For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா?

கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தாலே அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல. பிரபல நம்பிக்கைகளின் படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்

|

இந்து வேத சாஸ்திரங்களின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என தனி பண்புகள் உள்ளது. இதில் சில நட்சத்திரங்கள் அதிர்ஷ்டமானதாகவும், சில நட்சத்திரங்கள் அதிர்ஷ்டம் குறைவானதாகவும், சில நட்சத்திரங்கள் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டமானதாகவும் கருதப்படுகிறது.

Are individuals born in the Gandhamool Nakshatra unlucky in life

நட்சத்திரங்களில் 6 நட்சத்திரங்கள் மட்டும் இரண்டு குறியீட்டுகளுடன் இருப்பதாக நம்பப்படுகிறது, அவை இரண்டும் கேது மற்றும் புதனுடன் தொடர்புடையவை அதாவது கேது நட்சத்திரத்தில் முடிவடைந்து புதன் நட்சத்திரத்தில் தொடங்கும். இந்த நிலை கந்தமூல நட்சத்திரம் என்று அழைக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் அதிர்ஷ்டமில்லாதவர்களா?

நீங்கள் அதிர்ஷ்டமில்லாதவர்களா?

கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தாலே அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல. பிரபல நம்பிக்கைகளின் படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். ஆனால் இந்த கருத்து உண்மையல்ல.

கந்தமூல நட்சத்திரம் எப்படி பாதிக்கும்?

கந்தமூல நட்சத்திரம் எப்படி பாதிக்கும்?

கந்தமூல நட்சத்திரம் ஒவ்வொரு காலநிலைக்கும் ஒவ்வொரு பலனை உண்டாக்கும். அதன் அமைப்புகளையும் , விளைவுகளையும் மேற்கொண்டு பார்க்கலாம்.

கந்தமூல நட்சத்திரத்தின் எண்ணிக்கைகள்

கந்தமூல நட்சத்திரத்தின் எண்ணிக்கைகள்

இரண்டு அடையாளங்கள் ஒன்றிணையும்போது மட்டுமே கந்தமூல நட்சத்திரம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இவை ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். உதாரணத்திற்கு பிரம்ம முகூர்த்தம் கந்தமூல நட்சத்திரம் உருவாகும் நேரமாகும். பகல் நேரத்தில் இது உருவாகும் நேரம் கோதுளி என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நேரமும் ஒரு நாளின் மிகவும் முக்கியமான நேரமாகும். இந்த நேரத்தில் கடவுளை வழிபடுவது நல்ல பலன்களை அளிக்கும்.

MOST READ: உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா?

கேது மற்றும் புதனின் கந்தமூலம்

கேது மற்றும் புதனின் கந்தமூலம்

இந்து வேதங்களின் படி மொத்தம் 6 நட்சத்திரங்கள் கந்தமூல நட்சத்திரமாக அறியப்படுகிறது. இந்த இரண்டும் கேது மற்றும் புதன் பகுதிகளாக அறியப்படுகிறது. கேதுவில் இருக்கும் கந்தமூல நட்சத்திரங்கள் எவையெனில் மூலம், மகம் மற்றும் அஸ்வினி.

 குழந்தை கேது கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தால்

குழந்தை கேது கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தால்

ஒருவேளை கேது கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தால், தந்தை 27 நாட்களுக்கு குழந்தையின் முன்னால் வரக்கூடாது, கந்தமூல சாந்தி பூஜை செய்த பிறகே குழந்தையை பார்க்க வேண்டும். 27 நாட்களுக்கு பிறகு சந்திரன் அதே நட்சத்திரத்தில் வரும்போது இந்த பூஜையை செய்ய வேண்டும்.

குழந்தை புதன் கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தால்

குழந்தை புதன் கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தால்

புதன் கந்தமூல நட்சத்திரத்தின் இரண்டாம் பகுதி மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது. அவை ரேவதி, ஆயில்யம் மற்றும் கேட்டை ஆகும். ஒருவேளை குழந்தை புதன் கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்தால் சாந்தி பூஜையானது 10 வது அல்லது 19 வது நாளில் செய்யப்பட வேண்டும்.

கேது கந்தமூலத்தில் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை

கேது கந்தமூலத்தில் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை

அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில் 0 முதல் 13 டிகிரியில் 20 நிமிடம் இருக்கும். சந்திரன் இந்த கோணங்களுக்கு இடையில் இருக்கும்போது குழந்தை பிறந்தால் அந்த குழந்தை கந்தமூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை என்று அழைக்கப்படும்.

MOST READ: இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா?

தந்தைக்கு ஆபத்து

தந்தைக்கு ஆபத்து

குழந்தை அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பகுதியில் பிறந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல தடைகள் இருக்கும். ஏனெனில் இந்த நிலை கடந்த ஜென்மத்தின் தவறுகளுக்கு தண்டனை வழங்கும் காலமாகும். இதனால் அவர்களின் தந்தைக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் இது முழுவதும் தீயதல்ல. ஜாதகத்தின் கிரக நிலைகளை நன்கு ஆராய வேண்டும்.

அஸ்வினி கந்தமூலத்தின் அடுத்த நிலைகள்

அஸ்வினி கந்தமூலத்தின் அடுத்த நிலைகள்

ஒருவேளை குழந்தை கந்தமூல நட்சத்திரத்தின் இரண்டாவது நிலையில் பிறந்தால் அது மிகவும் அதிர்ஷ்டமானதாகும் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். ஒருவேளை குழந்தை மூன்றாவது நிலையில் பிறந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். அதிக பயணம் செய்யும் வாய்ப்பும், அதிக நண்பர்களும் இருப்பார்கள்.

அஸ்வினி கந்தமூலத்தின் நான்காவது நிலை

அஸ்வினி கந்தமூலத்தின் நான்காவது நிலை

ஒருவேளை கந்தமூல நட்சத்திரத்தின் நான்காவது நிலையில் குழந்தை பிறந்தால் அவர்கள் அடிக்கடி சிறிய ஆரோக்கிய பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். ஆனால் அரசாங்கத்தில் இருந்து மரியாதையையும், பரிசையும் பெறுவார்கள்.

மக நட்சத்திர கந்தமூல நட்சத்திரம்

மக நட்சத்திர கந்தமூல நட்சத்திரம்

மக நட்சத்திரம் சிம்ம ராசியின் தொடக்கமாகும். சந்திரன் 0 முதல் 13 டிகிரி கோணத்தில் 20 நிமிடங்கள் இருக்கும்போது கந்தமூல நட்சத்திரம் உருவாகும். ஒருவேளை குழந்தை மக கந்தமூல நட்சத்திரத்தின் முதல் நிலையில் பிறந்தால் அது குழந்தையின் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒருவேளை இரண்டாவது நிலையில் அது பிறந்தால் அது தந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

MOST READ: சாப்பிடும் உணவின் அளவை குறைத்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளதா? உண்மை என்ன தெரியுமா?

அடுத்த நிலைகள்

அடுத்த நிலைகள்

மக கந்தமூல நட்சத்திரத்தின் மூன்றாவது நிலைகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். நான்காவது நிலையில் பிறந்தவர்கள் அனைத்து சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் கல்வி இவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are individuals born in the Gandhamool Nakshatra unlucky in life?

Accoding to Hindu mythology people who born in these Nakshatra will face many problems in life.
Story first published: Wednesday, May 22, 2019, 15:37 [IST]
Desktop Bottom Promotion