Latest Updates
-
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க -
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடுங்க.. -
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்!
12 ராசிகளில் இன்று புதன் உச்சம் பெற்ற ராசிகள் யார் யார்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் தீர்ந்து போகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வார்குள். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபடுவதன் மூலமாக, பல்வேறு பரிசுகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சுப செய்திகள் உங்களைத் தேடி வரும். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். வேலையில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் வந்து போகும். தாயின் வழியில் ஆதரவு பெருகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே உண்டாகும்.

மிதுனம்
நண்பர்களின் மூலமாக, தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதில் நிதானத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடன் கூடிப் பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்
உடன் பிறந்த சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுஞ்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய வாக்கு வன்மையினால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

சிம்மம்
அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கான முயற்சிகள் நிறைவேறும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும்.

கன்னி
நால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல் உருவுாகும். பெற்றோருடைய ஆதரவு கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்குள். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். புத்துணர்ச்சி அடைவீர்கள்.

துலாம்
தன்னம்பிக்கையுடன் எல்லா செயல்களையும் செய்வீர்கள். கடிதத்தின் மூலமாக அனுகூலமான பலன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் நலம் தேறுவதற்கான முயற்சிகள மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

விருச்சிகம்
உங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். உயர் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். அரசு அதிகாரிகளின் உதவியினால் உங்களுடைய செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு
சில நேரங்களில் மன அமைதியற்ற நிலைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடைய பிரச்னையில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். தேவையில்லாத அவப்பெயர் உண்டாகலாம். பொருள் சேர்க்கை கிடைக்க காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மகரம்
தொழிலில் போட்டிகள் பலமடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டில் உள்ளவர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் புதிய நபர்களுடைய நட்பு உருவாகும்.

கும்பம்
உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். பொது நலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளி நபர்களிடம் உங்களுடைய மதிப்பு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வந்து சேரும். பெற்றோருடைய பரம்பரை சொத்துக்களில் இருநு்து வந்த சிக்கல்கள் தீரும்.

மீனம்
வீட்டில் பிள்ளைகளுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த பணியை முழு மனதோடு செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத பண வரவுகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்குகள் படிப்படியாக உயர ஆரம்பிக்கும்.



Click it and Unblock the Notifications