Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
இன்னைக்கு அப்படி என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கணுமா? இதோ உங்களுக்காக...
ஜோதிட சாஸ்திரங்களின் படி இன்றைய நேரங்கள், விசேஷங்கள், இன்றைய தின சிறப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்படுகிறது. இன்றைய நல்ல நேரம், கெட்ட நேரம் தொடங்கி, மற்ற பல விஷயங்களையும் கொண்ட தொகுப்பு தான் இ
14.05.19 ஆம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்றைக்கு அப்படி என்ன ஸ்பெஷல் தினம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒரு நாளைக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவதற்காகத் தான் நிறைய பேர் அன்றைய ராசி பலன்களையும் நாளின் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதுண்டு. அப்படி இருக்கையில் இன்னைக்கு என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் இருக்குன்னு நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா?

அப்படி இன்றைக்கு என்னென்ன விஷயங்களில் எல்லாம் சிறப்பு என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் விவரமாக பார்க்கலாம்.

நல்ல நேரம்
இன்றைக்கு நல்ல நேரம் காலை 7.30 மணி முதல் 8.30 வரை. அதைவிட்டால் மாலையில் 4.30 மணி முதல் 5.30 மணி வரை.
கொளரி நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11.30 வரை, மாலையில் 7.30 முதல் 8.30 வரையில்

ராகு காலம்
இன்றைக்கு ராகு காலம் என்பது மாலை 3 மணி முதல் 4.30 மணி வரைக்கும் நடக்கிறது. அந்த நேரத்தில் எந்த முக்கியமான சுப காரியங்களும் செய்யாமல் இருப்பது தான் நல்லது.

மற்றவை
குளிகை காலம் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
திதி - மதியம் 12 மணி வரை தசமியும் அதற்குப் பிறகு பிற்பகலில் ஏகாதசியும் நடக்கும்.
யோகங்கள் - சித்த யோகமும் அமிர்த யோகமும் இன்றைக்கு கூடி வருகிறது.
நட்சத்திரம் - காலை 8 மணி வரைக்கும் பூரம் நட்சத்திரமும் அதன்பிறகு உத்திர நட்சத்திரமும் வருகிறது.

சூலமும் பரிகாரமும்
இன்றைக்கு வடக்கு திசையில் தான் சூலம். வடக்கு சூலத்துக்குப் பரிகாரமாக இருக்கப் போவது பால்.

முக்கிய பண்டிகைகள்
இன்றைக்கு எந்தெந்த கடவுளுக்கு முக்கிய பண்டிகைகள் என்று பார்க்கலாம்.
காரைக்குடியில் உள்ள ஸ்ரீகொப்புடைநாயகியம்மன் உற்சவத் திருவிழா இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.
வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா இன்று நடக்கிறது. அதேபோல் குரங்கணியில் உள்ள முத்துமாலையம்மனுக்கும் இன்று உலா பவனி செய்வார்கள்.
காளையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் சமணர்களைக் கழுவிலேற்றும் விழா என்று எடுக்கப்படும்.

எந்த தெய்வத்தை வழிபடலாம்?
இன்றைக்கு முருகப் பெருமானை வழிபடுவது மிகச் சிறப்பு. உங்களுடைய பாவங்கள், வினைகள் அத்தனையையும் தீர்க்கும். இன்று ஸ்ரீவாசவி ஜெயந்தி என்பதால் விரதங்கள் இருப்பது மிகச் சிறப்பு.

என்ன செய்யலாம்?
இன்று நீர்நிலைகள் அமைப்பதற்கு மிகச் சிறந்த நாள்.
அறுவடை செய்யாமல் விட்டு வைத்திருந்தால் இன்று அறுவடை செய்யலாம்.
கடவுளுக்கு அபிஷேகங்கள் செய்வதற்கு உகந்த நாள்.
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்வதற்கு ஏற்ற சிறந்த நாளாக இன்று இருக்கும்.

யாருக்கு பிறந்த நாள்
இதெல்லாம் விடுங்க. இன்னைக்கு ஒரு முக்கியமான ஆளுக்கு பிறந்தநாள். நம்மோட பிறந்த நாளை நம்ம ஃபிரண்ட்ஸ்க்கு ஞாபகப்படுத்தி நமக்கெல்லாம் சர்ப்பிரைஸ் கொடுக்கிற பேஸ்புக்கை உருவாக்கின மார்க் சுகர்பெர்க்குக்கு இன்னைக்கு தான் பொறந்த நாள்.



Click it and Unblock the Notifications