TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
திருவண்ணாமலை தீபம் ஏற்றியாச்சு... எந்தெந்த ராசிக்கு என்னென் நடக்கப் போகுது?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.
மேஷம்
உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களினால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் தூர தேசப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் ஏற்பட்ட சிக்கல்களைக் குறைக்க முற்படுவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. பணிகளில் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.
ரிஷபம்
தொழிலில் கூட்டாளிகளின் உதவியினால் உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இறைவழிபாட்டினால் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளைச் சரிசெய்வீர்கள். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.
மிதுனம்
உங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளால் பண லாபம் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் அமையும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் உங்களுக்கு சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். பதவி உயர்வினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
கடகம்
நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். பந்தயங்களில் ஈடுபடுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களின் மூலம் வீண் அலைச்சல்க்ள ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.
சிம்மம்
சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் வாய்ப்பு உண்டு. வேளாண்மைத் துறையில் உள்ளவர்களுக்கு தேக்க நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். நண்பர்கள் அதிகரிப்பார்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதம் உண்டாகும். பயணங்களின் மூலம் பெரும் லாபம் அடைவீர்கள். தொழிலில் புதிய இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணிப்பீர்கள். பெற்றோர்களின் வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
கன்னி
தந்தையின் வழி உறவினர்களிம் நிதானமாக நடந்து கொண்டு, கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ளவர்களின் மூலமான தேவையற்ற வீண் விரயச் செலவு ஏற்படும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். கடல் வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.
துலாம்
நீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். வெளியூருக்கு வேலை வாய்ப்புக்குச் செல்கின்றவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
விருச்சிகம்
பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உடன் பணிபுரிகிறவர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்ள நினைப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த இழுபறி நிலைகள் நீங்க ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.
MOST READ: கொதிக்க வைத்த நீரை ஆறியபின் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா? அப்படி செஞ்சா என்ன ஆகும்
தனுசு
அருள் தருகின்ற வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளுக்காக நன்கொடைகள் கொடுப்பது மனம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளி இடங்களுக்குச் செல்லும் பயணங்களால் அனுகூலமான செய்திக்ள வந்து சேரும். வேலையில் இருந்த மந்தத் தன்மை நீங்கும். போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான வெற்றி உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.
மகரம்
வழக்கத்தை விடவும் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆதரவினால் பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதுக்குள் ஓர் அனம் புரியாத உணர்வு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
கும்பம்
கால்நடைகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களுடைய வருகையின் மூலம் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏ்றபடும். செய்யும் வேலைகளில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.
மீனம்
விளையாட்டு வீரர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். விவாதங்களில் ஈடுபடுகின்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களில் இருந்து உங்களுக்குச் சாதகமான செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதுக்குள் புதுவிதமான புத்துணர்ச்சியுடன செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடம் பேசுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.