Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
இந்த ராசிக்காரர் தொழிலை மட்டும் சனிபகவான் ஏன் வெச்சு செய்றார்னு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
வீட்டில் உள்ளவர்களின் நல்ல செயல்பாடுகளால் சுப செய்திகள் வந்து சேரும். நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி வந்து சேரும். எதிர்பார்த்ததை விட பணவரவு நன்றாகவே இருக்கும். மனதுக்குள் போராடிக் கொண்டிருந்த கவலைகள் விலகும். செய்யும் வேலைகளில் நிதானமாக, பதட்டங்கள் ஏதுமில்லாமல் செய்யலாம். உங்களுடைய வயதில் உள்ளவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 3, அதிர்ஷ்ட திசை வடமேற்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்.

ரிஷபம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் வந்து போகும். அதற்காக மனம் தளர்ந்துவிடத் தேவையில்லை. செய்யும் காரியங்கள் சிறப்பாக வர வேண்டுமென்று மனதில் ஒருவித அச்சம் வந்து போகும். நண்பர்களுடனும் தொழில் கூட்டாளிகளுடனும் கோபப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 3, அதிர்ஷ்ட திசை வடமேற்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்.

மிதுனம்
தொழில் மற்றும் குடும்ப உறவுகளுக்கென புதிய செயல்திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வந்து சேரும். வீட்டில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சல்களின் காரணமாக மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகலாம். வாகனப் பயணங்களில் வேகமாக செல்லாதீர்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வாயை மூடிக்கொண்டு, தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 2, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் காவி நிறம்.

கடகம்
உங்களுடைய அனுபவ ரீதியிலான அறிவால் உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் உயரும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய செயல்பாடுகளின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். நண்பர்களுடன் பார்ட்டிகளில் ஈடுபட்டு மனதை குதூகலப்படுத்திக் கொள்வீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 4, அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் இளநீல நிறம்.

சிம்மம்
பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதில் புதுவித எண்ணங்கள் ஏற்படும். சாஸ்திரங்கள் பற்றிய அறிவு கூர்மை பெறும். உங்களுடைய திறமைகள் மூலம் உங்களுடைய லாபங்கள் அதிகமாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 5, அதிர்ஷ்ட திசை தென்மேற்கு, அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம்.

கன்னி
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். பாராட்டுக்கள் வந்து குவியும் நாள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் வாயிலாக ஆதாயங்கள் கிடைக்கும் பொன்னாள். பொது இடங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கு ஆதரவு பெருகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் பணிகளில் இருப்பவர்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தும் நாளாக இன்று அமையும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 8, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம்.

துலாம்
வேலை சம்பந்தமாக வெளியிடங்களில் கொஞ்சம் அலைச்சலை சந்திக்க நேரிடும். எதிர்பாராமல் திடீர் செலவுகள் வந்து பாக்கெட்டை நெறிக்கும். வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் விரிசல்களும் உண்டாகும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 2, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் வெளிர் பழுப்பு நிறம்.

விருச்சிகம்
எந்தவொரு முக்கிய ஆவணங்களைக் கையாளும்போதும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். திட்டமிட்டபடி பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் துறைகளில் ஏற்படும் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வீடு, மனைகள் வாங்குவதற்கான திட்டமிடுவீர்கள். அதற்காக எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவியும் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்களால் பெற்றோர்கள் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 9, அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீலநிறமும் இருக்கும்.

தனுசு
நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வீட்டில் பிள்ளைகளின் செயல்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதுவித எண்ணங்கள் மேலோங்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 5, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிறம்.

மகரம்
தொழிலில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கால்நடைகளின் விஷயத்தில் கொஞ்சம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யும்போது, நீங்கள் நினைத்த லாபத்தை அடைவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 1, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம்.

கும்பம்
பொது விஷயங்களில் நீங்கள் செயல்படுவதால் வெளி ஆட்களுக்கு மத்தியில், புகழ் உண்டாகும். முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் முக்கிய ஆவணங்களை தங்களுடன் பணிபுரிபவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ கொடுக்கவோ வேண்டாம். யாரையும் எளிதாக நம்பிவிடாதீர்கள். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். தொழில் முனைவோர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 9, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை நிறம்.

மீனம்
தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது கொஞ்சம் நிதானமாக செயல்படவும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் மனம் லயித்துப் போவீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண் 6, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம்.



Click it and Unblock the Notifications











