Latest Updates
-
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
கடன் பிரச்சினை நீங்கி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது...!
க்ளீம் மந்திரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஆடம்பரத்தையும் கொண்டுவரும் ஒரு மந்திரமாகும்.
நமது சமூகத்தில் சுபகாரியங்களாக இருந்தாலும் சரி, துக்க காரியங்களாக இருந்தாலும் சரி மந்திரங்கள் இன்றி அவை முழுமை பெறுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு மந்திரங்களுக்கும் ஒரு அர்த்தமும், சக்தியும் உள்ளது. மந்திரங்கள் உடனடி பலனை அளிக்காவிட்டாலும் நம்பிக்கையுடன் குறிப்பட்ட நாட்கள் கூறிவரும் போது நிச்சயம் அது நீங்கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்கும்.

க்ளீம் மந்திரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஆடம்பரத்தையும் கொண்டுவரும் ஒரு மந்திரமாகும். இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறும்போது அது ஒருவர் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உண்டாக்கும். அது மட்டுமின்றி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த மந்திரம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. இந்த பதிவில் க்ளீம் மந்திரத்தின் பல்வேறு பயன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

க்ளீம் மந்திரத்தின் பொருள்
க்ளீம் என்பது கா, லா, ஈ மற்றும் ம் ஆகியவற்றின் தொகுப்பாகும். கா என்பது காரணத்தையும், லா என்பது மொத்த உடலின் வெளிபாட்டையும், ஈ என்பது சாதாரண உடலையும், அனுஸ்வரமான ம் என்பது முழுமையையும் குறிப்பதாகும். எனவே க்ளீம் என்பது சாதாரண உடலையும், மொத்த உடலையும் முழுமையடைய செய்வதாகும். க்ளீம் என்பதன் பொருள் மகாகாளி என்பதாகும்.

க்ளீம் மந்திரம்
" ஓம் எய்ம் ஹ்ரீம் க்ளீம் சாமுண்டாயே விச்சே " இதுதான் முழுமையான க்ளீம் மந்திரமாகும். மந்திரத்தின் பொருள் என்னவெனில் துர்கையை வணங்குவதன் மூலம் அனைத்து விதமான சூனியங்களில் இருந்து விடுபடவும், துரதிர்ஷ்டத்தை விரட்டவும், கிரகக்கோளாறுகளால் ஏற்படும் பிரச்சினை, ஆரோக்கிய கோளாறுகள் மற்றும் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் என அனைத்திலும் காப்பாய் என்பதாகும்.

க்ளீம் மந்திர பயன்கள்
இந்த மந்திரத்தின் முக்கிய பலன் உறவுகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவதாகும். சிலர் உறவுகளில் அன்பை வளர்க்க கடவுளை வணங்குவது தேவையற்றது என்று கூறுவார்கள். ஆனால் பழங்காலம் முதலே உறவுப்பிரச்சினைகளுக்கு கடவுளை வணங்குவது வழக்கமாகத்தான் இருந்துள்ளது. தினமும் 100 முறை இந்த மந்திரத்தை கூறுவது அனைத்து விதமான உறவு பிரச்சினைகளையும் தீர்க்கும்.

செல்வத்தை ஈர்க்க
க்ளீம் மந்திரம் ஒருவரின் தேவைக்கான செல்வத்தை வழங்கும் என்று வேதங்கள் கூறுகிறது. க்ளீம் மந்திரம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வெகுமதிகளை வழங்கக்கூடும். இந்த பலனை பெற தினமும் 105 முறை இந்த மந்திரத்தை கூறவேண்டும்.

அடையாளம்
க்ளீம் என்னும் சத்தமானது ஒருவரின் தனிப்பட்ட ஆசை மற்றும் இயக்கத்தை கிருஷ்ணரை நோக்கி அழைத்துச்செல்ல கூடியதாகும். பிறப்பு, இறப்பு மற்றும் வயதாகுதல் போன்ற மனித வாழ்க்கையின் சுழற்சிகளில் இருந்து மனிதர்கள் விடுதலை அடைய இதுதான் தொடக்கப்புள்ளி என்று கூறப்படுகிறது.

தடைகளை மீறுதல்
க்ளீம் மந்திரத்தை பயன்படுத்தும் போது நீங்கள் சிறந்த நிலையை அடைய விடாமல் தடுப்பது எது என்பதை நீங்கள் உணருவீர்கள். இது பொதுவாக மிகவும் சவாலானதாக இருக்கும். ஆனால் க்ளீம் மந்திரம் நன்றாக வேலை செய்கிறது என்பதை இது உணர்த்தும்.

ஆரோக்கியம்
க்ளீம் மந்திரத்தின் செயல்திறன் அதிகமாக இருக்கும்போது உங்களின் வாழ்க்கை தேவை பணம் மட்டுமே அல்ல என்பதை நீங்கள் உணருவீர்கள். இந்த மந்திரத்தை பயன்படுத்துவது உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும்.

காதல் வெற்றி
இந்த மந்திரத்தை 105 முறை என தினமும் இரண்டு முறை கூறும்போது அது உங்களை விரும்பும் பெண்ணை உங்களை நோக்கி அழைத்துவரும். பொதுவாக இதனை காலையும், மாலையும் செய்வது நல்லது. ஒருவர் இந்த மந்திரத்தில் நிபுணத்துவத்தை அடைந்தால் எந்த பாலினத்தவரையும் தன்னை நோக்கி ஈர்க்க இயலும்.



Click it and Unblock the Notifications