Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பொறந்தா இந்த ராசியில பொறக்கணும்... நினைக்கறிதெல்லாம் டான் டான்னு நடக்குமாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்குவதன் மூலமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவ்ஙக்ள உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. முயற்சிகளில் சின்ன சின்ன கால தாமதங்கள் உண்டாகும். உங்களுக்கு இன்று நல்ல மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

ரிஷபம்
நண்பர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருங்கள். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் வந்து போகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உங்களுடைய வேலையில் நீங்கள் எதிர்பாராத பணிமாற்றங்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் இருக்கும்.

மிதுனம்
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்குகளில் முக்கிய முடிவுகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அதற்கான வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் உண்டாகும். சகோதரர்கள் வழியில் உங்களுக்குச் சாதகமான உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

கடகம்
குடும்ப நபர்களுடைய எண்ணங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்படுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்களினால் பயணங்களால் உங்களுக்குச் செய்திகள் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய நீண்ட கால விருப்பங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். உங்களுடைய உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் இருக்கும்.

கன்னி
மனதுக்குள் இருந்து வந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய மனதுக்குத் திருப்தியான சூழல்கள் உண்டாம். புதிதாக உங்களுக்கு விருப்பமான சில பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற காரியங்களில் பதட்டம் ஏதும் இல்லாமல் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

துலாம்
குடும்பத்தில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசனைகள் செய்து உங்களுடைய பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய பேச்சுக்களின் ஆதரவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

விருச்சிகம்
கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இதுவரைக்கும் தடைபட்டு வந்த காரியங்கள் நினைத்தபடி முடிவடையும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய செயலுக்கு சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்குகின்ற பொஐது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் இருக்கும்.

தனுசு
மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சார்ந்த ரகசியங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். இதுவரையில் உங்களுக்கு நிலுவையில் இருக்கும் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்க வேண்டும். முக்கிய உத்தியோகத்தில் மற்றவர்களை எதிர்பார்க்காமல் பணிகளை நீங்களே செய்து முடிக்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

மகரம்
உங்களுடைய குடும்ப நபர்களின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு அரசு தொடர்பான காரியங்களில் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய செலவுகளைக் குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

கும்பம்
அரசாங்கத் தரப்பிடம் இருந்து உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரங்களில் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு ஏற்ற லாபங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு அனுபவ அறிபு மேம்படும். சின்ன சின்ன பயணங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல மாற்றமான சூழல்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுக்கான மதிப்புகள் உண்டாகும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பதவி உயர்வுகளும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் இருக்கும்.

மீனம்
வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய சக ஊழியர்களால் உங்களுக்கு மன வருத்தங்கள் உண்டாகலாம். மனதுக்குள் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் உங்களுக்கு மனதில் குழப்பமான சூழல்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாக அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.



Click it and Unblock the Notifications