எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி நடந்து கொண்டால் தன சுபிட்சம் உண்டாகும்?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahi Bala

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

your daily horoscope on September 17 th 2018

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் பிள்ளைகளுடைய ஆதரவு உங்கள் பக்கம் பெருகும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். வெகு நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களுடைய சந்திப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் உறவினர்களுடைய வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம்நிதானமாகவும் ஜாக்கிரதையாகவும் நடந்து கொள்ளுங்கள். தடைபட்டுக் கொண்டிருந்த செயல்களை இனிதே செய்து முடிப்பீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடி வரும். பொருளாதார நிலைகளை உயர்த்துவற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கைகள் அதிகரிக்கும். சாஸ்திரங்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். வேள்விகள் சம்பந்தப்பட்ட ஆன்மீகப் பணியில் ஈடுபடுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் புகழ் உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில்நீல நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

புனித யாத்திரைகள் செல்வதற்கான எண்ணங்கள் உண்டாகும். உபயோகம் இல்லாத தேவையில்லாத வீண் அலைச்சல்களைத் தவிர்த்துவிடுங்கள். சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். வியாபாரங்களில் கூடுதல் லாபங்கள் ஏற்படும். பங்குதாரர்களால் தொழிலில் அனுகூலங்கள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

உங்களுடைய தாய் வழியிலான உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களுடைய முயற்சிக்கு உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களுடைய ஆதரவும் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நட்பு வட்டம் விரிவடைந்து கொண்டே செல்லும். உங்களுடைய வீட்டை அழகுபடுத்துவதற்கான சாதகமான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்

சிம்மம்

சிம்மம்

மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வருவீர்கள். பொதுக்கூட்டங்களில் நீங்கள் பேசும் போது, நீங்கள் எதிர்பார்த்த முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கத் துணிவீர்கள். உடன் பிறந்த சகோதர,சகோதரிகளிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய திறமைக்கேற்ற பாராட்டுக்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். வெளியில் எடுத்துச் செல்லும் விலையுயர்ந்த பொருள்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வேலையிடத்தில் உங்களுக்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் பிறருடைய வேலையையும் சேர்த்து பார்க்கச் சொல்வார்கள். வியாபாரங்களில் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

துலாம்

துலாம்

வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சுக்களினால் நீங்கள் நினைத்த வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் தொழில் கூட்டாளிகளுக்கும் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக வெற்றிகரமாக அமையும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

குழந்தைகளுடைய செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நற்பெயர்கள் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடியே வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமையான பேச்சுக்களின் மூலமாக உங்களுடைய மதிப்பும் மரியாதையும் பொது இடத்தில் உயரும். புதிய சொத்து சேர்க்கைகள் உண்டாவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

தனுசு

தனுசு

இதுவரை இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பண வரவு உண்டாகும். உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். சுய தொழில்கள் செய்கின்றவர்குள் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மகரம்

மகரம்

மனம் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அழகு மற்றும் உடல் தோற்றப் பொலிவுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சிலர் உங்களைப் பற்றிய குறை கூறினாலும் கூட அதை பொிதாக்க வேண்டாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

உங்களுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற ஆரம்பிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் லாபங்கள் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். உறவினர்களுடைய வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வாகனங்கள் மூலமாக சிறுசிறு விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

மீனம்

மீனம்

தொழிலில் மேற்கொள்கின்ற புதிய முயற்சிகளில் யாவும் அதிக அளவு லாபங்களை ஏற்படுத்தும். வெகு நாட்களாக தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் செயல்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் இனம் புரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். குடும்பத்தில் இருப்பவர்களைக் கொஞ்சம் அனுசரித்து போவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது அலுவலகத்தில் வரும் சின்ன சின்ன விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion