For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதனுக்கு திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்க்கலாம்?

|

பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று கட்டாயம் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு குழந்தை பிறக்கும்போது நாம் அடையும் சந்தோசம் ஒரு முதியவர் இறக்கும்போது இருப்பதில்லை. இறப்பு என்றாலே மனிதனுக்கு பயம் ஏற்படுகிறது. யார் எப்போது இறப்போம் என்பது தெரியாமல் இருக்கும்வரை வாழ்க்கையின் சுவாரஸ்யம் குறைவதில்லை.

ஆனால் இறப்பு குறித்த பயம் ஏற்படும்போது மனம் சமாதானம் கொள்வதும் இல்லை. குறிப்பாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்போது இறப்பு குறித்த பயம் தானாகவே தோன்றி விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுட்காலம்

ஆயுட்காலம்

இன்றைய காலகட்டத்தில் உடல்நிலை கோளாறு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. குறிப்பாக 10 வித நோய்கள் பரவலாக உலகம் முழுவதும் வியாபித்து இறப்பு குறித்த அச்சத்தைத் தோற்றுவித்து வருகிறது. என்னதான் இறப்பு என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அது வருவதற்கான வாய்ப்பைத் தள்ளிப் போட மனிதனால் முடியும். ஆகவே உங்கள் ஆயுட்காலத்தை அதிகமாக்கிக் கொள்ளும் சில வழிகள் குறித்து நாம் இங்கே காணவிருக்கிறோம். இறப்பிற்கான முக்கிய காரணங்களை அறிந்து கொள்வதன்மூலம் அவற்றைத் தடுத்து நமது ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்வோம் வாருங்கள்.

MOST READ: முந்திரியில் கொலஸ்ட்ரால் இருக்குதான்... ஆனா ஒரு நாளைக்கு எத்தனை வரை சாப்பிடலாம்?

வாதம்

வாதம்

ஒரே ஆண்டில் 135 ஆயிரம் மக்கள் பக்கவாத நோயால் இறக்கும் நிலை ஏற்படலாம். மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும்போது மூளை செல்கள் இறக்க நேரிடும் போது சிலருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. இன்னும் சிலபேருக்கு இரத்தக் குழாய்கள் முறிவடைவதால் பக்கவாதம் ஏற்படலாம். பக்கவாத நோயால் இறப்பு நிகழவில்லை என்றாலும், ஒருபக்க அல்லது முழுமையான உடல் செயல்பாடுகள் முடங்குவது, பேசும் திறனில் பாதிப்பு, அறிவாற்றல் பாதிப்பு போன்ற நிலை ஏற்படலாம்.

வாத நோய் பாதிப்பால் நீங்கள் அவதிப்படாமல் தடுக்க 7 அபாய காரணிகளை உங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். புகை பிடிப்பதை நிறுத்துவது, மிதமான அளவு மது அருந்துவது, அதிக உடல் எடையை தவிர்ப்பது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுபாட்டில் வைத்துக் கொள்வது, இரத்த அழுத்த நிலையை அடிக்கடி பரிசோதிப்பது, நீரிழிவு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆயுட்காலத்தை நீட்டிக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்தத்தில் பாக்டீரியா அளவு அதிகமாகும்போது ப்ளட் பாய்சனிங் அதாவது செப்டிகெமியா என்னும் நிலை வளர்ச்சி அடைகிறது. இந்த நிலை உண்டாகும்போது, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உறுப்பு செயலிழப்பு காரணமாக இறக்க நேரலாம். உடலின் எந்த ஒரு பகுதியிலும் வேர் தொற்று ஏற்படக் காரணமாக இருக்கும் செப்டிகெமியா பாதிப்பால் ஒரு ஆண்டில் 30,000 பேர் உயிரிழக்கும் நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது.

இந்த வகையான இறப்பைத் தடுக்க வேண்டும் என்றால், எந்த ஒரு கிருமி தொற்று பாதிப்பிற்கும் அதற்கேற்ற தடுப்பூசிகளை போட்டு பக்டீரியா தொற்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தற்போது எதாவது ஒரு தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ப்ளட் பாய்சனிங்ன் பொதுவான அறிகுறிகள் இருப்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வது அவசியம். இதன் அறிகுறிகள், நாடித் துடிப்பில் ஏற்ற இறக்கம், சிறுநீர் குறைபாடு, அதிகரித்த காய்ச்சல் போன்றவை ஆகும்.

