Just In
- 1 hr ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 1 hr ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 2 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
- 3 hrs ago
சத்தான... கார்த்திகை பொரி உருண்டை
Don't Miss
- News
அட பார்ரா.. கைலாசா வெப்சைட்டை தினமும் 8 லட்சம் பேர் பார்க்கிறார்களாம்.. சர்வரே டவுன்..நித்தி சலிப்பு
- Automobiles
ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது
- Sports
ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது!
- Movies
'தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க' ரேஞ்சுக்கு கோபத்தில் கத்திய அப்பா.. பயத்தில் உறைந்த பிரபல நடிகை
- Finance
தங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..!
- Technology
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?
- Education
8-ம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு தான் பொன்னும் பொருளும் சேர்ந்துகிட்டே இருக்குமாமே...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
கால்நடைகளை அடிப்படையாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு எண்ணிய லாபங்கள் கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி, அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் பெருகும். வருமானம் அதிகரிக்கும். பெரியோர்களுடைய முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
MOST READ: ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

ரிஷபம்
உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்கள் உங்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய தேவையற்ற எண்ணங்களால் உங்களுடைய மனம் சஞ்சலப்படும். புதிதாகத் தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளினால் வெற்றி கிடைக்கும். தொழிலில் உங்களுடைய தேவையற்றப் பேச்சுக்களைத் தவிர்ப்பது தான் நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாம புதிய நபர்களின் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். ஆன்மீக ரீதியான புனித பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொது விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் நீலநிறமாகவும் இருக்கும்.

கடகம்
தொழிலில் உங்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெரும்புள்ளிகளிள்அறிமுகம் கிடைக்கும். திருமணத்துக்கான மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியில் சென்று முடியும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அருகில் வசிப்பவர்கள் மூலம் அனுகூலங்களைப் பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீலமும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும் அதிர்ஷ்ட நாள் இன்றிலிருந்து தான் உங்களுக்குத் துவங்குகிறது. ஆனாலும் நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். அதேபோல், வீட்டுக்கு புதிய நீ்ங்கள் எதிர்பாராத சொந்தங்கள் வந்து சேருவார்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். ஆணாக இருந்தால் பெண்ணின் மூலமாகவும் பெண்ணாக இருந்தால் ஆணின் மூலமும் ஆதாயங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் உங்களை நீங்களே புத்துணர்வாக வைத்துக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5ம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கும்.

கன்னி
இதுவரையில் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தடையாக இருந்து வந்த காரியங்கள் வெற்றிகரமான நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது அவசியம்.இதுவரையிலும் வசூல் ஆகாமல் நிலுவையில் இருந்துவந்த பணம் யாவும் வசூல் ஆகும். உங்களுடைய சாதுர்யமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக நீலநிறமும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.
MOST READ: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன?

துலாம்
நினைத்த காரியத்தை முடிப்பதற்குள் சிறுசிறு தடங்கல்கள் வந்து போகும். அதற்கான கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உண்டாகும் போட்டிகளையும் சமாளிக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கும்.

விருச்சிகம்
மனதில் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்து முடியும். தொழில் போட்டியை சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள். வீட்டில் குழந்தைகள் எண்ணம் அறிந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம்அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

தனுசு
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

மகரம்
இதுவரை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வீட்டில் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கத் துணிவீர்கள். மனதில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட நிறமாக இடர் சிவப்பும் இருக்கும்.

கும்பம்
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வழியில் நடைபெறும் சுப காரியங்களுக்கு விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். வாதத் திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழலும் லாபமும் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.
MOST READ: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா?

மீனம்
சாதுர்யமான வாக்குத் திறமையால் லாபத்தை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அதன்மூலம் சில எதிர்காலத் திட்டங்களை வகுக்க ஐடியாக்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்னியோன்யம் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷட திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நிறமாக அடர் சிவப்பும் இருக்கும்.