Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
முதல் ஆடிவெள்ளி... எந்த ராசிக்காரருக்கு மச்சம் அதிகம்... உங்க ராசிக்கு எப்படி?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
இதுவரையில் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தடையாக இருந்து வந்த காரியங்கள் வெற்றிகரமான நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம். உங்களுடைய சாதுர்யமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக நீலநிறமும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

ரிஷபம்
சாதுர்யமான வாக்குத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் சில எதிர்காலத் திட்டங்களை வகுக்க ஐடியாக்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்னியோன்யம் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.

மிதுனம்
கலைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். அரசாங்கத்தின் சார்பில் கிடைக்க வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தொழிலில் அலைச்சல்கள் உண்டாகும். ஆனாலும் லாபமே ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம்அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
நினைத்த காரியத்தை முடிப்பதற்குள் சிறுசிறு தடங்கல்கள் வந்து போகும். அதற்கான கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்து விடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கும்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

கன்னி
தொழிலில் உங்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெரும்புள்ளிகளிள்அறிமுகம் கிடைக்கும். திருமணத்துக்கான மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் சென்று முடியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அருகில் வசிப்பவர்கள் மூலம் அனுகூலங்களைப் பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீலமும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும் அதிர்ஷ்ட நாள் இன்றிலிருந்து தான் உங்களுக்குத் துவங்குகிறது. ஆனாலும் நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அதேபோல், வீட்டுக்கு புதிய நீ்ங்கள் எதிர்பாராத சொந்தங்கள் வந்து சேருவார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5ம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கும்.

விருச்சிகம்
இதுவரை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வீட்டில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கத் துணிவீர்கள். மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக இடர் சிவப்பும் இருக்கும்.

தனுசு
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வழியில் நடைபெறும் சுப காரியங்களுக்கு விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்
மனதில் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்து முடியும். தொழில் போட்டியை சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள். வீட்டில் குழந்தைகள் எண்ணம் அறிந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

கும்பம்
வீட்டில் பிள்ளைகளின் செயல்பாட்டினால் உங்களுக்கு லாபம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
வியாபாரிகளிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல்கள் உருவாகும். பெரியோர்களுடைய உபதேசங்களால் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











