Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
உங்கள் ராசிப்படி எந்த ராசிக்காரை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை நரகமாகும்
திருமணம் என்று வரும்போது ஒருவரின் ராசி மிகமுக்கியபங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு பொருத்தமான ராசி என்று ஒன்று கணிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு எதிற்மறையான பண்புகள் கொண்ட ர
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது மூத்தோர் வாக்கு. ஆணோ, பெண்ணோ ஒருவர் பிறக்கும்போதே அவர்களுக்கான திருமண பலனும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது. இதற்கு காரணம் அவர்களின் ஜாதகமும், திருமண கட்டமும்தான். ஜோதிடசாஸ்திரத்தின் படி ஒவ்வொருவரின் திருமண பொருத்தமும் அவர்களின் ஜாதகப்படி கணிக்கப்படுகிறது.

திருமணம் என்று வரும்போது ஒருவரின் ராசி மிகமுக்கியபங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு பொருத்தமான ராசி என்று ஒன்று கணிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு எதிற்மறையான பண்புகள் கொண்ட ராசியும் கணிக்கப்படுகிறது. எந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை நரகமாகும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியமான, சுதந்திரமான குணம் உடையவர்கள். எனவே உங்கள் வாழ்க்கையில் அதிகம் குறுக்கீடுகளை உங்களால் பொறுத்துக்கொள்ள இயலாது. உங்களுக்கு பொருந்தாத ராசி என்றால் அது ரிஷபம்தான். ஏனெனில் உங்களுக்கு உறவில் வேடிக்கையாக தோன்றும் பல விஷயங்கள் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். அவர்கள் உறவில் எங்கே இருக்கிறோம் என்று அறிந்துகொள்வதை அடிக்கடி அறிந்துகொள்ள விரும்புவார்கள். இது உங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தலாம். நீங்கள் தைரியமாக ஒரு முடிவு எடுக்கும்போது அவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். இது உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

ரிஷபம்
நீங்கள் உறுதியான, நேர்மையான அதேசமயம் நடைமுறை வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கு பொருந்தாத ராசி எனில் அது தனுசுதான். ஏனெனில் அவர்களை கையாளுவது உங்களுக்கு நெருப்பை கையாளுவது போன்று மிகக்கடினமான ஒன்றாகும். பூமியை போன்ற குணமுடைய உங்களிடம் அவர்கள் சில மூளை விளையாட்டுகளை விளையாடும்போது அது உங்களுக்கு சரியாக புரியாது. உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் சில விஷயங்களில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தாமல் இருப்பது உங்களை வருத்தமடைய செய்யலாம்.

மிதுனம்
நேர்மை மட்டுமின்றி மிதுன ராசிக்காரர்களின் இனிமையான குணமும் அவர்களை சிறப்பானவர்களாக மாற்றும். நீங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் உற்சாகமான செயல்களை செய்ய விரும்புவீர்கள். உங்களுக்கு பொருந்தாத ராசி மகரம் ஆகும். ஏனெனில் உங்கள் அளவிற்கு உங்கள் மகர ராசி துணை உற்சாகமாக இருக்கமாட்டார்கள். அவர்களின் அதீத நேர்மை சிலசமயம் உங்கள் பொறுமையை சோதிக்கும். நீங்கள் சிறகை விரித்து பறக்க நினைக்கும்போது அவர்கள் உங்களை பூமியை நோக்கி இழுப்பார்கள்.

கடகம்
நீங்கள் உணர்ச்சிகள் மிகுந்த, மற்றவர்கள் மீது அக்கறை படக்கூடியவர்கள். உங்களின் பொருந்தாத ராசி என்னவெனில் கும்பம்தான். அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களின் பணத்தை வைத்து வாங்கி மகிழ்ந்துகொள்வார்கள். சிலசமயம் உங்களுக்கு தேவைப்படாத போது கூட அவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அது கூட்டமாக இருக்கும் இடமாக இருந்தாலும் சரி. அவர்களின் அதீத சுந்தந்திர உணர்வு சிலசமயம் நீங்கள் அவர்களுக்கு முக்கியம் இல்லையோ என்ற உணர்வை உங்களுக்குள் எழச்செய்யும்.

சிம்மம்
திறமையான அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் மனதளவில் வலிமையானவராக இருந்தாலும் மற்றவர்கள் உங்களை தவறாக மதிப்பிடும்போது உடைந்துவிடுவீர்கள். உங்களுக்கு மிகவும் பொருந்தாத ராசி விருச்சிகம் ஆகும். அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று இருக்கும் அவர்களின் பிடிவாதம் உங்களை மிகவும் பாதிக்கும். அவர்களும் உங்களை போன்றே வேடிக்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் பாராட்டுக்கள் அவர்களிடம் இருந்து கிடைக்காது.

