TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் பம்பர் பரிசு கூட விழ வாய்ப்பிருக்கு...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.
மேஷம்
வீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவுமு் உங்களுக்குக் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவுாகும். செய்கின்ற தொழிலில் கொஞ்சம் கூடுதல் பதவி உயர்வு கிடைக்கும். பொது சபைகளில் மற்றவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
MOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே
ரிஷபம்
திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். தொழிலில் பங்குதாரர்களுடைய ஒத்துழைப்பினால் முன்னேற்றம் உண்டாகும். முக்கிய உத்தியுாகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்கும். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் சாதகமான பலன்களை அடைவார்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். சின்ன பயணங்களின் மூலமாக உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.
மிதுனம்
புதிதாக அறிமுகம் ஆகிற நபர்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்களும் பிரச்சினைகளும் ஏற்படும். உங்களுடைய எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் மந்தத் தன்மை உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட வீண் அலைச்சல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.
கடகம்
வீட்டில் பிள்ளைகளின் வழியில் சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு நிர்வாகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். மனைகளால் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய பொதுநலத் தொண்டுகளில் உள்ளவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக அமையும். உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.
MOST READ: இன்றைக்கு பெரும் லாபமும் பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிற ராசி எது தெரியுமா?
சிம்மம்
நிர்வாகத் துறைகளில் இருக்கின்றவர்கள் மூலம் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வீட்டில் கணவன் மற்றும்மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில் பெரிய மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். கல்வி பயில்கின்றவர்கள் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.
கன்னி
முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். நண்பர்களுடனான பயணங்களினால் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். பணிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
துலாம்
வாடிக்கையாளர்களுடைய ஆதரவினால் உங்களுக்குப் பெரும் தனலாபம் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வீடு மற்றும் மனைகளின் மூலம் லாபங்கள் உண்டாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.
விருச்சிகம்
உடன் பிணபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. சந்திராஷ்டமம் நடப்பதால் நெருக்கமான நண்பர்களிடம் வீணாண விவாதங்களில் ஈடுபடாமல் இருங்கள். உறவினர்கள் பற்றிய கவலை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.
தனுசு
தொழிலில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு தொழிலில் மேன்மை உண்டாகும். வெளியிடங்களில் உண்டாகின்ற பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். நெருக்கமான உறவினர்களுக்கு இடையே இருந்த விரிசல்கள் சரியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காது சம்பந்தப்பட்ட உபாதைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
மகரம்
உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.
கும்பம்
உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரியும் சக ஊழியர்களுடைய ஆதரவு கிடைக்கும். மனதுக்குள் நினைத்த அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
MOST READ: உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா? அப்போ இத சாப்பிடுங்க...
மீனம்
அருள் தருகின்ற ஆன்மீக வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொது விவாதங்களில் கலந்து கொள்ளும் போது உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வீட்டில் பிள்ளைகளுடைய ஆதரவு அதிகரிக்கும். வெளியூா் பயணங்களின் பொழுது அனுகூலங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.