Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
இந்த ராசிக்காரர் இன்னைக்கு பிரபலமான நபரை சந்திக்கப்போறாரு... நீங்களும் இதே ராசி தானா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடல்வழிப் பயணங்களால் வெற்றியும் லாபமும் ஏற்படும். உங்களுடைய சிந்தனையில் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வேலையில் உள்ளவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
இளைய உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எண்ணிய முயற்சிகளில் சில காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
பண வரவு உண்டாகும். அதனால் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களுடைய அறிமுகங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு கிடைககும். தாயிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும். .

கடகம்
குடும்பத்தில் கொஞ்சம் கலகலப்பான சூழல் உருவாகும். வீட்டில் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த தன லாபங்கள் உண்டாகும். பிரபலமானவர்களுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் புதுவிதமான திட்டங்களைத் தீட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்

சிம்மம்
பயணங்களின் மூலமாக உங்களுக்கு லாபம் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிகள் உங்களுக்குக் கிடைக்கும். வாரிசுகளுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
அரசு அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுகூலமாக நடந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய சொத்துக்கள் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

துலாம்
கௌரவப் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். சபைகளில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

விருச்சிகம்
பொருள் சேர்க்கைகள் உண்டாகும். திருமணத்துக்காக வரன் தேடுகிறவர்களுக்கு சாதகமான வரன்கள் அமையும். அரசாங்க அனுகூலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூா் பயணங்களால் எண்ணிய லாபங்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
புதிய முயற்சிகளால் எண்ணிய பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே சாதகமான சூழல்கள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உறவுகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
பெரியோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருத்தல் அவசியம். பிள்ளைகளின் வழியில், சுப செய்திகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளையும் இருக்கும்.

கும்பம்
நண்பர்களின் உதவியினால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். மனைவி வழியில் உள்ள உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். பொருள்களைக் கையாளும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
புதிய நபர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடைய உதவியால் புதிய தொழிலை மேற்கொள்வதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். உங்களுடைய செயல்பாடுகளில் ஏற்பட்ட மந்தத் தன்மையினால் காரியத் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்குக் கவனம் தேவை. அடிப்படை கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
