For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருவின் பெரும் ஆதரவைப் பெற்று செல்வத்தைப் பெருக்கப்போகும் ராசி இவங்க தான்...

By Mahibala
|

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

horoscope

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

MOST READ: இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...

ரிஷபம்

ரிஷபம்

பணிபுரிகின்ற இடங்களில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். சுற்றத்தாரிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் பணிவாக நடந்து கொண்டால் அவர்களுடைய ஆதாயங்கள் உங்களுக்குக் கிடைக்கும். செய்யும் சுய தொழில் மூலம் உங்களுடைய செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் ஆதரவு பெருக ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் எண்ணங்கள் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் நீங்கள் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

கடகம்

கடகம்

வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேரும். வாகன விருத்தி ஏற்படும். மனதில் புதுவித புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.வேலையில் கொஞ்சம் பதட்டமான சூழலே அமையும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் பிறருடைய வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. வெளியில் எடுத்துச் செல்லும் பொருள்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்கி நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

இதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

MOST READ: கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...

துலாம்

துலாம்

நீங்கள் இதற்கு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை. வேலை செய்கின்ற இடத்தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சிகள் உண்டாகின்றன. திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும். அடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு மற்றும் மனைகள் வாயிலாக எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். வேலை ஆட்களின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். வெளியூா் பயணங்களினால் தடைபட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

உத்தியோகத்தில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.

கும்பம்

கும்பம்

இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். நண்பர்களின் வாயிலாக, தொழிலில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.

MOST READ: காப்பர் டி - காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? உடலுறவின்போது எது பெஸ்ட்?

மீனம்

மீனம்

தொழிலில் வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலமாக ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For June 13th 2019 Thursday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take business or job-related decisions. see your Daily Horoscope For june 13th 2019 thursday.
Story first published: Thursday, June 13, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more