Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
எப்பவும் கஷ்டத்தையே பார்த்துகிட்டு இருந்த உங்க ராசி தான் இன்னைக்கு அதிர்ஷ்டத்துக்கு அதிபதி
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா... அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்
வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது. மற்றவர்களுடைய செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் சம்பந்தப்பட்ட செயல்களில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்
நினைத்த காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். வேலையில் முனனேற்றத்துக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தேவையில்லாத வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய சாதுர்யமான திறமையான பேச்சுக்களின் மூலம் சில வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுக்கு இடையே கருத்து மோதல்க்ள வளர்த்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம். முக்கிய பொறுப்பில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்குத் தெரியாமல் பல்வேறு விமர்சனங்கள் எழும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் வீடே கலகலப்பாகிவிடும். வேலை சம்பந்தப்பட்ட புதுபு்புது முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வேலை சம்பந்தமாக ஆலோசனைகளைப் பெறுவீர்கள். செய்கின்ற செயல்களில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்
பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நண்பர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
வேலையில் கொஞ்சம் அலைச்சல்கள் இருக்கும். செய்கின்ற வேலையை கொஞ்சம் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள். கவனக் குறைவினால் சிறு சிறு அவமரியாதைகளும் தவறான பெயரும் கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

துலாம்
செய்யும் தொழிலில் இதுவரை இருந்து வந்த இழுபறி நிலை நீங்கி, சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கும். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். தொழிலில் வேலையாட்களின் மூலமாக உண்டான இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
புதிய அறிமுகம்இல்லாத நபர்கள் மூலம் லாபம் உண்டாகும். பணியில் உங்களுடைய பொறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். வியாபாரத்தில் உங்களுடைய முதலீடுகள் அதிகமாகும். அதற்கேற்ப லாபமும் உண்டாகும். நீங்கள் பணிக்கு சேர்க்கும் புதிய நபரின் ஆதரவினால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
மனதில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மீது இருந்து வந்த மனக்கசப்புகளட குறையும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மகரம்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கும் எதிர்பாராத உதவிகளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். வேலை சம்பந்தப்பட்ட முடிவுகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்
நீண்ட நாள் கழித்து நெருங்கிய உறவினர்களை சந்திப்பீர்கள். அதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களுடைய மதிப்புகள் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
பணியில் இதுவரை இருந்து வந்த தடைகள் முற்றிலுமாக விலகும். பொருளு் சேர்க்கைகள் உண்டாகும். பெற்றோர் வழி உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுப்புது யுக்திகளைக் கையாள்வீர்கள். லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மரியாதையும் செல்வாக்கும் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications