Latest Updates
-
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்..
இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறப் போகுதாம்... அது யார்னு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளில் முதன்மைப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்காள வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.

ரிஷபம்
வேலை சம்பந்தப்பட்ட அலைச்சல்களின் மூலமாக மேன்மைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத பண வரவின் மூலம் உங்களுடைய சேமிப்புகள் வெகுவாக உயர ஆரம்பிக்கும். உங்களுடைய தலைமை அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். தேவையில்லா வீண் செலவுகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிற பொழுது, உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமன பிரபலங்களின் அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். சுப செய்திக்ள வந்து சேரும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்
தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களுடைய எல்லா திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான களமும் வாய்ப்பும் உருவாகும். நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கைக்கு வந்து சேர காலதாமதம் ஏற்படும். எதிர்பாலினத்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
இன்று சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால் முக்கியமான ஆவணங்களைக் கையாளுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். மனதுக்குள் தேவையில்லாத எண்ணங்களும் பய உணர்வும் வந்து போகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசுகின்ற பொழுது, நிதானத்துடன் பேசுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய உறவினர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகளினால் திருப்தியான சூழல்கள் உருவாகும். கால்நடைகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்
வேலையில் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட்டு வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புதிதாக அணிகலன்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உருவாகும். வீடு மற்றும் மனை விருத்திக்கு ஏற்ப செயல்திட்டங்களை வகுப்பீர்கள். நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வரும். உங்களுடைய செயல்பாடுகளில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீடு மற்றும் மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழிலை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான போதுமான நிதி உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் பணிபுரியும் இடங்களில் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். பெற்றோர்கள் மற்றும் அவர்களுடைய உடல்நலம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பேசும்போது கொஞ்சம் கனிவுடன் பேசுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்
உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய பேச்சு மற்றும் வாதத் திறமையினால் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் மூலம் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கௌரவப் பதவிகளின் மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தேடல்கள் மனதில் ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.

கும்பம்
உங்கள் மனதில் நினைத்திருந்த நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். பயணங்களின் போது சி்ன்ன சின்ன தடைகள் நேரிடலாம். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே மனக்கசப்புகள் உண்டாகும். புதிதாக செய்யும் முதலீடுகளில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
சுயதொழில் தொடங்குவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையிடத்தில் உங்களுடைய உயர் அதிகாரியிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் காலதாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். அதை தவிர்த்துவிடுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











