Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
வெள்ளிக்கிழமை இந்த ராசிக்காரங்க வெள்ளை, மஞ்சள் கலர் டிரஸ் போட்டா பணவரவு வருமாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்குகின்ற பொழுது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
உங்களுடைய உறவினர்களிடம் அமைதியாகவும் அணுசரணையாகவும் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தேவையற்ற பேச்சுக்களால் மனதில் கவலைகள் வந்து போகும். பணியின் நிமித்தமாக தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
மனதுக்குள் இருக்கும் புதுவிதமான எண்ணங்களால் தொழிலில் மேன்மைகள் ஏற்படும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் விரயச் செலவுகள் ஏற்படும். வீட்டில் கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
நீங்கள் திட்டமிட்ட பயணங்களில் சின்ன சின்ன இடர்பாடுகள் நேரிடலாம். முக்கிய உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இள நீல நிறமாகவும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட செயல்களையும் திட்டங்களையும் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வது நல்லது. முக்கியமான உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
சுய தொழிலில் உள்ளவர்கள் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளைச் சமாளித்து அதற்கான ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா் சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் உடைமைகளில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறங்களாகவும் இருக்கும்.

கன்னி
திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்குச் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதமாக உங்களுடைய நண்பர்களின் ஆதரவால் பொருளாதார லாபம் உண்டாகும். பிரபலமானவர்களுடைய நட்பு கிடைக்கும். பொன் மற்றும் பொருள்சேர்க்கைகள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களாகவும் இருக்கும்.

துலாம்
புதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுடைய தொழிலில் பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் இருந்து வந்த பொருளுாதார சிக்கல்கள் தீர்ந்து, முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய தேவையற்ற எண்ணங்களால் மனதுக்குள் சில குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
கலைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்குக் கொஞ்சம் சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். எதிர்பாலினத்தவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் செயல்பாட்டால் மனதில் கவலைகள் உண்டாகும். எந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தனுசு
முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கின்றவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் படிக்கவும். பொது விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்கள் அதனால் உங்களை மதிப்பார்கள். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுவதற்கான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

மகரம்
.எந்த வேலை செய்வதாக இருந்தாலும் நீங்கள் செய்யும் வேலையில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். உங்களுடைய சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் சின்ன சின்ன மனக்கவலைகள் உண்டாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கக் கீழ் வுலை செய்யும் வேலையாட்களால் பணியில் சில தாமதங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய வீட்டில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளில் நீங்கள் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

மீனம்
உங்களுக்கு ஏற்படப்போகிற திடீர் யோகத்தால் நீங்கள் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை இருந்த கடன் தொல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











