Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு நட்பில் விரிசல் விழப்போகிறதாம்... கவனமா இருங்கள்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
தாய்வழி உறவினர்களுக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் சுப செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும். பயணங்களால் பெரும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்

ரிஷபம்
உங்களுடைய தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் பெரும் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு வரும் சுப செய்திகளால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். பொது விவாதங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய எதிர்காலப் பணிகளைத் திட்டமிட்டு அதை சிறப்பாக மேற்கொள்வீர்கள். உங்களுடைய தொழில் தொடர்புடைய செயல்களை செய்து முடிக்க கொஞ்சம் கால தாமதமாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையில் உள்ள கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய தன்னம்பிக்கை மேலோங்கும். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்
பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதில் தேவையற்ற எண்ணங்கள், குழப்பங்கள் உண்டாகும். செய்யும் பணியில் சிலரின் வீண் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். பணி நிமித்தமான அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். ஆனால் அதே பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்
நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்ற கொஞ்சம் கால தாமதமாகலாம். தொழிலில் உங்களுக்கான பொருளாதார வரவுகள் தாமதப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முக்கியப் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். ஆசிரியர்களின் பெரும் ஆதரவு மாணவர்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய தொழிலில் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமற்ற நிலை அமையும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். நண்பர்களுக்கு இடையே கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்கவும். உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய பணியில் உங்களுக்கு திருப்தியான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் வாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பதில் இழுபறி நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். உங்களுடைய சாமர்த்தியமான வாக்குவாதங்களால் லாபம் உண்டாகும். உங்களுடைய நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களுடைய தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
வீட்டில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் ஒருவித தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறம்

கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வீர்கள். உங்களுக்கு நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார வரவுகள் மேம்படும். விரைவில் முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கூட கொஞசம் கால தாமதமாகும். மனதில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பிரவுன் நிறமும் இருக்கும்.

மீனம்
வீண் செலவுகளை குறைத்து உங்களுடைய சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். உங்களுடைய புத்திக்கூர்மையால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
