சனிபகவானால இந்த ரெண்டு ராசிக்கும் எப்பவுமே பிரச்சினை தாங்க... நீங்க அந்த ராசி இல்லயே?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

horoscope

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுடைய பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானங்கள் தேவை. வழக்குகளில் உங்களுக்கு மந்தத்தன்மை உண்டாகும். ஜவுளி வியாபாரத்தில் நீங்கள் எண்ணிய லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கோவில் சம்பந்தப்பட்ட திருப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

பணிபுரியும் இடங்களில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் உண்டாகும் பழுதுகளைச் சரிசெய்வீர்கள். உங்களுடைய நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். நண்பர்களுடன் சேர்ந்து செய்கின்ற அறச்செயல்களினால் உங்களுக்குப் புகழ் உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

உங்களிடம் நெருக்கமாக இருந்தவர்களால் பல இன்னல்கள் அடைந்திருப்பீர்கள். அதன்மூலம் இருந்து வந்த துன்பங்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். உடல் நிலையைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பல புதயி நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

கடகம்

கடகம்

சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலன்களும் லாபங்களும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். உங்களுடைய நிர்வாகத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு, அதை செயல்படுத்தி பாராட்டப்படுவீர்கள்.

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய பயணங்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகளால் பெருமைகள் அடைவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட கடன் வாய்ப்புகள் அமையப் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, கொடுத்து மகிழ்வீர்கள். உங்களுடைய தொழில் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும்.

துலாம்

துலாம்

எந்த செயல்களைச் செய்தாலும் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். பயணங்களின் போது, உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாய்வழியிலான உளவினர்களிடம் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்கும். புனித யாத்திரைகளை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதையும் தைரியத்துடன் கையாண்டு புதிய முடிவுகளைச் சிறப்பாக எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய புத்திக் கூர்மையினால் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் கலந்து கொள்ளும் போட்டிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு

ஏற்றுமதி,இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். பொது சபைகளில் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். வியாபாரங்களில் உங்கள் மீதான ந்பிக்கை அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பணி சம்பந்தப்பட்ட பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

மகரம்

மகரம்

மனதில் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைத் தொடங்குவீர்கள். உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பிளர்களுக்கு இடையே மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

உங்களுடைய உடன் பிறப்புகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் உங்களுக்குக் கிடைக்கும் உதவியினால் லாபம் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். உங்களுடைய புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும்.

மீனம்

மீனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் மேற்கொள்ளும் பயணங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் சம்ந்தப்பட்ட பிரச்னைகளினால் மனதில் வருத்தங்கள் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, June 1, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion