For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட! இதுதான் நம்ம சென்றாயன் குழந்தையா? முதல்முறை வைரலாகும் புகைப்படம் இதோ...

By Mahibala
|

தமிழில் நிறைய படங்களில் நனைச்சுவை நடிகராகவும் துணைக் கதாபாத்திரங்களாகவும் சென்றாயன் நடித்திருந்தாலும் கூட, பிக்பாஸ் 2 வில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பின்புதான் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆனார் சென்றாயன் என்று தான் சொல்ல வேண்டும்.

sendrayan

அவருக்கு சமீபத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பாக குழந்தை பிறந்திருக்கிறது. அவர் எவ்வளவு மகிழ்ந்திருக்கிறார் என்றும் அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்தது

பிறந்தது

சென்றாயன் பிறந்தது தேனி மாவட்டம் நாயக்கனூர். 1983 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவருடைய மனைவியின் பெயர் கயல்விழி. பிக்பாஸில் இவர் பிரபலமடைந்தாரோ இல்லையோ பாலாஜியின் குழந்தை போஷிகா பெயரும் சென்றாயன் மனைவி கயல்விழியின் பெயரும் மிகப் பிரபலம்.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?

திரைப்பட நுழைவு

திரைப்பட நுழைவு

2007 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அச்சச்சோ என்னும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அவருக்கு இயக்குநர் வெற்றிமாறன் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் பெரிதாக ஹிட் ஆகவே சென்றாயனுக்கு சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ரௌடி கும்பல் மாணவனாக வலம் வருவார். அதைத் தொடர்ந்து படங்கள் கொஞ்சம் குறையத் தொடங்கியது.

 வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

ஆனால் 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்தார். அதன்பின் வெற்றிப்படங்களான மூடர் கூடம் படத்தில் சென்றாயன் என்னும் பெயரிலேயே நடித்தார். அதன்பின் ரௌத்திரம், ரம்மி, பா பாண்டி, ஸ்பைடர், நிமிர், வடசென்னை என முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக வாய்ப்பு கிடைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் 2

பிக்பாஸ் 2

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மிகப்பெரிய ஹிட்டான ஷோ பிக்பாஸ். அது தமிழிலும் பெரிய அளவில் ரீச் ஆனது. வெளியில் தெரியாத பிரபலமாகாத நடிகர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்படி பிக்பாஸின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பிரபலமானவர் தான் சென்றாயன்.

MOST READ: வெறும் ஐஞ்சே நாள்ல உங்க மூட்டுவலியை விரட்டணுமா? இந்த ஜூஸ குடிங்க போதும்...

குழந்தை வருத்தம்

குழந்தை வருத்தம்

அந்த நிகழ்ச்சியில் திருமணம் 2014 ஆம் ஆண்டு நடந்தது. இன்னும் குழந்தை இல்லை என்ற வருத்தத்தால் கதறி கமலிடமே அழுதது நமக்குத் தெரியும். ஹோமில் இருநு்து குழந்தைகள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டு சென்றதும் எனக்கு குழந்தை பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் நான் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வேன் என்று கமலிடம் உறுதியும் கூறினார்.

கர்ப்பமான கயல்

கர்ப்பமான கயல்

இந்நிலையில் பேமலி ரவுண்டின் போது வீட்டுக்குள் வந்த கயல்விழி நீங்க அப்பா ஆகிட்டீங்க என்று சொன்னதும் சென்றாயன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது சமூக வலைத்தளங்களில் நிறைய விமர்சனங்களுக்கும் உள்ளானது.

மனைவியின் ஆசை

மனைவியின் ஆசை

சென்றாயனின் மனைவி கயல்விழி நடிகை சிநேகாவின் மிகப்பெரிய ரசிகை. அதனால் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, சிநேகாவிடம் நேரடியாக அழைத்துச் சென்று, சந்திக்க வைத்து மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறார் சென்றாயன்.

MOST READ: எப்பவும் பஞ்சமே வராம ஜாலியா இருக்கும் ரெண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்கதான்

அழகான ஆண் குழந்தை

அழகான ஆண் குழந்தை

இந்நிலையில தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார் சென்றாயன். சமீபத்தில் சென்றாயன் தன்னுடைய இரண்டு மாதக் குழந்தையை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் பதிவிடப்பட்டு, வைரலாகி வருகிறது. குழந்தை மாநிறத்துடன் அழகாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

actor sendrayan's new baby photo viral on social media

Sendrayan is an Indian film actor who has predominantly worked in Tamil language films. After making his acting debut in Vetrimaaran's Polladhavan (2007), he appeared in other small roles before winning acclaim for his portrayal of a petty criminal in Moodar Koodam (2013). He has since appeared in antagonistic and comedic roles in films, including Puthiya Niyamam (2016) and Metro (2016). recently he blessed with boy child. that new baby photo viral on social media.
Story first published: Monday, May 6, 2019, 17:11 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more