கன்னி
மற்றவர்கள் மீது அக்கறை மற்றும் உதவும் மனம் கொண்ட நீங்கள் செய்யும் அனைத்திலும் கலைநயம் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். உங்களின் பொருந்தாத ராசி தனுசு ஆகும். ஏனெனில் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் உங்களை வெறுப்படைய செய்யும். உங்களுடனான உறவில் அவர்கள் எப்பொழுதும் அரைமனதுடனேயே இருப்பார்கள். அவர்கள் உங்கள் உணர்ச்சிகள் மீதும், அவர்களின் செயல்கள் உங்களை எப்படி காயப்படுத்தும் என்பதையும் பற்றி கவலைப்படவே மாட்டார்கள்.

துலாம்
கவலையற்ற, நகைச்சுவை உணர்வு அதிகமுள்ள சமூகத்துடன் சேர்ந்து வாழ்பவர் நீங்கள். உங்களுக்கு ஒத்துவராத ராசி கன்னிதான். சிலசமயம் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் உங்களை சலிப்புற செய்யும். உங்களின் வேடிக்கையான குணத்திற்கு அவர்கள் ஒத்துவரமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் சரியாகவும், நடைமுறை வாழ்வுடன் ஒத்து வாழ்பவர்களாகவும் இருப்பது வேடிக்கையை விரும்பும் உங்களுக்கு சிலசமயம் பிடிக்காமல் போகலாம். குறிப்பாக அவர்களின் சந்தேக குணம் உங்களுக்கு சாதகமாக அமையாது.

விருச்சிகம்
உங்கள் நம்பகத்தன்மை உங்களுக்கு சிறந்த நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் உங்களின் பொருந்தாத ராசி என்னவெனில் மேஷம். நீங்கள் அழகிய, மென்மையான உறவை விரும்பும்போது அவர்கள் அதில் உற்சாகமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் அவர்கள் விருப்பப்படியே உறவில் இருக்க விரும்புவார்கள். அவர்கள் உங்களுக்கு சிறந்த நண்பர்களாகவோ, தொழிலில் பங்குதாரராகவோ இருக்கலாமே தவிர வாழ்க்கைத்துணையாக இருக்க இயலாது.

தனுசு
அதிக ஆற்றலும், உற்சாகமும் மிக்கவர் நீங்கள். மிகவும் நேர்மறையான எண்ணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு பொருந்தாத ராசி ரிஷபம் ஆகும். அவர்களின் வாழ்க்கைமுறை எப்பொழுதும் பிஸியாக இருப்பதால் அவர்களை அணுகுவது சிரமமான ஒன்று. இது உங்கள் உற்சாகத்தை குறைக்கும். நீங்கள் வேடிக்கையான முடிவை எடுக்க நினைக்கும்போதெல்லாம் அவர்கள் அதை மிகவும் தீவிரமாக எண்ண தொடங்கிவிடுவார்கள். உங்களின் தொடர்ச்சியான மாற்றங்களை அவர்களால் சகித்துக்கொள்ள இயலாது. இதனால் உங்களுக்குள் பிரச்சினைகள்தான் எழும்.

மகரம்
உங்களின் ஆர்வம், நேர்மை, தன்னம்பிக்கை போன்ற குணங்கள் உங்களின் துணை நீங்கள் விரும்பும் கனவை நினைவாக்க உறுதுணையாய் இருக்கவேண்டுமென விரும்புவார்கள்.உங்களுக்கு பொருந்தாத ராசி மிதுனம் ஆகும் ஏனெனில் உங்களுக்கு இடையில் புரிதல் ஏற்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. காலத்திற்கு ஏற்றது போல நீங்கள் மாறுவது போல அவர்களால் மாற்றிக்கொள்ள இயலாது. அவர்களை பொறுத்தவரை நீங்கள் மிகவும் போரான நபராக காட்சியளிப்பீர்கள்.

கும்பம்
உங்களுடைய நேர்மை மற்றும் விசுவாசத்தை மற்றவர்கள் பிரதிபலிக்காத போது உங்களால் அதனை தாங்கிக்கொள்ள இயலாது. இந்த வகையில் உங்களுக்கு மிகவும் பொருந்தாத ராசி என்னவெனில் கடகம் ஆகும். உங்களுடைய சுதந்திரமான எண்ணம் அவர்களை சிலசமயம் நீங்கள் தவிர்ப்பதாக எண்ண வைக்கலாம். அவர்கள் சீரான, வலிமையான உறவை வளர்க்க விரும்புவார்கள், ஆனால் நீங்கள் விளையாட்டுத்தனம் அதிகம் இருப்பவர்கள். இதுவே உங்களுக்குள் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

மீனம்
இயற்கையாகாவே காதல் உணர்வு அதிகம் உள்ள நீங்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். உங்களுக்கு பொருந்தாத ராசி கன்னி. ஏனெனில் நீங்கள் கனவுடனும், உணர்ச்சிபூர்வமாகவும் ஒரு விஷயத்தை அணுகும்போது அவர்கள் அதனை வெறும் நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து அணுகுவார்கள். உங்கள் இருவருக்கும் இடையேயான கண் தொடர்பு மிகவும் குறைவாக இருக்கும். அப்படியே இருந்தாலும் அது சண்டையில்தான் முடியும். அவர்களின் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலையை புரிந்துகொள்வது உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications