Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
இந்த ராசிக்காரங்க இன்னைக்கு நிறைய அவமானத்த சந்திக்க வேண்டியிருக்கும்... பாத்து கவனமா இருங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
வாடிக்கையாளர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் உங்களுடைய தனலாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் மூலமும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களால் உண்டான சின்ன சின்ன பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவப்பெயர்கள் கூட வரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுடைய முழு திறமையும் வெளிப்படும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

மிதுனம்
பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கடகம்
வியாபாரத்தின் மூலம் சில யுக்திகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள" உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களுடைய ஆதரவைப் பெறுவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் தீரும். உங்களுக்கு தொழிலிலும் வாழ்ககையிலும் இருந்து வந்த தடைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் திருப்தி அடைவீர்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

சிம்மம்
புதிய நபர்களுடைய அறிமுகங்க்ள உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் வந்து குவியும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக தன வரவு ஏற்படும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உங்களுடைய ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். நெருகு்கமான நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் உண்டாகும். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.

துலாம்
தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தைத் தவிர்த்து கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களை கொஞசம் அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவருடைய குறைகளைச் சுட்டிக் காட்டுடுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையால் பேரும் புகழும் உண்டாகும். பொது சுவைகளில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
முக்கியப் பொறுப்பில் பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆகாய நீலநிறமும் இருக்கும்.

மகரம்
நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில், கொஞ்சம் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக, உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய முழு அறிவுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
உழைப்புக்குற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டி்ல சகோரதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருந்தது.

மீனம்
உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக, எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











