Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கஷ்டம் மட்டும்தான் வருதா? உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.

மேஷம்
பெரியவர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. வழக்குகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். பயணங்களின் போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கவனமாக இருங்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெ்ளளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
பொருளாதாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் ஆதரவுகள் பெருகும். திறமைகள் வெளிப்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். வீட்டு விவாகரங்களில் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும்.எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொறுமையை கடைபிடிப்பது வீண் சண்டைகளைத் தவிர்க்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. பக்கத்து வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
செயல்களில் இருநு்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். போட்டியில் வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்
எண்ணிய பணியில் இழுபறியான சூழ்நிலை அமையும். மூத்த உடன்பிறப்புகளால் சுப செய்திகள் உண்டாகும். பணியில் எதிர்பாலின மக்களிடம் சற்று கவனம் தேவை. மற்றவர்களின் பணிகளைக் கூடுதலாக செய்ய நேரிடும். கடன் தொல்லைகள் குறைந்து மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் புதுிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த காரியம் நடக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
தந்தையின் ஆதரவால் தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான வசதி, வாய்ப்புகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வட கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்து்த பலன்கள் கிடைக்கும்.சக ஊழியர்களின் ஆதரவால் பணியை விரைவில் முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னை குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்
திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மனைவி வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

மீனம்
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் குழப்பமான எண்ணங்களால் தெளிவான முடிவெடுக்க காலதாமதமாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications