கால தாமதமாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் உங்களுடைய வியாபாரத்தில் புதுவித மாற்றங்கள் தோன்றும். சொத்து பிரிவினைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
தொழில் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது நல்லது. வீட்டில் குழந்தைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் உள்யவர்களுக்கு தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். சிலருக்கு நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். உயர்கல்வி சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மேம்பட்டு நிற்கும். உங்களுடைய உடன் பிறப்புகளின் மூலம் சுப செய்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

கடகம்
உங்களுடைய குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். பெரியோர்களுடைய ஆலோசனைகள் மூலம் தொழிலில் முன்னேற்றங்கள் காண்பீர்கள். வியாபாரங்கள் தொடர்பான வெளியூா் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சுக்களிளால் மறற்வர்களால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளுடைய உயர் கல்வியில் உங்களுக்கு முன்னேற்றங்கள் உண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

சிம்மம்
நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். உங்களுடைய புதுவிதமான முயற்சிகளில் கொஞ்சம் கூடுதல் மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உண்டாகும். சிக்கலான சில சில விஷயங்களை சாதுர்யமாகப் பேசி முடித்துவிடுவீர்கள். மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் இருக்கும்.

கன்னி
உத்தியோகங்கள் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உங்களுடைய வீண் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு தன வரவு எதிர்பார்த்தபடி, இருக்கும். உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த செயலில் காரியங்கள் வெற்றி அடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் இருக்கும்.

துலாம்
எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பாக கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் இருக்கும்.

விருச்சிகம்
மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மனத் தெளிவு உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். பொது நலம் சம்பந்தப்பட்ட செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். செய்கின்ற தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் இருக்கும்.

தனுசு
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உயர் பதவி கிடைப்பதற்குக் கொஞ்சம் கால தாமதமாகும். அரசு சம்பந்தப்பட்ட காியங்களில் கொஞ்சம் விரயச் செலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற அலைச்சல்களால் உங்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் இருக்கும்.

மகரம்
தொழில் தொடர்பான செயல்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும் உங்களுடைய சாதுர்யமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் பொருள்களைக் கவனமாக கையாளவும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, மகிழ்வீர்கள். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

கும்பம்
மனதுக்குள் புதுவிதமான நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும். முக்கியமான உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வர்த்தகம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமாக இருக்கும். சுப செய்திகளினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் இருக்கும்.

மீனம்
முக்கிய உத்தியோகத்தில் மேல் அதிகரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். முக்கியமான காரியங்களில் நிதானமாகச் சாப்பிடுவது நல்லது. உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் கொஞ்சம் கால தாமதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களில் கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின் பாதிப்புகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.



Click it and Unblock the Notifications











