Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
12 ராசிகளில் மர்ம ஆன்மாக்கள் கொண்ட 5 ராசிகள் எவை தெரியுமா?
இங்கே 12 ராசிகளில் மர்மங்கள் நிறைந்த 5 ராசிக்காரர்கள் யார் என்பதையும் அவர்களுடைய குணங்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
சில நபர்களை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் புரிஞ்சுக்கவே முடியாது. எப்பொழுதும் மர்மங்கள் நிறைந்த ஆன்மாக்களாக, ஒரு புரியாத புதிராகவே இருப்பார்கள்.

அவர்களின் செயல்களும் எண்ணங்களும் எப்பொழுதும் மர்மமாகவே இருக்கும். எனவே இவர்களை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விட முடியாது.

12 ராசிகள்
ஆனால் இதைப் பற்றிய எல்லா புதிர்களுக்கும் நமது ஜோதிடம் விடையளிக்கிறது. ஒரு நபர் வித்தியாசமாக செயல்பட அவரது நட்சத்திரங்களும் ராசிகளும் துணைபுரிகின்றன என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர்களின் செயல்களில் ஏற்படும் தாக்கம் ஜோதிட கட்டங்களில் நிலையை பொருத்து மாறுகின்றன என்கின்றனர்.
இது குறித்து தான் இக்கட்டுரையில் நாம் பேச உள்ளோம். எளிதில் எடை போட முடியாமல் மர்மமாகவே இருக்கும் ராசிக்காரர்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை அவ்வளவு சீக்கிரம் எடை போட்டு விட முடியாது. வெறும் கண்களைக் கொண்டு அவர்களை கணித்து விட முடியாது. அவர்கள் நிறைய கவனிப்பார்கள், ஆனால் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். இவர்களை புரிந்து கொள்ள முடியாததற்கு முக்கிய காரணம் இவர்களின் புதிய எண்ணங்கள், புதிய சாகசங்கள் தான். தங்கள் பார்வையை புதிது புதிதாக மாற்றிக் கொண்டே இருப்பதால் இவர்கள் ஒரு புரியாத புதிராகவே காணப்படுவார்கள்.

கன்னி
கன்னி ராசி அன்பர்கள் வேடிக்கைகளை அதிகம் காதலிப்பவர்கள். குறும்புக்கும் சேட்டைக்கும் இவர்களிடத்து பஞ்சமே இருக்காது. மற்றவர்கள் அவர்களை பற்றி யூகிப்பது எல்லாம் பொய்யாகவே இருக்கும். ஏனெனில் இவர்களின் ஆளுமை திறனை அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு எளிய இதயத்தை கொண்ட மனிதனாக இவர்கள் காணப்பட்டாலும் உள்ளுக்குள் சொல்ல முடியாத உணர்வுகளை கொண்டு இருப்பார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தோல்வியை கண்டால் பயப்படுபவர்கள். இவர்களும் ஒரு மர்மமான ராசிக்காரர்கள் தான். அவர்களின் அடுத்த நகர்வு பற்றிய விவரங்களை எப்பொழுதும் ரகசியமாகவே வைத்து இருப்பார்கள். தங்கள் எதிரிகளிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்கள் யாரை வேண்டுமானாலும் நம்புபவராகவும் இருப்பார்கள். நிறைய பேர்கள் இவர்களை பற்றி புரிந்து கொண்டோம் என்று நினைத்தாலும் நடப்பது என்னவோ வேறொன்றாகவே இருக்கும். சில சமயங்களில் இவர்களது ஆளுமை செயல் காரணமாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் குறைவாக பேசக் கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆளுமை திறனும் மர்மமாகவே இருக்கும். இவர்களின் எதிர்காலம் பற்றிய விஷயங்கள் புரியாத புதிராகவே வைத்திருப்பார்கள். எல்லா கும்ப ராசிக்காரர்களும் மர்மமான நபர்கள் கிடையாது. சில நபர்கள் குறைந்த அளவு பேசுவதால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக காணப்படுவார்கள்.

மீனம்
மீன ராசி அன்பர்கள் மர்மமான ஆளுமையை கொண்ட நபர்கள். இவர்கள் சில நேரங்களில் தங்கள் சொந்த விருப்பங்களைக் கூட புரிந்து கொள்ள முடியாத நபராக இருப்பார்கள். எனவே எந்த ஒரு விஷயத்திலும் இவர்களைப் பற்றி யூகிக்கவே முடியாது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்த படியாக இந்த பட்டியலில் இருப்பவர்கள் இவர்கள்.



Click it and Unblock the Notifications