அல்சைமர் பாதிப்பு

அல்சைமர் பாதிப்பு

வயது முதிர்ந்தவர்கள் இறப்பிற்கு பொதுவான காரணமாக பார்க்கப்படுவது அல்சைமர் நோய் பாதிப்பு. குறிப்பாக 60 வயதிற்கு மேலே இருக்கும் முதியவர்களை இந்த நோய் பாதிக்கிறது. இதன் முக்கிய அறிகுறிகள் ஞாபக மறதி, மொழி பற்றாக்குறை, குழப்பமான நினைவுகள், தன்னிச்சையாக முடிவெடுப்பதில் சிலநேரம் சிரமம் ஏற்படுவது போன்றவை ஆகும். உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதனை மேற்கொள்ள முடியும். உடல் அதிக எடையுடன் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.

சிறுநீரக கோளாறு

சிறுநீரக கோளாறு

இறப்பிற்கான முக்கிய காரணங்களில் சிறுநீரக கோளாறும் ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் எந்த வித கோளாறும் இறப்பிற்கு வழி வகுக்கலாம். ஒவ்வொரு வகை கோளாறுகளுக்கு தனிப்பட்ட முறையில் தீர்வுகள் எடுப்பதால் நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறையலாம். சிறுநீரக அழற்சி நீர்க்கட்டு ஏற்பட்டு, சிறுநீரகம் சேதமடைவதால், சிறுநீரகத்தில் புரத வளர்ச்சி உண்டாகிறது.

குறிப்பிட்ட வகை வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் நெஃப்ரோசிஸ் பாதிப்பு உண்டாவதை நாம் நினைவில் கொள்வது அவசியம். ஆகவே வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை மிதமான அளவு எடுத்துக் கொள்வதால், சிறுநீரக கோளாறு காரணமாக இறக்கும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

MOST READ: பெத்தவங்க பேரை நெஞ்சுல பச்சை குத்தின புள்ளைய பெற்றோரே அடிச்சு கொன்ன கொடூரம்...

இதய நோய்

இதய நோய்

ஒவ்வொரு வருடமும் 600,000 மக்கள் இதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று நோய்க்கட்டுபாட்டு மையம் 2011ம் ஆண்டு நடத்திய ஆய்வில் கண்டுப்பிடித்துள்ளது. கரோனரி தமனி நோய் என்பது பொதுவாக பலருக்கும் ஏற்படும் ஒரு நிலையாகும். இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய் அல்லது தமனிகள் குறுகி விடுவதால் உண்டாகும் நிலையை இது குறிக்கிறது. இதயத்தில் ஒரு வித அழுத்தம் ஏற்படுவது, மூச்சுத்திணறல் போன்றவை இதன் அறிகுறிகள்.

இதய நோய் பாதிப்பால் இறப்பதைத் தடுக்க, உங்கள் இரத்த அழுத்த நிலையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். நாற்பது வயதிற்கு பின் கொலஸ்ட்ரால் அளவைக் குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவற்றைப் பின்பற்றுவதால் இதய நோய் பாதிப்பைத் தடுக்க முடியும்.

சளிக்காய்ச்சல்

சளிக்காய்ச்சல்

வயது முதிர்ந்த நிலையிலும், மிக இளம் வயதிலும் ஃப்ளு என்னும் சளிக் காய்ச்சல் இறப்பிற்கு மிக முக்கிய காரணமாக அறியப்படுவது உங்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கலாம். இந்த அளவிற்கு காய்ச்சல் மிக முக்கியமான காரணமாக அறியப்படுவதற்குக் காரணம் நிமோனியா போன்ற வைரஸ் கிருமிகள். நிமோனியா என்பது ஒரு அழற்சி நிலையாகும். இது நுரையீரலை பாதிக்கிறது.

சுவாச மண்டல செயலிழப்பு காரணமாக இந்த நிலை இறப்பை உண்டாக்குகிறது. ஃப்ளு காய்ச்சல் காரணமாக இறப்பு உங்களை நெருங்காமல் இருக்க, நல்ல சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், ஃப்ளு பாதிப்பு உங்களைத் தாக்காமல் இருக்க வருடாந்திர தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது.

நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு என்பது இரத்த சர்க்கரை அளவில் அபாயகரமான உயர்வு ஏற்படும் நிலையாகும். இதன் காரணமாக இதய நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு இறப்பும் நிகழலாம். அதிகரித்த தாக உணர்வு, சோர்வு, அதிகமாக சிறுநீர் கழிப்பது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

நீங்கள் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் பாதிக்கபட்ட பெண்ணாக இருந்தால், இரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனை அடிக்கடி செய்து கொள்வது நல்லது. காரணம் இந்த நோயும் இன்சுலின் எதிர்ப்பு தன்மையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் நிலை உண்டாகும்.

நுரையீரல் அடைப்பு நோய்

நுரையீரல் அடைப்பு நோய்

நுரையீரல் அழற்சி மற்றும் திசுக்களில் காற்று பரவிய நிலை ஆகிய இரண்டும் ஒரு மனிதனுக்கு உண்டாகும் வேளையில் இந்த நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் வளர்ச்சி அடைகிறது. உயிர் கொல்லும் தன்மையுள்ள இந்த இரண்டு பாதிப்புகளும் நுரையீரலுக்கு செல்லும் காற்று அளவை தீவிரமாகக் குறைத்து, மூச்சுத்திணறலை உண்டாக்குகிறது.

இந்த நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் 90% பாதிக்கப்படக் காரணம் சிகரெட் புகைக்கும் பழக்கம். ஆகவே இந்த உயிர் கொல்லும் பாதிப்பைத் தடுத்து நீண்ட காலம் உயிர் வாழ, புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். செகண்ட் ஹன்ட் புகைப் பழக்கத்தை குறைத்துக் கொள்வதும் நன்மையைத் தரும்.

புற்றுநோய்

புற்றுநோய்

ஆண்களுக்கு ஆண்மைச் சுரப்பி புற்றுநோய் என்னும் ப்ரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை அதிகம் தாக்கும் அதே நேரத்தில் பெண்கள் பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்று நோய் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எல்லாவகைப் புற்று நோயிலும் நுரையீரல் புற்று நோய் மிகவும் கொடியது. இது பெரும்பாலும் இறப்பை சம்பவிக்கிறது. பல வழக்குகளில் புகை பிடிப்பது நுரையீரல் புற்று நோய்க்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

புற்றுநோயைப் பொறுத்தவரையில், இந்த நோயைக் கட்டுப்படுத்தவும் அதன் அபாயத்தைக் குறைக்கவும் பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளலாம். வழக்கமான உடற்பயிற்சி செய்வதாலும், காய்கறி பழங்கள் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கத்தைக் கடைபிடிப்பதாலும், புகை பிடிக்காமல் இருப்பதாலும், உடல் பருமனை எதிர்த்து போராடுவதாலும் புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும்.

MOST READ: ஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்... யார் அந்த சிறுமி?

தற்கொலை

தற்கொலை

நோய்க்கட்டுபாட்டு மையம், 2011 ம் ஆண்டு தற்கொலையும் இறப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்று துரதிர்ஷ்டவடமாக பட்டியலிட்டுள்ளது. நம்பிக்கை இன்மை மற்றும் மனச்சோர்வுடன் இருக்கும் நிலை வந்தால், உடனடியாக மற்றவரின் உதவியை நாடுங்கள். உங்கள் நிலையை மேம்படுத்த திறனுள்ள நிபுணர்கள் பலர் உங்கள் உதவிக்கு முன்வருவார்கள்.

மனச்சோர்வு தடுப்பு மருந்துகள், கவுன்சிலிங், அறிவாற்றல் மற்றும் நடத்தை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சை மூலம் உங்கள் மன நலத்தில் முன்னேற்றம் உண்டாக்கி தற்கொலை எண்ணத்தை மாற்ற முயற்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Common Causes of Death And How to Prevent Them

You may fear dying in a plane crash or you might suffer from a paralyzing fear of poisonous snakes, but in truth you are much more likely to fall victim to one of ten widespread health problems. Although death is inevitable, there are plenty of things you can do in order to dramatically reduce your chances of dying from the leading causes of death.
Story first published: Tuesday, May 7, 2019, 16:52 [IST]
Desktop Bottom Promotion