Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
இன்னைக்கு அஷ்டலட்சுமிகள் எட்டு பேரும் வந்து ஒன்னா உட்காரப்போற ராசிகள் எதுனு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
வீட்டில் உள்ளவர்களிடம் தேவையில்லாத வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை எடுக்காமல் இருப்பது நல்லது. அப்படி இல்லையென்றால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். சண்டை சச்சரவுகள் வேண்டாம். புதிதாக தொழிலில் ஏதேனும் முயற்சிகள் எடுத்தால் அதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் நீங்கி, சுமூகமான உறவு உண்டாகும். பொது இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகின்றவர்குளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் ஆதரவு அதிகமாகவே இருக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளில் மூலம் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். வர்த்தகங்கள் தொடர்பான செயல்களால் பெரும் லாபம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேலையில் உள்ளவர்கள் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கால்நடைகளால் சின்ன சின்ன விரயச் செலவுகள் வந்து போகும். பயணங்கள் செய்கின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்
முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். வீட்டில் குழந்தைகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். வீட்டில் உள்ளவர்களிடம் தேவையில்லாமல விவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. பரம்பரை சொத்துக்களால் சின்ன சின்ன செலவுகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
விருந்து போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீங்கள் செய்யும் வாதத் திறமையால் நிறைய அனுகூலங்கள் உண்டாகும். உங்களுடைய பேச்சுத் திறமையால் எல்லுாரையும் எளிதாகக் கவர்ந்து விடுவீர்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். அரசுத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான காரியங்கள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
குட்டி குட்டி பயணங்கள் உங்களுடைய மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். முக்கியப் பொறுப்புகளில் இருக்கின்றவராக இருந்தால் உங்களுடைய நிர்வாகத் திறமையால் பாராட்டுக்கள் குவியும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள். நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும். மாணவர்களுடைய புத்திக்கூர்மை அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்கும் எண்ணமும் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இதனால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். கால்நடைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். புதிதாக நீங்கள் இறங்கும் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்கள் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு அணுசரணையாகவும் உதவியாகவும் இருப்பார்கள். உங்களுடைய பயணங்களால் தொழில் லாபம் உண்டாகும். நீங்கள் வேலை செய்கின்ற இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதை அடுத்தவர்களிடம் கொடுக்காமல் நீங்களாகவே செய்ய முயற்சி செய்யுங்கள். தேவையில்லாத வீண் அலைச்சலும் அதனால் உடல் சோர்வும் உண்டாகலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
நண்பர்குளுடைய ஒத்துழைப்பினால் தொழில் மிக அமோகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவினால் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடன் பிறந்த சகோதரர்கள் மூலமாக உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். வீட்டில் உள்ள குழந்தைகளின் ஆதரவினால் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக உங்களுக்குப் பெரும் லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவினால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்களுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு திடீரென்று பண யோகம் உண்டாகும். மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான எண்ணங்களும் முயற்சிகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
நீங்கள் செய்கின்ற தொழில்களால் பெரும் வெற்றி கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தும் புதிய யுக்திகளால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். பெற்றோர்களின் வழியில் உறவு மேம்பட ஆரம்பிக்கும். மள வருத்தங்கள் குறையும். தலைமைப் பொறுப்பு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications