அவதாரில் நாம் வாய் பிளந்து பார்த்த அதிசய மலைகள், உலகில் நிஜமாகவே சீனாவில் இருக்கின்றன!

Posted By:
Subscribe to Boldsky

அவதார் உலக ரசிகர்கள் அனைவரையும் திருப்திப் படுத்திய ஒரு படமாக விளங்குகிறது. இதற்கு ஒரே காரணம் அதனுள் இருந்த எண்ணிலடங்காத கற்பனைகளே. மேலும், மனிதர்கள், கலாச்சாரம், மொழி, மிதக்கும் மழைகள், ஒளிமிகுந்த மரம், மிருகங்கள் என அனைத்திலும் இயக்குனர் புகுத்தியிருந்த வித்தியாசம் அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டது.

அவதாரில் நாம் அனைவரும் வாய் பிளந்து ரசித்தவற்றில் ஒன்று தான் அந்த மிதக்கும் மலைகள். இவற்றை எல்லாம் பார்க்க வேண்டும் பண்டோராவுக்கு (Pandora) தான் போக வேண்டும் என்ற அவசியமில்லை. முக்கியமாக இந்த அதிசய மலைகளை காண வேண்டும் என்றால்.

ஏனெனில், சீனாவில் அவதாரில் நாம் ரசித்துப் பார்த்த அதிசய மழைகள் நிஜமாகவே இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாலெளூஜா மலை!

ஹாலெளூஜா மலை!

சீனாவில் இருக்கும் ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்காவில் (Zhangjiajie National Forest Park) நிஜமாகவே அமைந்திருக்கிறது அவதாரில் நாம் கண்ட ஹாலெளூஜா மலை. என்ன இது ஆகாயத்தில் மிதக்காமல், வானுயர்ந்த நிலையில் நின்றுக் கொண்டிருக்கிறது.

Image Source: wikipedia

1982!

1982!

ஆனால், இந்த ஹாலெளூஜா மலையானது உலகில் இயற்கையாக உருவான அதிசயம் அல்ல. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட அதிசயம் ஆகும். சீனாவின் ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்காவில் ஏறத்தாழ 3000 என்ற எண்ணிக்கையில் ஒவ்வொரு குன்றும் நூற அடிகளுக்கு மேல் வானுயர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு குன்றை சுற்றியும் செடிக்கொடிகள் முளைத்திருக்கின்றன (அமைத்துள்ளனர்).

இப்படி தூண்கள் போல மலைகளின் அமைப்பை கொண்டுவர பல ஆண்டுகள் பல ஆயிர மக்கள் கெமிக்கல் பயன்படுத்தி இந்த உருவைக் கொண்டுவந்ததாக அறியப்படுகிறது.

Image Source: wikipedia

தெற்கு ஆகாயக் குன்று!

தெற்கு ஆகாயக் குன்று!

ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்காவில் இருக்கும் இந்த ஹாலெளூஜா மலை குன்றுகளில் தெற்கு ஆகாயக் குன்று என பெயர் பெற்றிருக்கும் ஒரு குண்டு மட்டும் மிகவும் பிரபலமாகும். இதன் உயரமானது 3,554 அடி என கூறப்படுகிறது. அதாவது 78 பள்ளிப் பேருந்துகளை வரிசையாக நிறுத்தி வைத்தால், என்ன நீளம் வருமோ அவ்வளவு அடி.

Image Source: wikipedia

அவதார்!

அவதார்!

2010ம் ஆண்டு அவதார் வெளியான பிறகு, இந்த மலையின் பெயர் அவதார் ஹாலெளூஜா மலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு காரணம் உலக அளவில் அவதார் திரைப்படம் மக்கள் மத்தியில் பெற்ற பெரிய வரவேற்ப்பு தான். ஒருவேளை உங்களுக்கு பண்டோராவுக்கு சென்று வர வேண்டும் என்ற ஆசை இருந்தால்... நீங்கள் கொஞ்சம் செலவு செய்து சீனாவுக்கு சென்று இந்த மலைகளை பார்த்து வரலாம்.

சதிவேலை!

சதிவேலை!

மேலும், அவதார் படத்தில், பண்டோரா பகுதியில் இருக்கும் இயற்கை செல்வங்களை கடத்தி, பெரும் லாபம் ஈட்ட சதிவேலைகள் நடந்து வரும். நவி இன மக்களை அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல வைத்து, அந்த இடத்தை கைப்பற்ற வில்லன் குழு (மனிதர்கள்) திட்டமிடும்.

பயம்!

பயம்!

இந்த காட்சிகள் சீன அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது என்றும், இதே போல, நகர்ப்புற வளர்ச்சிக்காக உள்ளூரில் வசித்து வந்த பல சீனர்களை இடம் பெயர செய்தது சீன அரசு என்ற தகவலும் பரவலாக அறியப்படுகிறது. இதனால், சீனாவில் 2Dயில் 1628 திரைகளில் அவதார் ரிலீசான அவதார் படத்தை இரண்டே வாரங்களில் தூக்கிவிட்டதாம் சீனா.

ஆனால், அதற்குள் அவதார் சீனாவில் பெரும் ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் கண்ணாடி பாலம்!

உலகின் கண்ணாடி பாலம்!

அவதாரின் புகழும், அதன் மூலம் சீனாவின் ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்கா பெற்ற புகழும் ஒருசேர ஒரு அடையாளாமாக இருக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். உலகின் நீளமான கண்ணாடி பாலத்தை இந்த இடத்தில 2015ல் கட்டியது சீனா.

இது மிகவும் அபாயகரமானதாகவும், துணிகர செயலில் ஈடுப்படுபவர்கள் மட்டும் சென்று வரலாம் என கூறும்படியான இடமாகவும் மாறியிருக்கிறது இந்த கண்ணாடி பாலம்.

Image Source: english.gov.cn

முதல் தேசிய பூங்கா!

முதல் தேசிய பூங்கா!

ஸங்ஜியாஜி தேசிய வனப் பூங்கா தான் சீனாவின் முதல் தேசிய பூங்காவாகும். இதன் ஒட்டுமொத்த பரப்பளவு 11 ஆயிரம் ஏக்கர்ககளாகும். யுனெஸ்கோ அதிகாரப் பூர்வமாக இந்த இடத்தை உலகின் பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Image Source: chinadiscovery

லிப்ட்!

லிப்ட்!

பைலாங் எலிவேட்டர்கள் உதவியுடன் இந்த மலைகளின் மேல் பகுதிக்கும், கீழ் பகுதிக்கும் சென்று வர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த லிப்டின் உயரம் 1072 அடியாகும். இதை மக்களுக்காக கடந்த 2002ல் சீன அரசு திறந்து வைத்தது. இது தான் உலகின் உயரமான லிப்டும் கூட. இந்த லிப்டில் இருந்த மலையின் உயரத்தில் இருந்து அடிவாரத்திற்கு இரண்டே நிமிடத்தில் சென்றுவிடலாம். இந்த எலிவேட்டர்களின் சுற்றுப்புற பகுதி கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image Source: wikipedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zhangjiajie National Forest Park's Amazing Avatar Hallelujah Mountain!

Things Know About Zhangjiajie National Forest Park's Amazing Avatar Hallelujah Mountain!
Story first published: Wednesday, January 3, 2018, 17:30 [IST]